இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, September 28, 2013

பொறுப்பு ஏற்பு
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சி 27/09/2013 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் பெரியப்பள்ளிவாசலில் நடைபெற்றது.முன்னதாக ஜும்மா உரை நிகழ்த்திய பெரியப்பள்ளியின் தலைமை இமாம் மெளலவி முகமம்து யூசுப் உலவி அவர்க்ள்  " நிர்வாகிகளின் பண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இமாம் அவர்கள் தனது உரையில் புதிய நிர்வாகிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பதவி என கருதாமல் பொறுப்பு என கருதி செயல்படவேண்டும்.ஒவ்வொரு நபரும் பொறுப்பாளிகள் ஆவார்.பொறுப்புகள் நாளை மறுமையில் விசாரிக்கப்படும் என அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்.


சிறந்த தலைவர் : சிறந்த தலைவர் என்பவர் தலைவர் மக்களையும்,மக்கள் தலைவரையும் நேசிக்கவேண்டும் என நபிகள் நாயகம் கூறிய நற்போதனைகளை எடுத்துரைத்தார்.மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும் மக்கள் நிர்வாகிகளை எளிதாக அனுக வேண்டும்.தலைவர்களுக்கு மக்கள் முழுமையாக கட்டுப்படுதல் வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.மேலும் எந்த ஆக்கபூர்வமான பணிகளுக்கும் அறிவாற்றல் மற்றும் அனுபவம் தேவை.எனவே முந்தைய நிர்வாகிகளிடம் அனுபவங்களை ஆலோசனைகளாக பெற்று திறம்பட செயலாற்ற வேண்டும் எனவும்.இன்றைய நிலையில் உலகில் உள்ள முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரிந்து இருக்கின்றார்கள்.முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஊரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.


தொழுகைக்கு பின்னர் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க தலைவர் E.M.அஜீஸ் ரஹ்மான்,முஸ்லிம் இளைஞர்  முன்னேற்ற சங்க தலைவர் A.M.அஜீஸ் ரஹ்மான் ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது பற்றி முறைப்படி அறிவிப்பு செய்தார்கள்.புதிய நிர்வாகிகள் தங்களைப்பற்றிய அறிமுகமாக தலா இரண்டு நிமிடம் உரை நிகழ்த்தினர்கள்.பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவர் T.A.K.A.முகைதீன் மரைக்காயர் அவர்கள் முந்தைய நிர்வாகிகளின் ஆலோசனையுடனும்,ஜமாத் பெருமக்கள்,ஆலிம் பெருமக்கள்,இளைஞர்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் திறம்பட செயல்படுவேன்.எங்களின் பணிகள் சிறக்க துவா செய்யுங்கள் என பேசினார்.

செயலாளர் P.S.K.N.சதக்கத்துல்லா அவர்கள் ஜமாத் நிர்வாகம் திறந்த புத்தகமாக செயல்படும்.உங்களின் மேலான ஒத்துழைப்பு தேவை என பேசினார்,பொருளாளர் N.P.M.Y.பக்கீர் மைதீன் அவர்கள் தன்னை பொருளாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.பின்னர் இருசங்கங்களின் சார்பாகவும்,மதுக்கூர் பொதுநல கமிட்டி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்,மனிதநேய மக்கள் கட்சி,பிஎப்ஐ,எஸ்டிபிஐ மற்றும் பலர் புதிய நிர்வாகிகளை கெளரவித்தார்கள்.ஜும்மாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் மதுக்கூர் பொது நல கமிட்டியின் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது.  

















No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...