இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, September 26, 2013

லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க,

புனித பயணம்

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்;(அல் குர் ஆன் 2:196)
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, 'லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க' என்று கூற கேட்டேன். இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை).

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்களின் ஐந்தாவது கடமையான புனிதமிகு ஹஜ் பயணத்தை இந்த துல் கஅதா மாதம்  தொடங்கி அடுத்த வரக்கூடிய துல்ஹஜ் மாதம் வரை மெக்கா நோக்கி புனித பயணம் செய்வார்கள்.இந்த வருடமும் மதுக்கூரிலிருந்து 13  நபர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள். (ஹஜ் கமிட்டி மூலமாக 10 நபர்களும்,தனியார் ஹஜ் கமிட்டி முலமாக 3 நபர்களும் செல்கின்றார்கள்)நம் அறிந்தவரை ஹஜ் சென்று வருபவர்கள் ஒருசிலர் வந்த ஒரு மாதகாலம் இபாதத் பணிகளை தொய்வின்றி  செய்வார்கள்.நாட்கள் கடந்ததும் இபாதத் படிப்படியாக குறைந்து பள்ளிவாசல்களின் பக்கம் வருகையினை குறைந்து கொள்வார்கள்.அதுபோல பெண்கள் ஹஜ் சென்று வந்ததும் ஐவேளை தொழுகையினை பேணித்தொழுதுவருவார்கள் பிறகு படிப்படியாக குறைந்து தங்களின் இபாதத்துக்களை இழந்துவிடுகின்றார்கள்.ஹஜ் பயணம் சென்றுவந்த ஒருசிலர் நபர்கள் ஐவேளை தொழுகையினை இழந்து இருக்கும் தூர்பாக்கியமான நிலைகளும் இருக்கின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காக இறைவன் இக்கடமையினை நிறைவேற்ற சொன்னான் என்பதை உணர்ந்து அதன் படி நிறைவேற்றி அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து அன்று பிறந்த பாலகனைப்போன்று ஊர் திருப்ப அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
இந்த வருடம் நமதூரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்:

1.முகம்மது அலி ஜின்னா
2.சிராஜுனிஷா (க/பெ முகம்மது அலி ஜின்னா)
3.நத்தர்ஷா
4.பெளஜியா (க/பெ நத்தர்ஷா)
5.ஜமால் முகம்மது
6.ரகீலா பீவி (க/பெ ஜமால் முகம்மது)
7.ஹமீது ஜெகரான் (க/பெ உதுமான்ஷா)
8.ரகீலா பீவி (க/பெ அப்துல் ரஜாக்)
9.ரசீனா (க/பெ அப்துல் கறீம்)
10.மும்தாஜ் பேகம் (க/பெ இஷாக்)


மேல் குறிப்பிடப்பட்டவர்கள் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் பயணம் செய்பவர்கள்.கீழ்கண்டவர்கள் தனியார் ஹஜ்  கமிட்டி மூலமாக செல்பவர்கள்.

1.சுபைதா பீவி (க/பெ அப்துல் கறீம்)
2.பென்னரசி (க/பெ ரகுமத்துல்லா)
3.ரஹிஜான் பீவி (க/பெ முகம்மது யாக்கூப்)

மதுக்கூரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சகோதர,சகோதரிகள்(ஹஜ்கமிட்டி மூலமாக பயணம் மேற்கொள்பவர்கள்)இன்று 26/09/2013 மாலை 7:00 மணியளவில்  வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் ஆலிம் பெருமக்கள்.ஜமாத் மற்றும் சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,வர்த்தக பிரமுகர்கள்,சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தாய்மார்கள், என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்,இன்று ஊரிலிருந்து புறப்படும் இவர்கள் வருகின்ற 29/09/2013 சென்னையிலிருந்து விமான பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.(இன்ஷா அல்லாஹ்)

(தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் செல்பவர்கள் வருகின்ற நாட்களில் செல்ல இருக்கின்றார்கள்..இன்ஷா அல்லாஹ்)

ஹஜ்பயணம் மேற்கொள்ளும் அனைவரின் ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அன்று பிறந்த பாலகனைப்போன்று நல்லவிதமாக தாயகம் திருப்ப ஏக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.








No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...