இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 31, 2014

மதுக்கூர் ஜமாத் கூட்டம்
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி(JMEC) கூட்டம் இன்று 31/12/2014 காலை மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஜமாத் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சந்தைப்பேட்டை குத்தகை விடப்பட்டது.சந்தைப்பேட்டையினை சேட்வாவா அவர்கள் குத்தகைக்கு எடுத்தார்.பாசிப்பட்டரையினை மு.ரா.அப்துல் வஹாப் அவர்கள் குத்தகைக்கு எடுத்தார்.மேலும் பாசிப்பட்டரை சார்பாக பெரியப்பள்ளியினை இடித்து புதியப்பள்ளிவாசல் கட்ட ரூ 1 இலட்சம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு.முதல் தவனையாக ரூ 50,0000 கொடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மணிமகுடம் வைத்தது போன்று அடுத்த மாதத்தில் பெரியப்பள்ளிவாசலை இடித்து புதியப்பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது(இன்ஷா அல்லாஹ்) என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 22, 2014

தாவா பணியில் மணமகன்
மதுக்கூரில் நேற்று ஓர் திருமணம் நடைபெற்றது.மணமகன் பெயர் அஸ்லம் முகம்மது எகியா.இந்த மணமகன் தனது திருமணத்தன்று (நேற்று 21/12/2014) விருந்தழைப்புக்கு வந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றி சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் தமிழக்கம் மற்றும் பல தலைப்புகளில் இஸ்லாத்தைப்பற்றிய பிரசுரம்,இஸ்லாத்தைப்பற்றிய பல நூல்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கினார்.தாவா பணியினை மணமகனான அஸ்லம் அவர்களே நேரடியாக களத்தில் நின்று இப்பணியினை செய்தது பலரது புருவங்களை உயர்த்தியது.






இது மணமகன் அஸ்லம் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக பதிவு செய்யப்படவில்லை.நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக குறிப்பாக நமது குடும்பத்தினருடன் கூட நம்மால் தாவா செய்ய முடியவில்லை என்ற எண்ணத்தில் பதிவு செய்யப்பட்டது.மதுக்கூரில் திருமணத்தன்று தாவா பணியில் மணமகன் ஈடுபடுவது இதுவே முதல்முறை என தெரிகின்றது.
மணமகனின் இப்பணிகள் தொய்வின்றி நடைபெற துவா செய்கின்றோம்.

சரித்திரம்...சகாப்தம்...சந்தைப்பள்ளிக்கூடம் !

நமதூர் சந்தைப்பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகள் வரை பிறந்த பெரும்பாலன மதுக்கூர் இஸ்லாமிய மாணவ,மாணவியர்கள் இப்பள்ளிக்கூடத்தில் தான் தனது ஆரம்பக்கல்வியை துவங்கினார்கள் என்றால் அது மிகையல்ல.




(இது குறித்து நமது மதுக்கூர் தமுமுக madukkurtmmk@gmail.com இமெயிலில் சந்தைப்பள்ளிக்கூடம் ஓர் பார்வை என்று தலைப்பிட்ட கட்டுரை 10/05/2012 அன்று பிரசுரம் ஆகியுள்ளது என்பதை நினைவு கூறுகின்றோம்.)

சந்தைப்பள்ளியின் பழமையான கட்டிடத்தை இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஓர் தீர்வு வரும் என்ற காரணத்தை முன்னிட்டு பெரியவர் ANM முகம்மது அலி ஜின்னா மற்றும் A. ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னின்று இடித்தார்கள்.அந்த நேரத்தில் இது சம்பந்தமாக ஓர் சலசலப்பு வந்தது.பிறகு அச்சலசலப்பு பேச்சுவார்த்தை மூலமாக சுமூக தீர்வு ஏற்பட்டது.

நமதூர் சந்தைப்பள்ளிக்கூடம் புதிய கட்டிடம் கட்ட இன்று 12/05/2012 ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி மூலமாக ஓர் குழு அமைக்கப்பட்டுள்ளது.பின்னர் பேரூராட்சி தலைவர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் பெரும் முயற்சிகளினால் தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

அடிக்கல் நிகழ்ச்சி
ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியோர்கள்,பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி கடந்த 01/05/2013 அன்று நடைபெற்றது.






ஆரம்பக்கட்ட பணிகள்
மதுக்கூரின் மையப்பகுதியில் இருக்கும் இப்பள்ளிக்கூடத்தில் முஸ்லிம் மாணவ,மாணவியர்கள் தான் அதிகமளவில் பயில்கின்றார்கள்.இப்பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படவேண்டும் என்ற முனைப்பு நமதூரில் உள்ள கல்வியாளர்கள் பலர் பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.இறுதியில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது அவர்களும் முயற்சிகள் மேற்கொண்டு பேரூராட்சி தன்னிறைவுத்திட்டம் (நமக்கு நாமே திட்டம்) மூலமாக சந்தைப்பள்ளிக்கூட கட்டிட பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.குறிப்பாக அமீரகம் வாழ் சகோதரர்கள் சந்தைப்பள்ளிக்கூடம் கட்டுவதற்காக சுமார் 13 இலட்சம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.    (பதிவு 12/06/2013 @ madukkurtmmk@gmail.com)

சிலாப்பு போடப்பட்டது
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்) பேரூராட்சி தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் (வெளிநாடு வாழ் மதுக்கூர் சகோதரர்களின்) புதிய கட்டிட கட்டுமான பணிகள் பேரூராட்சி தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களின் தீவிர முயற்சியால் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றது.இன்று 24/09/2013 ஒட்டு எனப்படும் சிலாப்பு போடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..(பதிவு 24/09/2013 @ madukkurtmmk@gmail.com)


பணிகள் நிறைவு
படிபடியாக சந்தைப்பள்ளிக்கூட கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த 28/11/2014 அன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சந்தைப்பள்ளிக்கூட கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால் அதை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்தைப்பள்ளிக்கூடம் புதிய கட்டிடத்தில்  அனைவரின் ஒத்துழைப்பாலும்,பேரூராட்சி தலைவர் சகோதரர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் பெரும் முயற்சியாலும் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் இன்று 22/12/2014 திங்கள் கிழமை பஜ்ர் தொழுகைகு பின்னர் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.














நன்றி
இப்பள்ளிக்கூடத்திற்கு  எல்ல வகையிலும் உதவி புரிந்த முன்னாள்,இன்னாள் ஜமாத் நிர்வாகிகளுக்கும்,பொருளாதார உதவி புரிந்த கொடையாளர்களுக்கும்,கல்வியாளர்களுக்கும்,பேரூராட்சி உறுப்பினர் பெருமக்களுக்கும்,எடுத்துக்கொண்ட பணியினை சிறப்புடன் நிறைவேற்றிய மதுக்கூர் பேரூராட்சி தலைவர் N.S.M. பஷீர் அகமது அவர்களுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகரத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்,நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


(இப்பள்ளியின் அரசு சார்பு திறப்பு நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என தெரிகின்றது)






Thursday, December 18, 2014

மதுக்கூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு குழுவினர்

நமக்கு குடிநீரும்,உணவும் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கிய காவிரிப்படுமை இப்போது மீத்தேன் என்னும் திட்டத்தால் பேரபாயத்தில் உள்ளது என்பதை விளக்கியும்,மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்கவும்,காவிரிப்படுகையினைப்படுகையைப்பாதுகாக்கவும் ஒரு கோடி கையொழுத்து இயக்கம் காவிரிப்படுகை பாதுகாப்பு பயணம் என்னும் சமூக விழிப்புணர்வு பிரச்சார பயணம் கடந்த 10/12/2014 அன்று கோடியக்கரையில் தொடங்கி தொடந்து டெல்டா மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இக்குழுவினர் இன்று மாலை 7:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மீத்தேன் குறித்து அதன் மூலம் ஏற்படப்போகின்ற பேரபாயத்தை விளக்கி பேசினார்கள்.மதுக்கூருக்கு வருகை தந்த இக்குழுவினருக்கு மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகரம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இக்குழுவிற்கு தலைமை ஏற்று நடத்திவரும் பேராசிரியர் அய்யா ஜெயராமன் அவர்களுக்கு மதுக்கூர் நகர மமக தலைவர் சகோதரர் ஜபருல்லா அவர்களும்,அய்யா திருநாவுக்கரவு அவர்களுக்கு மமக நகர துணைச்செயலாளர் சகோதரர் அப்பாஸ் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,பேரூராட்சி உறுப்பினர் கபார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ராசிக்,நகர பொறுப்பாளர் ராசிக் அகமது,சபீக் மற்றும் மமக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்பிரச்சார பயணம்  வருகின்ற 20/12/2014 தஞ்சாவூரில் நிறைவு பெறுகின்றது.


காவிரிப்படுகை பாதுகாப்புப்பயணம் சிறப்புடன் அமையவும்,மக்கள் விழிப்புணர்வு பெறவும் பிரார்த்திக்கின்றோம்.









Tuesday, December 16, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் புதுத்தெரு அப்துல் காதர்,சிராஜுதீன்,சாதிக்பாட்சா,முபாரக் அலி ஆகியோர் தகப்பனாரும்,திமுக முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினருமான S.சேகனா அவர்கள் இன்று 16/12/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Monday, December 15, 2014

மதுக்கூரில் வைகோ


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக காவிரியில் கர்நாடக புதிய அணை கட்டுவது,மீத்தேன் திட்டம் எதிர்ப்பு,பூரண மது விலக்கை வலியுறுத்தி வைகோ அவர்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகின்றார்.இன்று 15/12/2014 திங்கள் கிழமை காலை 11:00 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மதுக்கூர் பேரூந்து நிலையம் வந்தார்.வைகோ அவர்களுக்கு மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு சால்வை போர்த்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் ஃபவாஸ்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா மைதீன்,சாதிக்பாட்சா,அப்பாஸ்,மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது ராசிக்,பேரூராட்சி கவுன்சிலர் கபார் ,மாணவரணி பொறுப்பாளர்கள் மர்சூத்,ஃபர்சாத்,அசாரூதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.















Saturday, December 13, 2014

வாட்ஸ் அப் (Whats app) பில் மதுக்கூர் தமுமுக
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக ஆரம்ப காலகட்டத்தில் மின்னஞ்சல் (email)மூலமாக நமது வாசகர்களுக்கு மதுக்கூரில் நடைபெறும் நிகழ்வுகளை வழங்கிவந்தோம்.தொடர்ந்து இணையத்தளம்(Website) மூலமாகவும் செய்திகளை update செய்து வந்தோம்.தற்போது முகநூல்(facebook) வாயிலாகவும் மதுக்கூர் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றோம்.காலத்தின் கட்டாயத்தினையும் மக்களின் செல்போன் பயன்பாட்டினையும் கருத்தில் கொண்டு எங்களின் சேவைகளின் ஓர் மைற்கல்லாக வாட்ஸ் அப் (Whats app)மூலமாக மதுக்கூரில் நடைபெறும் நிகழ்வுகளை குறிப்பாக இறப்பு செய்திகளை வழங்க இருக்கின்றோம்.
வாட்ஸ் அப் நம்பர் .....இன்னும் ஒரிரு நாட்களில்..இன்ஷா அல்லாஹ்.

மதுக்கூரில் புதிய வங்கி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி பணியில் தனிக்காட்டுராஜாவாக நிகழ்ந்தது இந்தியன் வங்கி.அதன் பின்னர் முன்னனி வங்கிகள் தங்களது கிளைகளை படிப்படியாக மதுக்கூரில் துவங்க ஆரம்பித்தது.கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கி(SBI) தனது கிளையினை தொடங்கியது.

நேற்று 12/12/2014 மதுக்கூர் மெயின்ரோட்டில் (மஹாராஜா டெக்ரேசன் அருகில்) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)தனது கிளையினை தொடங்கி உள்ளது.இவ்வங்கி சுமார் 3200 கிளைகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(குறிப்பு நேற்று திறக்கப்பட்டாலும் மதுக்கூர் கிளையில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகின்றது.வங்கி தனது வாடிக்கையாளர் சேவையினை தொடங்க ஒருவாரகாலம் ஆகும் என தெரிகின்றது.)

Friday, December 12, 2014

வைகோ மதுக்கூர் வருகின்றார்.

காவிரி அணையில் கர்நாடக அணைகட்டுவது,மீத்தேன் எதிர்ப்பு,பூரண மதுவிலக்கு ஆகியவைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ அவர்கள் இன்று தஞ்சாவூர் அருகில் உள்ள கரிமேடு என்ற கிராமத்திலிருந்து தொடங்கினார்.
இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 15/12/2014 திங்கள் கிழமை காலை 10:00 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பேசுகின்றார்.

இத்தகவலை மதிமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நிர்வாகிகளிடம் தெரிவித்து ஆதரவு கோரினார்கள்.
 



Wednesday, December 10, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் புதுத்தெரு (பெருநாள் கொல்லை தெரு) அப்துல் மஜீது அவர்களின் மகளும்,துபாய் அல் ரியாமி கம்பெனியில் பணியாற்றும் தாஜுதீன் அவர்களின் மனைவியுமான நூரா அவர்கள் இன்று 10/12/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Tuesday, December 9, 2014

 டிசம்பர் 6 2014 தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மேலும் சில புகைப்படங்கள்......................
















கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...