டிசம்பர் 6 போராட்டக்களங்களில் மதுக்கூர் தமுமுக
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விட்டு சங்பரிவார் கும்பல் கி.பி.1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித்தை இடித்தார்கள்.இந்தியாவில் ஒற்றுமையை குலைத்தார்கள்.மதசார்பின்மை பேசிய நமக்கு வரலாற்றில் கருப்பு தினமாக டிசம்பர் 6 பொறிக்கப்பட்டது.
தமுமுக தொடங்கப்பட்ட வருடமான 1995 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.மதுக்கூரிலும் அதற்கான போஸ்டர் ஒட்டினோம்.ஆனால் யாரும் கடையடைப்பு செய்யவில்லை என்பது வருத்தமான தருணம். காலம் சென்ற நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் ஜலீல் மரைக்காயர் அவர்கள்.தம்பி எது எல்லாம் மதுக்கூருக்கு வேண்டாம் என கூறி பள்ளிவாசலில் தயவு செய்து இது குறித்து நோட்டிஸ் வினியோகம் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அதன்படி நடந்து கொண்டோம்.
1996 கவர்னர் மாளிகை முற்றுகை என தலைமை அறிவிப்பு செய்தது.இன்று போல் அன்று சென்னை செல்வதற்கு சொகுசு பஸ்கள் குறைவு எனவே அரசு போக்குவரத்து கழக பேருந்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து இருந்தோம்.காவல்துறையினர் மன்னார்குடியில் எங்களை தடுத்து நிறுத்தி மதுக்கூருக்கு திருப்பி அனுப்பினார்கள்
இப்படியாக 1997,1998 தடையை மீறிய பேரணி,முற்றுமை போராட்டங்கள்.முதன் முறையாக 1999 அனுமதியுடன் ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நமது டெல்டா மாவட்டம் சார்பாக மயிலாடுதுறையில் தலைமை தகவல் தொடர்பு அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் ரிபாய்,பேராசிரியர் ஹாஜா கனி,அன்றைய பொருளாளர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுக்கூரிலிருந்து சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் இரண்டு வேன்களில் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டோம்.
2000 ஆம் வருடம் தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டதில் மதுக்கூரிலிருந்து பெரும்திரளாக பங்குகொண்டோம்.அண்ணன் மறைந்த தமுமுக போராளி ஜமால் முகம்மது அவர்கள் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் வைத்து நல்லபல அறிவுரைகளை வழங்கி எங்களை போராட்ட களத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
1999முதல் இன்று வரை தமுமுக சார்பாக அறிவிக்கப்படும் டிசம்பர் 6 போராட்டங்களங்களில் மதுக்கூர் தமுமுக ஏற்பாட்டின் படி குறைந்தபட்சம் இரண்டு வேன்களில் மக்களை திரட்டி போராட்டங்களங்களில் பங்கொடுத்து வருகின்றோம்.
டிசம்பர் 6 தமுமுக அறிவிக்கும் வீரியமிக்க போராட்ட களங்களுக்கு மதுக்கூரிலிருந்து மக்களை திரட்டி அழைத்து செல்வதில் 2001 ஆண்டு முதல் தமுமுக நகர தலைவராக சிறப்பாக செயலாற்றிய அண்ணன் நாராண்டி ஜெகபர் அலி அவர்கள் இந்த நேரத்தில் நினைக்க தக்கவர்.
ஜனநாயக வழியில் இந்த சமுதாயம் எப்படி போராடவேண்டும் என கற்று கொடுத்த சமுதாய பேரியக்கம் தமுமுக வின் போராட்டங்களை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அதே ஜனநாயக வழி போராட்டங்களை கையில் எடுத்து இருப்பது காலத்தின் கட்டாயம்.அல்ஹம்துலில்லாஹ்.
தாய்கழகம் உங்களை அன்போடு அழைக்கின்றது.டிசம்பர் 6 போராட்டக்களத்திற்கு.கருஞ்சட்டை அணிந்து கம்பீரமாக அனைவரையும் அழைக்கின்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
மதுக்கூர் நகரம்
மதுக்கூர் நகரம்
No comments:
Post a Comment