மதுக்கூரின் முன்னாள் ஜாமியா மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும்,பேரூராட்சி தலைவரும்,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,வர்த்தக சங்க தலைவரும்,சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும்,சிறந்த மேடைப்பேச்சாளருமான மதுக்கூர் மரைக்காயர் ஜனாப் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயரினை நினைவு கூறும் நிகழ்ச்சி மதுக்கூர் படப்பைக்காடு VRT திருமண மண்டபத்தில் கடந்த 10/07/2012 அன்று நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மரைக்காயர் அவர்களின் நண்பருமான M.தண்டாயுதபாணி அவர்கள் தலைமை வசித்தார்
01/02/1940 மதுக்கூரில் பிறந்த T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் 07/07/1987 ஆம் ஆண்டு உளுந்தூர் பேட்டை என்னும் இடத்தில் நடைபெற்ற கோரமான கார் விபத்தில் மரணமடைந்தார்.அந்த விபத்தில் அவருடன் சேர்ந்து மேலும் சிலர் மரணமடைந்தார்கள்.மரைக்காயர் வாழ்ந்தது 47 ஆண்டுகள் என்றாலும் அவர் ஜமாத் தலைவராக இருந்த காலத்தில் மதுக்கூர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தது.T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் மதுக்கூரின் பட்டமில்லாத நிதியரசராக திகழ்ந்தார்.
26/10/1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் காங்கிரஸ்,அதிமுக கூட்டணியின் சார்பாகவும்,ஜனாப் S.சேகனா அவர்கள் திமுக சார்பாகவும்,மற்றும் P.துரைராஜ்,V.R.ஆனந்தராஜன் ஆகியோர் சுயேட்சையாகவும் மதுக்கூர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டனார்,அந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது.மரைக்காயரின் நம்பிக்கைகுரிய MM அல்லாபிச்சை(OPM),MVM அன்சாரி போன்றவர்கள் சொற்ப வாக்குகளின் வெற்றி வாய்ப்பினை இழந்தார்கள்.மனம் தளராத மரைக்காயர் வாக்கு எண்ணும் இடத்திற்க்கு (அரசு மேல்நிலைப்பள்ளி மதுக்கூர் )வராமல் நமதூர் பெரியப்பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.இறைவன் எனக்கு எதை நாடியிருந்தாலும் நன்னையே என பெரியப்பள்ளிவாசலில் இருந்தார்.மாலை இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது மரைக்காயர் வெற்றி பெற்றார்.இது மரைக்காயர் அவர்கள் இறை நம்பிக்கையாளர் என்பதற்க்கு சான்று.( ஆரம்பகாலத்தில் மரைக்காயர் அவர்கள் பெரியார் கொள்ளையின் பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
தொடக்க உரை நிகழ்த்தும் முனைவர் T.A.K.A.அப்துல் காதர் மரைக்காயர்.
மரைக்காயரின் நினைவு கூறும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் J.M.செல்வநாயகம்.
மரைக்காயரின் நினைவு மலரை வெளியீடும் பட்டுக்கோட்டை சார்பு நீதிபதி S.பாஸ்கரன்,அதை பெற்றுக்கொள்ளும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R.ரெங்கராஜன் அவர்கள்
மரைக்காயர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர்
J.ஜான் தனசேகரன்
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் N.R.ரெங்கராஜன்
அதிமுக ஒன்றிய செயலாளர் துரை.செந்தில்
பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N.இராமசந்திரன்
நீதிபதி S.பாஸ்கரன்
பேரூராட்சி தலைவர் N.S.M.பஷீர் அகமது
முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்A.V.சுப்ரமணியன்
முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் R.மாகலிங்கம்
வர்த்தக சங்க செயலாளர் R.பன்னீர் செல்வம்
வர்த்தக சங்க தலைவர் M.S.Aஅப்துல் ரெஜாக்
ஜமாத் தலைவர்P.S.K.N.அமானுல்லா
கம்பன் கழக நிர்வாகி V.R.A.சரவணன்
தொழிலதிபர் S.S.B.பிரகாசம்
T.A.K.A.முகைதீன் மரைக்காயர்
இறுதியில் நடைப்பெற்ற பட்டிமன்றத்தில்S.சத்தியசீலன்,J.இராமகிருஷ்ணன்,A.அறிவொளி
இறுதியில் மரைக்காயரின் மகனார் T.A.K.M.ஆசிக் மரைக்காயர் அவர்களுக்கு விழா குழுவினரின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.
இப்படி எல்லாத்துறைகளிலும் சிறப்பு பெற்ற மரைக்காயர் அவர்களின் இடத்தை நிரம்ப தகுதியானவர்கள் இல்லை என்பது எதர்த்தமான உண்மை.
No comments:
Post a Comment