மதுக்கூர் இராமம்பாள்புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டுகள்,திருட்டு முயற்சிகள் நடந்து வருகின்றது என்பதை நாம் நமது இமெயில் சேவை முலமாக தெரியப்படுத்தி வந்துள்ளோம்.தக்வா மஸ்ஜித் அருகில் உள்ள மர்ஹும் நாகூரார் வீட்டு ரபி அவர்கள் குடும்பத்தினர் நேற்று மாலை 12/06/12 உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனார்.இரவு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார்கள்.இன்று 13/06/2012 காலை வீட்டிற்க்கு வந்துள்ளார்கள்.வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.வீட்டின் அறைகள் திறக்கப்பட்டு பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் நகைகளும்,ரூ 6000/= கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அக்கபக்கத்தில் இருந்தவர்கள்கூடினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்டது சம்மந்தமாக மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை நடத்தினார்கள்.
சென்ற மாதம் இதே பகுதியில் அதாவது திருட்டு நடைபெற்ற வீட்டின் மிக அருகில் உள்ள சகோதரர் ஜமால் முகம்மது வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை நடந்த வீடு
மதுக்கூரின் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் உங்களுக்கு எனது நன்றி
ReplyDeleteமுபாரக் .துபாய்
மதுக்கூரின் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் உங்களுக்கு எனது நன்றி
ReplyDeleteமுபாரக் .துபாய்