இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 28, 2017

மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர்.முஸ்லிம்களும்,இந்துக்களும் (செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்களும்) நிறைந்த ஊர்.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் என்ற ஜும்மா பள்ளி ஒன்று உள்ளது.மதுக்கூரின் இரண்டாவது பள்ளி மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்.
இப்பள்ளியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய ஜமாத் தலைவர் முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் மேலவீதி சங்க முக்கிய பொறுப்பாளர் அல்லாப்பிச்சை இருவரும் சிங்கப்பூர் சென்று இப்பள்ளிக்காக பெரும் நிதி திரட்டி வந்தனர்.

20/07/1978 வியாழன் மாலை வெள்ளி இரவு 9:00 மணியளவில் பெண்களுக்கென பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டு மார்க்க அறிஞர்களால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஹிஜிரி 1398 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14  (21/07/1978 வெள்ளி காலை மதுக்கூரின் இரண்டாவது பள்ளிவாசல் மேலப்பள்ளி திறக்கப்பட்டது.இப்பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மதுக்கூரின் அன்றைய ஜமாத் தலைவரும்,பேரூராட்சி தலைவருமானT.A.K. முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களின் சீறிய தலைமையில் நடைபெற்றது.

S.P.N.அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்கள் முன்னிலையிலும்,மேலப்பள்ளி நிர்மாணக்கமிட்டி செயலாளர் M.M.அல்லாப்பிச்சை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும்,நீடுர் அரபிக்கல்லூரி முதல்வருமான M.முகம்மது ரஹ்மத்துல்லா ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் மதுக்கூர் மேலப்பள்ளிவாசலை திறந்து வைத்தார்கள்.

மேலப்பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக

பேராசிரியர் கா.அப்துல் கபூர்
பேராசிரியர் மெளலானா மெளலவி எஸ்.ஆர்.சம்சுல்ஹுதா ஆலிம்
மெளலானா மெளலவி ஓ.எம்.ஜெய்னுதீன் ஆலிம்
மெளலவி அப்துல் லத்தீப் ஆலிம்
மெளலவி கா.மீ.அப்துல் வஹாப் ஆலிம்
மெளலவி இ.சிராஜுதீன் ஆலிம்
மெளலவி எஸ்.முஹம்மது அப்துல் காதர் ஆலிம்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் நத்தர்ஷா அவர்களும்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க செயலாளர் A.N.M.முகம்மது அலி ஜின்னா அவர்களும் நன்றி நவின்றார்கள்.








கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...