இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, July 8, 2012



டெல்டா மாவட்ட செயற்குழுக்கூட்டம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று 07/07/2012 மதுக்கூர் சிவக்கொல்லை ஏ.கே.எஸ்.திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியின் தொடக்கமாக பொறுப்பாளர்களின் தன்மைகள் என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தப்பட்டது.


டெல்டா மாவட்ட செயற்குழுவின் அவசியத்தினைப்பற்றி சகோதரர் கே.ராவுத்தர்ஷா எடுத்துரைத்தார்.


மருத்துவ சேவையினைப்பற்றி (ஆம்புலன்ஸ்,இரத்த தானம்,கண்சிகிச்சைமுகாம்,மருத்துவ முகாம்) ஆகியவற்றினையும்,செயலாக்கத்தினைப்பற்றியும் மாநில மருத்துவ சேவை அணியின் செயலாளர் சகோதரர் கிஃதர் அவர்கள் கூறினார்.
மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்திட்டக்களை இரத்தின சுருக்கமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.அப்துல்சமது அவர்கள் தமுமுகவின் அவசியத்தையும்,அதன் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.


இறுதியாக மாநில தலைவர் மெளலவி ஜே.எஸ்.ரிபாய் அவர்கள்  பொறுப்பாளர்கள் இறையச்சத்துடன் தங்களின் பொறுப்புக்களை பேணவேண்டும் என்றும்,10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைக்கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டி பல்வேறு கட்ட வீரியமிக்க போரட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு மாவட்ட நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் மேலும் அமைப்பின் கட்டமைப்புகள் பற்றியும் சிறப்பான உரையினை வழங்கினார்.மதுக்கூர் தமுமுக நகர செயலாளர் எஸ்.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.எல்லா புகழும் அல்லாஹ்கே.



 நுழைவு வாயிலில் செயற்குழுக்கூட்டத்திற்கு வந்தவர்களின் விபரம் பதிவு செய்யப்படுகின்றது.
 தலைமை உரை சகோதரர் கே.ராவுத்தர்ஷா










 தங்களின் கருத்துக்களை பதிவு செய்யும் மாவட்ட நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா அவர்கள்
 மாநில மருத்துவசேவை அணி செயலாளர் கிஃதர் அவர்கள்
 மமக மாநிலபொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள்
 தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்கள்
 மாநில தலைவர் மெளலவி ஜே.எஸ்.ரிபாய் அவர்கள்





மதிய உணவு பரிமாறப்படுகின்றது



டெல்டா மாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.தமிழக அரசு முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஓதுக்கீட்டை 7 % உயர்த்தி தருமாறு இம்மண்ட செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
2.மத்திய அரசு,நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசில் கல்வி,வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10% சதவீதமும்,இதர சிறுபான்மையினருக்கு 15 % சதவீதமும் என இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
3.சச்சார் கமிட்டி பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
4.தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் எதிர்வரும் செப் 15 அன்று அண்ணா பிறந்த நாளையொட்டி பொதும்ன்னிப்பின் கீழ் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும்.
5.இலங்கை இரானுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்க கூடாது என மத்திய அரசை கேட்டுகொள்கின்றது.
6.தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடி,வேறு வழிகளில் வருமானத்தை உருவாக்க செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும்.
7.திருவாரூர் மாவட்ட காவல்துறை தமுமுகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
8.மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக  உள்ள அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் .
என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டெல்டா மாவட்ட செயற்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு பறிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மமக அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,நகர தலைவர் பெளசூல் ரஹமான்,தமுமுக நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,துணைச்செயலாளர் ராசிக்,பொருளாளர் ஹாஜா மைதீன்,ஹபிபுல்லா,நிஷார் அகமது,பொறியாளர் இலியாஸ்,மாணவர் இந்தியாவின் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனார். 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...