இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, July 26, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சிவக்கொல்லை (வெஸ்டன் ஸ்கூல் அருகில்) கருப்பூரார் வீட்டு A.M.முகம்மது மைதீன் அவர்களின் மனைவியும்,ரியாஸ்,ராஜிக் அகமது ஆகியோரின் தாயாருமான நஜீமா பேகம் அவர்கள் இன்ரு 26/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Friday, July 25, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 26
கேள்விகள்
1.தர்மம் செய்துவிட்டு சொல்லிக்காட்டுபவர்களுக்கு அல்லாஹ் கூறும் உதாரணம் என்ன ?

2.மன்னு ஸல்வா என்றால் என்ன ? அது யாருக்கு வழங்கப்பட்டது

3.எந்த நபிதோழருக்கு லம் யகுனில்லதின கஃபரூ என்று தொடங்கும் சூராவை ஓதி காட்டுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான்

(பிறை 26 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் அல்லாபிச்சை அவர்கள்)

Thursday, July 24, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 25

கேள்விகள்
1.மூன்று இரவுகள் மட்டும் பேச முடியாமல் இருந்த நபி யார் ?

2.மூஸா நபிக்கு அல்லாஹ் எத்தனை அத்தாட்சிக்களை கொடுத்து இருந்தான் ?

3.அபூதுராப் என்று அழைக்கப்பட்ட நபித்தோழர் யார் ?

(பிறை 25க்கான பரிசுக்களை வழங்குபவர் சகோதரர் N.M.S.அல்லாப்பிச்சை அவர்கள்)
ரமலான் பரிசுப்போட்டி பிறை 23 சரியான பதில்கள்

1.திருடினால் தண்டனை என்ன என்று அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனம் எழுதவும்.

5:38ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.


2.கியாத் நாளின் பெரிய அடையாளங்கள் எத்தனை ? அவை யாவை ?

மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
பத்து அடையாளங்கள் 

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ்மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
3.மீன் வயிற்றுக்குள் யூனூஸ் நபி (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன என்று அல்லாஹ் சொல்கின்றான்.

21:87(யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
சரியான பதில்களை 9 நபர்கள் எழுதி இருந்தார்கள் அவர்களின் சகோதரி Nawfa Refaideenஅவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.





ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள்

1.போர் முனையில் எவ்வாறு தொழவேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

4:102(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.



2.ஈஸா நபி (அலை) அவர்களின் உதாரணம் யாருடைய உதாரணம் போன்றது என அல்லாஹ் கூறுகின்றான்.

3:59நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது.


3.லைலத்துல் கத்ரில் என்ன துஆ ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை!
'
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
'
அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)
என்று கற்றுக் கொடுத்தார்கள்.'
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)


ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள் எழுதியவர்கள் மொத்தம் 14 நபர்கள்.அவர்களில் சகோதரர் பயாத் அகமது அவர்கள் பரிசுக்குரியவராக குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார்,

(பரிசுகளை வழங்குபவர்கள் சகோதரர் N.M.S.அல்லாபிச்சை அவர்கள்)
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


Wednesday, July 23, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 24
கேள்விகள்

1.போர் முனையில் எவ்வாறு தொழவேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

2.ஈஸா நபி (அலை) அவர்களின் உதாரணம் யாருடைய உதாரணம் போன்றது என அல்லாஹ் கூறுகின்றான்.

3.லைலத்துல் கத்ரில் என்ன துஆ ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

(பிறை 24 க்கான பரிசு வழங்குபர் சகோதரர் N.M.S.அல்லாப்பிச்சை அவர்கள்)

பிறை 23க்கான வெற்றியாளர் மாலை வெளியிடப்படும்....

Tuesday, July 22, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 23

1.திருடினால் தண்டனை என்ன என்று அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனம் எழுதவும்.

2.கியாத் நாளின் பெரிய அடையாளங்கள் எத்தனை ? அவை யாவை ?

3.மீன் வயிற்றுக்குள் யூனூஸ் நபி (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன என்று அல்லாஹ் சொல்கின்றான்.

(பிறை 23 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் முகம்மது தாஹா)


ரமலான் பிறை 22 சரியான பதில்கள் மற்றும் பரிசு வெல்பவர்.


1.மலையை எதற்காக படைத்ததாக அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
பூமிஉங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்((மலைகளை), நீங்கள்வழியறிவதற்காக பல பாதைகளை யும்நதிகளையும்பல அடையாளங் களையும் அவன்அமைத்தான்நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்(Al Quran 16 : 15 )
பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை (மலைகளை) ஏற்படுத்தினோம்.அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்
( Al Quran 21 :31 )

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்உங்களைச் சாய்த்துவிடாதிருக்க பூமியில் முளை களைப் போட்டான்.  அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான்வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம்அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும்முளைக்கச் செய்தோம்.(Al Quran 31 :10)


2.எந்த ஐந்து விஷயங்களை அல்லாஹ்வை தவிர வேறுயாரும் அறிய முடியாது என அல்லாஹ் கூறுகின்றான்.
நிச்சயமாக அந்த (கியாமநேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறதுஅவனேமழையையும் இறக்குகிறான்இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்.நாளை தினம் தாம் (செய்வதுசம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லைதான் எந்தபூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லைநிச்சயமாக அல்லாஹ்தான்நன்கறிபவன்நுட்பம் மிக்கவன்.(Al Quran 31:34)

3.ரமலானில் செய்யப்படும் உம்ரா எதற்கு நிகரானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 1863. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்:புகாரி
நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்" என்றார்கள். 

2409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நூல் :முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் உம்மு சினான் எனப்படும் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்" என்றார்கள். 


சரியான விடைகள் எழுதியவர்கள் 1.முகம்மது பாதில்,2.ஜியாவுல் ஹக்,3.முகம்மது சுல்தான்,4.செய்யது இப்ராகீம்,5.அஜீம் அகமது,6.நிஜாமுதீன் ஜமால்,7.அபு அப்துல்லா,8.அகமது அலி,9.ரைஸ் பின் ஜமால்,10.ரியாய்தீன்.இவர்களில் செய்யது இப்ராகீம் அவர்கள் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...