ரமலான் பரிசுப்போட்டி பிறை 10
1.நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் அதிகம் ஸதகா செய்தவர் யார் ?
ஜைனப் பின் த் ஜஹ்ஷ் Zaynab bint Jahsh (radi allahu anhu)
2. மீன் வயிற்றுக்குள் இருந்த நபி யார் ?
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். 21:87
3.ரூஹூல் அமீன் என்றால் யார் ?
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.26:193.
சரியான பதில் எழுதியவர்கள் மொத்தம் 3 நபர்கள்.அவர்களின் சகோதரர் முகம்மது தாஹா குலுக்கல் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றார்.
பிறை 10 க்கான பரிசு வழங்குபவர் (ALFAZ COMPUTERS MADUKKUR)
ரமலான் பரிசுப்போட்டி பிறை 11
சரியான பதில்கள்
1.ஜகாத் பெற தகுதியானவர்கள் யார் யார் என அல்லாஹ் குர் ஆனில் கூறுகின்றான் ?
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)
2.நபி நூஹ் (அலை) அவர்கள் எத்தனை வருடம் வாழ்ந்ததாக அல்லாஹ் குர் ஆனில் குறிப்பிடுகின்றான் ?
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (29:14)
3.நபி நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்த ஸஹாபி யார் ?
ஹழ்ரத் அபூக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்
சரியான பதில்கள் எழுதியவர்கள் மொத்தம் 9 நபர்கள் அவர்களின் சகோதரர் ஜியாவுல் ஹக் அவர்கள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றார்.
(பிறை 11 முதல் பிறை 16 வரை வெற்றிபெற்றவருக்கு பரிசு வழங்குபவர் சகோதரர் HRH அக்பர் அலி (HR மேன்)அவர்கள்)
No comments:
Post a Comment