இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 27, 2012


விழித்துக்கொள்ளும் திருடர்கள்...உறக்கும் காவல்துறை

மதுக்கூரில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக  நடைபெற்று வருகின்றது.அதுவும் குறிப்பாக இராமம்பாள்புரம் பகுதியில் திருட்டு சம்பவம் நாள்தோறும் அரங்கேருகின்றது.கடந்த மே மாதம் 6 தேதி மஸ்ஜித் தக்வா எதிர்புறம் உள்ள வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது.மே 13 தேதி மஸ்ஜித் தக்வா அடுத்த வீடான  சகோதரர் நாகூரார் ரபி அவர்கள் வீட்டில் சுமார் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.சமீபத்திய தேதிகளில் இடையகாடு,புதுத்தெரு ஆகிய பகுதிகளில் திருட்டு முயற்சிகள் மற்றும் சம்பவங்கள் நடைபெற்றது 

இன்று 27/06/2012 மதுக்கூர் இராமம்பாள்புரம் மஸ்ஜித் தக்வா வலப்புற அமைந்துள்ள துபாயில் கிளினீங் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் சகோதரர் உபயத்துல்லா அவர்களின் வீடு உள்ளது.உபயத்துல்லா அவர்களின் மனைவி கடந்த சிலதினங்களுக்கு முன் அவரின் தாயார் வீட்டிற்க்கு சென்றுள்ளர்.வீடு பூட்டி இருந்தது.வீட்டின் சூழ்நிலையினை அறிந்துகொண்ட மர்ம மனிதர்கள் இன்று வீட்டின் முகப்பு கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து,பின்னர் மெயின் டோரின் லாக்கை தனியாக உடைத்து வீட்டின் அறை கதவினை சேதப்படுத்தி பின்னர் பீரேவினை கடுமையாக சேதப்படுத்தி அதிலிருந்த சுமார் 2 பவுன் மற்றும் இரண்டு டிஜிட்டல் கேமரா,டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.வீட்டில் திருட்டு நடந்துள்ள செய்தி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.ஒரு சம்பிரதய நிகழ்ச்சியாக காவல்துறையினர் வந்து பார்த்து சென்றார்கள்.மற்றபடி எந்த விசாரனையும் மேற்கொள்ளவில்லை.

                                           இன்று கொள்ளை சம்பவம் நடந்த வீடு


                                             உடைக்கப்பட்ட மெயின்டோர் லாக்


எனவே அன்பான நமது இமெயில்,இணையத்தள சகோதரர்களை மதுக்கூரில் நடைபெறும் தொடர் திருட்டுக்கள் பற்றி நீங்களும் அங்கிருந்தபடியே கீழ்கண்ட இமெயில் முகவரிகளில் புகார் செய்யலாம்.
email: cmcell@tn.gov.in,
            spthanjavur@yahoo.com

அறிவுறுத்தல் :நிகழ்ச்சிகளில்,மருத்துவமனைகளில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டில் யாரவது தங்கக்கூடிய சூழ்நிலையினை ஏற்படுத்த சொல்லுங்கள்.கூடுமானவரை  வெளியில் தங்குவதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.இரவு நேரங்களில் வீட்டின் முன்,பின் பக்கங்களில் குறைந்தபட்சம் 0 வேல்ட் பல்புகளையாவது எரியவிடச்சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...