இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, July 23, 2020

இறைவனின் அழைப்பை ஏற்ற(21/07/2020) இனிய சகோதரர் அஸ்லாம் பாஷா அவர்களின் மறுமை நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் துவா செய்கின்றோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!
இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக!
இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆமீன்.
மதுக்கூர் பேரூர் கழக
தமுமுக & மமக


Friday, May 1, 2020

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலமா பெருமக்களுக்கு உதவிடுவோம்

இப்புனிதமிகு ரமலானில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள கோவிட் 19 என்ற வைரஸ் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் உலமா பெருமக்களும்
(ஹஜ்ரத்மார்கள்) அடங்குவர்.புனிதமிகு ரமலான் மாதத்தில் இவர்களுக்கு பல அன்பளிப்புகள் கிடைக்க வாய்ப்புகள் இருந்தது.இந்த வருடம் அதற்கான வாய்ப்புகள் குறைவே.

உலமா பெருமக்களின்
(ஹஜ்ரத்மார்கள்) குடும்ப நலனை கருத்தில் கொண்டு மதுக்கூர் தமுமுக & மமக சார்பாக மதுக்கூரில் பணியாற்றும் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள்(ஹஜ்ரத்) & முஅத்தீன்கள் பயன்பெறும் வகையில் உலமா பெருமக்களுக்கு உதவிடுவோம் என்ற இப்பணியினை மேற்கொள்கின்றோம்.

உங்களின் ஸதக்கா &அன்பளிப்புகளை இப்பணிக்காக எங்களிடம் வழங்கினால் வரும் தொகை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.இன்ஷா அல்லாஹ்.

இப்பணிக்காக உதவி செய்ய எண்ணமுள்ள நல்லுள்ளங்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

ஃபவாஸ் 99431 45503

தாஜுதீன் 95977 71520

ராசிக் அகமது 96888 85675

முகம்மது சேக் ராவுத்தர் 97158 72190

இலியாஸ் 9789155480

அசாரூதீன் 81900 25593

ஹாஜா மைதீன் 87543 36453

கபார் 7708851693

(வங்கி கணக்கு விபரம்

Mohamed Sheik Ravuthar
Indian bank Current Account No :6567452552
Madukkur.
Ifsc code : IDIB000M005)

இப்பணிக்காக மேற்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் இதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் எண்களில் தெரியப்படுத்தவும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ( தமுமுக)
மதுக்கூர்.
30/04/2020


Sunday, April 26, 2020

பேரன்பு தம்பி கீழை ஜமீல் நம்மை விட்டுப் பிரிந்தார் ( இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் )
கீழக்கரை ஜமீல் முஹம்மது. 1980 களின் தொடக்கத்தில் சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள எங்கள் மாணவர் இயக்க தலைமையகத்தில் ரமலான் இரவுகளில் தொடர்ந்து நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின் விளைவாக தங்களை இணைத்துக் கொண்ட கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். எஸ்எம் பாக்கர், எஸஎம் புகாரி, முஸம்மில் முதலியோர்களும் அதில் அடங்கும்.
துணிச்சலாகக் கருத்து சொல்வதில் அவர் தனி ரகம். இடைவிடாத சமூகப் பணி. தமுமுகவின் தொடக்கம் முதல் சிறப்பான பணியாற்றியவர் பின்னர் அவர் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்கொண்டாலும் அதிலிருந்து விலகி மீண்டும் நம்முடன் இணக்கமாக பணியாற்றியவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் போதெல்லாம் பாச மழை பொழிந்தவர்.
இன்று அதிகாலை நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற அதிர்ச்சி செய்தியைச் சகோதரர் ஜீல்பிகார் தெரிவித்த போது மனம் பொறுக்கவில்லை.
ஜமீலுடன் பழகிய நினைவுகள் எண்ண அலைகளில் என்றும் மறையாது.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனம் வழங்கவும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழகிய பொறுமை அளிக்கவும் வல்லவன் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
தலைவர் தமுமுக

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...