பொதுபணித்துறையால் இறை இல்லத்திற்கு ஆபத்து...........களத்தில் தமுமுக..
தஞ்சாவூர் அருகில் உள்ள புகழ்பெற்ற ஊர்களின் ஒன்று கல்லணை.கரிகாலச்சோழனால்
கட்டப்பட்ட கல்லணையில் தமிழக அரசு சார்பாக கரிகாலச்சோழனுக்கு மணிமண்டபம்
கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.அதன்படி
கரிகாலச்சோழனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளும்
தொடக்கப்பட்டது.மண்டபம் கட்டுவதற்கு இடையூறாக உள்ளது என கூறி பொதுபணித்துறை
கல்லணையில் மூன்று முஸ்லிம்களின் வீடு உட்பட 16 வீடுகளை
இடித்துள்ளார்கள்.மேலும் வீடுகள் இடிக்கப்பட்டதும் அருகில் இருக்கும்
சுமார் 112 வருடமாக முஸ்லிம்கள் தொழுகை நடத்திவரும் பள்ளிவாசல்
சுற்றுசுவரையும்.பள்ளிவாசலின் பேஷ் இமாம் தங்கும் வீட்டையும் இடிப்பதற்காக
ஆய்வு செய்து பள்ளிவாசலின் சுற்றுசுவர் கொஞ்சம் இடிக்கப்பட்டுள்ளது.தகவல்
அறிந்த தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக நிர்வாகம் பொதுபணித்துறையினரை வன்மையாக
கண்டித்து அடுத்தக்கட்டத்திற்கு பள்ளிவாசல் சுற்றுசுவர் இடிபடாமல்
காத்துக்கொண்டார்கள்.(அல்ஹம்துலில்லாஹ்)
நேற்று 22/09/2013 தஞ்சாவூர் வருகை தந்த தமுமுக மூத்த தலைவரும்,சட்டமன்ற
உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கல்லணை சென்று பள்ளிவாசல்
நிர்வாகத்தினரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக
பேசியுள்ளார்.இச்சந்திப்பின் போதுமாநிலச் செயளாலர் பேரா.ஹாஜாகணி, மமக மாநில
அமைப்புச் செயளாலர் சகோ. ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்க்கு மாவட்ட தலைவர்
சகோ.அப்துல் ஜப்பார், மாவட்ட தமுமுக செயளாலர் சகோ. அஹமது ஹாஜா, மாவட்ட மமக
செயளாலர் சகோ.அஹமது கபீர்,மாவட்ட பொருளாலர் டாக்டர், ஷேக் அலாவுதீன்,
மாவட்ட, ஒன்றிய, கிளைக்களக நிர்வாகிகள் மற்றும் கல்லனை ஜமாத்தார்கள்
ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment