இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, September 28, 2013

பொறுப்பு ஏற்பு
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சி 27/09/2013 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் பெரியப்பள்ளிவாசலில் நடைபெற்றது.முன்னதாக ஜும்மா உரை நிகழ்த்திய பெரியப்பள்ளியின் தலைமை இமாம் மெளலவி முகமம்து யூசுப் உலவி அவர்க்ள்  " நிர்வாகிகளின் பண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இமாம் அவர்கள் தனது உரையில் புதிய நிர்வாகிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பதவி என கருதாமல் பொறுப்பு என கருதி செயல்படவேண்டும்.ஒவ்வொரு நபரும் பொறுப்பாளிகள் ஆவார்.பொறுப்புகள் நாளை மறுமையில் விசாரிக்கப்படும் என அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்.


சிறந்த தலைவர் : சிறந்த தலைவர் என்பவர் தலைவர் மக்களையும்,மக்கள் தலைவரையும் நேசிக்கவேண்டும் என நபிகள் நாயகம் கூறிய நற்போதனைகளை எடுத்துரைத்தார்.மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும் மக்கள் நிர்வாகிகளை எளிதாக அனுக வேண்டும்.தலைவர்களுக்கு மக்கள் முழுமையாக கட்டுப்படுதல் வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.மேலும் எந்த ஆக்கபூர்வமான பணிகளுக்கும் அறிவாற்றல் மற்றும் அனுபவம் தேவை.எனவே முந்தைய நிர்வாகிகளிடம் அனுபவங்களை ஆலோசனைகளாக பெற்று திறம்பட செயலாற்ற வேண்டும் எனவும்.இன்றைய நிலையில் உலகில் உள்ள முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரிந்து இருக்கின்றார்கள்.முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஊரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.


தொழுகைக்கு பின்னர் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க தலைவர் E.M.அஜீஸ் ரஹ்மான்,முஸ்லிம் இளைஞர்  முன்னேற்ற சங்க தலைவர் A.M.அஜீஸ் ரஹ்மான் ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது பற்றி முறைப்படி அறிவிப்பு செய்தார்கள்.புதிய நிர்வாகிகள் தங்களைப்பற்றிய அறிமுகமாக தலா இரண்டு நிமிடம் உரை நிகழ்த்தினர்கள்.பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவர் T.A.K.A.முகைதீன் மரைக்காயர் அவர்கள் முந்தைய நிர்வாகிகளின் ஆலோசனையுடனும்,ஜமாத் பெருமக்கள்,ஆலிம் பெருமக்கள்,இளைஞர்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் திறம்பட செயல்படுவேன்.எங்களின் பணிகள் சிறக்க துவா செய்யுங்கள் என பேசினார்.

செயலாளர் P.S.K.N.சதக்கத்துல்லா அவர்கள் ஜமாத் நிர்வாகம் திறந்த புத்தகமாக செயல்படும்.உங்களின் மேலான ஒத்துழைப்பு தேவை என பேசினார்,பொருளாளர் N.P.M.Y.பக்கீர் மைதீன் அவர்கள் தன்னை பொருளாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.பின்னர் இருசங்கங்களின் சார்பாகவும்,மதுக்கூர் பொதுநல கமிட்டி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்,மனிதநேய மக்கள் கட்சி,பிஎப்ஐ,எஸ்டிபிஐ மற்றும் பலர் புதிய நிர்வாகிகளை கெளரவித்தார்கள்.ஜும்மாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் மதுக்கூர் பொது நல கமிட்டியின் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது.  

















Thursday, September 26, 2013

லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க,

புனித பயணம்

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்;(அல் குர் ஆன் 2:196)
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, 'லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க' என்று கூற கேட்டேன். இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை).

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்களின் ஐந்தாவது கடமையான புனிதமிகு ஹஜ் பயணத்தை இந்த துல் கஅதா மாதம்  தொடங்கி அடுத்த வரக்கூடிய துல்ஹஜ் மாதம் வரை மெக்கா நோக்கி புனித பயணம் செய்வார்கள்.இந்த வருடமும் மதுக்கூரிலிருந்து 13  நபர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள். (ஹஜ் கமிட்டி மூலமாக 10 நபர்களும்,தனியார் ஹஜ் கமிட்டி முலமாக 3 நபர்களும் செல்கின்றார்கள்)நம் அறிந்தவரை ஹஜ் சென்று வருபவர்கள் ஒருசிலர் வந்த ஒரு மாதகாலம் இபாதத் பணிகளை தொய்வின்றி  செய்வார்கள்.நாட்கள் கடந்ததும் இபாதத் படிப்படியாக குறைந்து பள்ளிவாசல்களின் பக்கம் வருகையினை குறைந்து கொள்வார்கள்.அதுபோல பெண்கள் ஹஜ் சென்று வந்ததும் ஐவேளை தொழுகையினை பேணித்தொழுதுவருவார்கள் பிறகு படிப்படியாக குறைந்து தங்களின் இபாதத்துக்களை இழந்துவிடுகின்றார்கள்.ஹஜ் பயணம் சென்றுவந்த ஒருசிலர் நபர்கள் ஐவேளை தொழுகையினை இழந்து இருக்கும் தூர்பாக்கியமான நிலைகளும் இருக்கின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காக இறைவன் இக்கடமையினை நிறைவேற்ற சொன்னான் என்பதை உணர்ந்து அதன் படி நிறைவேற்றி அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அன்று பிறந்த பாலகனைப்போன்று ஊர் திருப்ப அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
இந்த வருடம் நமதூரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்:

1.முகம்மது அலி ஜின்னா
2.சிராஜுனிஷா (க/பெ முகம்மது அலி ஜின்னா)
3.நத்தர்ஷா
4.பெளஜியா (க/பெ நத்தர்ஷா)
5.ஜமால் முகம்மது
6.ரகீலா பீவி (க/பெ ஜமால் முகம்மது)
7.ஹமீது ஜெகரான் (க/பெ உதுமான்ஷா)
8.ரகீலா பீவி (க/பெ அப்துல் ரஜாக்)
9.ரசீனா (க/பெ அப்துல் கறீம்)
10.மும்தாஜ் பேகம் (க/பெ இஷாக்)


மேல் குறிப்பிடப்பட்டவர்கள் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் பயணம் செய்பவர்கள்.கீழ்கண்டவர்கள் தனியார் ஹஜ்  கமிட்டி மூலமாக செல்பவர்கள்.

1.சுபைதா பீவி (க/பெ அப்துல் கறீம்)
2.பென்னரசி (க/பெ ரகுமத்துல்லா)
3.ரஹிஜான் பீவி (க/பெ முகம்மது யாக்கூப்)

மதுக்கூரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சகோதர,சகோதரிகள்(ஹஜ்கமிட்டி மூலமாக பயணம் மேற்கொள்பவர்கள்)இன்று 26/09/2013 மாலை 7:00 மணியளவில்  வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் ஆலிம் பெருமக்கள்.ஜமாத் மற்றும் சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,வர்த்தக பிரமுகர்கள்,சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தாய்மார்கள், என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்,இன்று ஊரிலிருந்து புறப்படும் இவர்கள் வருகின்ற 29/09/2013 சென்னையிலிருந்து விமான பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.(இன்ஷா அல்லாஹ்)

(தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் செல்பவர்கள் வருகின்ற நாட்களில் செல்ல இருக்கின்றார்கள்..இன்ஷா அல்லாஹ்)

ஹஜ்பயணம் மேற்கொள்ளும் அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அன்று பிறந்த பாலகனைப்போன்று நல்லவிதமாக தாயகம் திருப்ப ஏக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.








Wednesday, September 25, 2013

"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.(அல் குர் ஆன் 9:18)

ஆட்சியாளர்களே ! மக்களுக்கு நற்செய்திகளையே வழங்குங்கள்.வெறுப்பூட்டாதீர்கள் ! (மக்களுடைய பணிகளை) எளிதாக்கித்தாருங்கள்: தொல்லை தராதீர்கள்.(நபிமொழி)


பதவி ஏற்பு

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று மாலை 5:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க தலைவர் E.M.அஜீஸ் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் A.M.அப்துல் காதர் அவர்கள் T.A.K.A.முகைதீன் மரைக்காயர் அவர்கள் எனது பொறுப்பினை ஏற்றுக்கொள்வார் என முன்மொழிய A.M.அஜீஸ் ரஹ்மான் அவர்கள் வழிமொழித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் A.M.அஜீஸ் ரஹ்மான்,செயலாளர் P.S.A.ஜபருல்லா,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க தலைவர் E.M.அஜீஸ்ரஹ்மான்,செயலாளர் S.N.S.M.ஹாஜா முகைதீன்,பொருளாளர் N.P.M.M.ரியாஸ் அகமது மற்றும் பழைய நிர்வாகிகளிடமிருந்து வரவு செலவுகளை பெற்ற M.S.A.அப்துல் ரெஜாக்,A.N.M.முகம்மது அலி ஜின்னா,A.M.பாரூக், மற்றும் 40 மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.பெரியப்பள்ளியின் இமாம் கூட்டு பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக புதிய நிர்வாகம் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை முன்னாள் நிர்வாகிகளான P.S.K.N.அமானுல்லா,N.S.M.முகம்மது பாரூக்,M.K.M.அப்துல்கறீம்,M.V.M.அப்துல் சமது மற்றும் மூத்த உறுப்பினர் P.S.K.A.அல்லாப்பிச்சை ராவுத்தர் ஆகியோர் புறகணித்தனர்.


இன்று பதவி ஏற்றுக்கொண்டவர்கள்

தலைவர் :T.A.K.A. முகைதீன் மரைக்காயர்

செயலாளர் : P.S.K.N.சதக்கத்துல்லா

பொருளாளர் : N.P.M.பக்கீர் மைதீன்

(புதிய நிர்வாகம் 3 ஆண்டுகள் செயல்படும் என தெரிவிக்கபட்டது இன்ஷா அல்லாஹ்...)
 
அண்மைச்செய்தி

மதுக்கூர் ஜாமி ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் தலைவராக சகோதரர் T.A.K.A.முகைதீன் மரைக்காயர் அவர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டார்.மேலும் செயலாளராக P.S.K.N. சதக்கத்துல்லா அவர்களும்,பொருளாளராக சகோதரர் நெ.பா.பக்கீர்மைதீன் (வாத்தியார்)அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
பணிகள் சிறக்க துவா செய்வோம்.

முகைதீன் மரைக்காயர் தொடர்பு எண் : 948 803 4647


Tuesday, September 24, 2013

சந்தைப்பள்ளிக்கூடம்

மதுக்கூர் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்) பேரூராட்சி தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் (வெளிநாடு வாழ் மதுக்கூர் சகோதரர்களின்) புதிய கட்டிட கட்டுமான பணிகள் பேரூராட்சி தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களின் தீவிர முயற்சியால் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றது.இன்று 24/09/2013 ஒட்டு எனப்படும் சிலாப்பு போடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..






Monday, September 23, 2013






பொதுபணித்துறையால் இறை இல்லத்திற்கு ஆபத்து...........களத்தில் தமுமுக..

தஞ்சாவூர் அருகில் உள்ள புகழ்பெற்ற ஊர்களின் ஒன்று கல்லணை.கரிகாலச்சோழனால் கட்டப்பட்ட கல்லணையில் தமிழக அரசு சார்பாக கரிகாலச்சோழனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.அதன்படி கரிகாலச்சோழனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளும் தொடக்கப்பட்டது.மண்டபம் கட்டுவதற்கு இடையூறாக உள்ளது என கூறி பொதுபணித்துறை கல்லணையில் மூன்று முஸ்லிம்களின் வீடு உட்பட 16 வீடுகளை இடித்துள்ளார்கள்.மேலும் வீடுகள் இடிக்கப்பட்டதும் அருகில் இருக்கும் சுமார் 112 வருடமாக முஸ்லிம்கள் தொழுகை நடத்திவரும் பள்ளிவாசல் சுற்றுசுவரையும்.பள்ளிவாசலின் பேஷ் இமாம் தங்கும் வீட்டையும் இடிப்பதற்காக ஆய்வு செய்து பள்ளிவாசலின் சுற்றுசுவர் கொஞ்சம் இடிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்த தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக நிர்வாகம் பொதுபணித்துறையினரை வன்மையாக கண்டித்து அடுத்தக்கட்டத்திற்கு பள்ளிவாசல் சுற்றுசுவர் இடிபடாமல் காத்துக்கொண்டார்கள்.(அல்ஹம்துலில்லாஹ்) நேற்று 22/09/2013 தஞ்சாவூர் வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கல்லணை சென்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேசியுள்ளார்.இச்சந்திப்பின் போதுமாநிலச் செயளாலர் பேரா.ஹாஜாகணி, மமக மாநில அமைப்புச் செயளாலர் சகோ. ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்க்கு மாவட்ட தலைவர் சகோ.அப்துல் ஜப்பார், மாவட்ட தமுமுக செயளாலர் சகோ. அஹமது ஹாஜா, மாவட்ட மமக செயளாலர் சகோ.அஹமது கபீர்,மாவட்ட பொருளாலர் டாக்டர், ஷேக் அலாவுதீன், மாவட்ட, ஒன்றிய, கிளைக்களக நிர்வாகிகள் மற்றும் கல்லனை ஜமாத்தார்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.




Thursday, September 19, 2013

உண்மையாலுமா...?
மதுக்கூர் சேக்பரீது ஒலியுல்லாஹ் தர்ஹா உண்டியல் நேற்று (18/09/2013) வக்ப் போர்டு கண்காணிப்பாளர் அவர்களால் சீல் வைக்கப்பட்டது.மேலும் 12 ஆண்டுகளாக ஜமாத் நிர்வாக பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் தங்களின் பொறுப்புக்களை மூவர் கமிட்டியிடம் தான் ஒப்படைப்போம் என கூறிவிட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மூவர் கமிட்டியில் மெடிக்கல்கடை பெரியவர்,அரிசி ஆலை அதிபர்,இறைச்சிக்கடை பிரமுகர் என மூவரும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது........உண்மையாலுமா ....?
மதுக்கூர் அதிரைரோடு அல்சபா காலனி மர்ஹும் முத்தலிபு அவர்களின் மனைவியும்,சமையல் மாஸ்டர்கள் (பண்டாரி) மைதீன்,அகமது ஆகியோரின் தாயாருமான மைமூன் சரிபா அவர்கள் இன்று 19/09/2013) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, September 17, 2013

 உண்மையாலுமா .....?

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக மதுக்கூரின் இரு சங்கங்களும் நோட்டீஸ் மூலமாக இரு வாரங்களுக்கு முன்னர்  மக்களுக்கு தெரிவித்தனர்.புதிய நிர்வாகிகளும்  இன்று பதவி ஏற்பார்கள் நாளை பதவி ஏற்பார்கள் என நாளுக்கு ஓர் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.இதற்கிடையில் இன்றுவரை நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகிகள் நாங்கள் கடந்த 12 வருடங்களாக நிர்வாகத்தில் இருக்கின்றோம் .கணக்குகள் முறையாக பரமரிக்கப்பட்டு வைத்துள்ளோம்.12 ஆண்டுகளின் கணக்கு வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் ஜமாத்தரிடம் ஓப்படைக்கின்றோம் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பது காலதமாதம் ஆகுமாம்.

Monday, September 16, 2013

நிக்காஹ் (திருமண) வாழ்த்து

                 
மணமகன் 

A.நத்தர்ஷா
( த/பெ M.N.M.அஜ்மல்கான்)
 
மணமகள்
A.பரக்கத்து நிஷா
 
(த/பெ S.அப்துல் ரஹீம்)

                                                                  மண இடம்
                                                                    

                                                                      மதுக்கூர்
 


மணநாள் 

ஹிஜிரி 1434 துல் க அதா பிறை 09 (16/09/2013 திங்கள் கிழமை)

                                                                 மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    


Sunday, September 15, 2013

மதுக்கூரில் பரபரப்பு (13/09/2013)

கடந்த 12 ஆண்டுகளாக மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக விநாயகர் ஊர்வலம் நடந்தப்படுவதாகவும் 13 ஆண்டு விநாயகர் ஊர்வலம் வரும் 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் விளம்பரம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் இன்று (13/09/2013) அதிகாலையில் சிலையின் தலை பகுதி உடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது.சிலையில் சேதம் ஏற்பட்ட உடன் சங்கபரிவார்கள் இதை முஸ்லிம்கள் தான் உடைத்து இருப்பார்கள் என கூறி மதுக்கூரில் சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி உள்ளார்கள்.

சிலை சேதம் காரணமாக மதுக்கூரில் ஒருவித பதற்றம் நிலவுகின்றது.போலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.காவல்துறையினரின் விசாரணை தொடங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.காவல்துறையினர் நடுநிலையுட்ன் செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும்.விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இதை முஸ்லிம்கள் தான் செய்து இருப்பார்கள் என்று சொல்வது மதுக்கூரில் பரபரப்பை ஏற்படுத்தி தன்னையும்,தனது இயக்கத்தையும் வளர்த்து கொள்ள நடைபெறும் சூழ்ச்சியாகும்.
காந்தியை கொலை செய்து விட்டு முஸ்லிம்தான் கொலை செய்தார்கள் என்றும்.தனது விளம்பரத்திற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களும் செய்த வேலையாக கூட இருக்கும்.எனவே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

பிற மத கடவுள்களை ஏசாதீர்கள் என்றும் உங்கள் வழி உங்களுக்கு அவர்களின் வழி அவர்களுக்கு  என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.அப்படி இருக்கையில் முஸ்லிம்கள் யாரும் இதுபோல் செய்யமாட்டார்கள்.சிலை வைக்கப்பட்ட சிவக்கொல்லை பகுதியில் கால்நடைகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும் சிலையில் உள்ள மாலையை உண்ண முயற்சி செய்தபோது கால்நடைகள் சிலையை கீழே தள்ளிவிட்டு இருக்கலாம்.சிலர் ஊர்வலத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக செய்த வேலைகளாக கூட இருக்கலாம்.உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.....
 
 
 
 மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்(14/09/2013)
 
மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றுவருகின்றது.இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப்பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார்.பெரியப்பள்ளிவாசலில் ராத்தீபு  இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு  வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.

மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது.

 
 
 


 
 
 
 
 
 
மதுக்கூரில் போலீஸ் குவிப்பு (15/09/2013)
 

மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக இன்று 15/09/2013 மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெறுகின்றது.கடந்த இரு தினங்களாக நிகழ்ந்த விரும்பதகாத சம்பவங்களால் இன்று மதுக்கூரில் ஒருவிதமான  பதட்டம் நிலவிகின்றது.பரபரப்பான மதுக்கூர் முக்கூட்டுச்சாலை வெறிசோடியாக இருக்கின்றது.மதுக்கூர் பகுதியில் அரசு மதுபானக்கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மற்றும் சமுதாய இயக்க அலுவலகங்களுக்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சுமார் 800 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.விணைத்தீர்க்கும் விநாயகர் விணை இல்லாமல் மதுக்கூரிலிருந்து சென்றால் நிம்மதி என்ற மனநிலையில் அனைத்து மத நல்லுள்ளங்கள் உள்ளனர்.
.

 


 
 
 
 
 
 

Saturday, September 14, 2013




நிக்காஹ் (திருமண) வாழ்த்து

                   மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர்கள் சகோதரர்கள்                                  S.பைசல்தீன், S.நிஜாமுதீன் இல்லத்திருமணம்.

மணமகன் 

S.பைசல்தீன்
(த/பெ M.சாகுல் ஹமீது)
 
மணமகள்
A.சமீரா ரோஷன்
(த/பெ A.அப்துல் அஜீஸ்)
 

மணநாள் 

ஹிஜிரி 1434 துல் க அதா பிறை 18 (15/09/2013 ஞாயிற்றுக்கிழமை)

                                                                 மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    
















Wednesday, September 11, 2013

விருந்தழைப்பு

கடந்த ரமலானுக்கு பின்னர் நமதூரில் (மதுக்கூரில்) வீடு குடிபுகும் நிகழ்ச்சிகள்,திருமணங்கள் என ஏராளமான விருந்தழைப்புகள் நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.விருந்தழைப்புகளை ஏற்றுக்கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகின்றார்கள்.

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள்.
1.ஜனாஸாவை பின் தொடரும் படியும்,
2.நோயாளியை நலம் விசாரிக்கும் படியும்,
3.விருந்து
க்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும்.
4.அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
5.செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும்.
6.ஸலாமுக்கு பதில் கூறும்படியும்.
7.தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

மேலும் சில விருந்தழைப்புகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
" செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து மிகவும் கெட்ட விருந்தாகும்". என நபிகள் பெருமகனார் நவின்றுள்ளார்கள்.இன்றைக்கு ஏழைகள் வீடு தேடிபோய் அழைக்கப்ப்டுவது இல்லை.ஏழைகள் விருந்து நடைபெறும் இடத்திற்கு வருகின்றார்கள் உணவு உண்ணுகின்றார்கள்.(சில இடங்களில் ஏழைகள் உணவு உண்ண அனுமதிக்கப்படுவது இல்லை) இதற்கு காரணமும் சொல்லப்படுகின்றது நாங்கள் அழைத்தவர்களுக்கு உணவு இல்லாமல் போய்விடும் என்ற ரெடிமேடு பதில் சொல்லப்படுகின்றது.

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் அழைக்கப்படும் விருந்துக்களில் அதிகம் விரயம் செய்யப்படுவதை உணர முடிகின்றது.
" உண்ணுங்கள் : பருகுங்கள்: ஆனால் விரயம் செய்யாதீர்கள்.திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (திருக்குரான் 7:31)

அதுமட்டுமில்லாது சில இடங்களில் திருமண அழைப்பு கொடுக்க (கூப்பட்டிற்கு) குழுக்களாக செல்வார்கள்.ஆனால் அழைப்பை ஏற்று விருந்து நடைபெறும் இடங்களுக்கு சென்றால் வாசலில் வரவேற்பாளர்கள் இருக்கமாட்டார்கள்.தேவைக்காரர் கொல்லைப்புறத்தில் போய் இருப்பார்.அல்லது மற்றபணிகளை மேற்கொண்டிருப்பார் விருந்தழைப்பை ஏற்று வந்தவரை வாங்க..என்று இன்முகத்துடன் அழைக்க ஆளில்லா அவலநிலைகளும் ஏற்படுகின்றது.

விருந்தினர்களை உபசரிங்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்.உபசரீப்பு என்றால் வெறும் விருந்து மட்டுமல்ல வருபவர்களை இன்முகத்துடன் அழைப்பதும்  என்பதை உணர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரியட்டுமாக !

Thursday, September 5, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டம் சகோதரர் A.T.ஜியாவுதீன் அவர்களின் வீடு

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 05/09/2013 வியாழன் நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...