மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே சேவை
மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவை
மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இரயில் சேவை தொடங்கப்போவதாக இரயில்வே நிலைக்குழுத்தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் அறிவித்தார்கள்.இச்சேவைக்காக கடந்த காலங்களில் சர்வே எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சுமார் 3 முறை சர்வே மேற்கொள்ளப்பட்டது.2012 ஆம் ஆண்டு இச்சர்வே இறுதி செய்யப்பட்டதாக தெரிகின்றது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்சேவை மதுக்கூர் வழியா? வடசேரிவழியா ?எந்தவழியாக என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 24/03/2012 அன்று மதுக்கூர் ,பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு வர்த்தகசங்கங்கள்,தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பாரளுமன்ற உறுப்பினரும்,இரயில்வே நிலைக்குழுத்தலைவருமான சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களை சந்தித்து பட்டுக்கோட்டை அரியலூர் இரயில்சேவை வேண்டும் என்ற ஓர் கோரிக்கை மனு அளித்தனார்.
மதுக்கூர் பட்டுக்கோட்டை இரயில்வே சேவையினைப்பற்றி மதுக்கூரிலிருந்து சென்றவர்கள் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள்களிடம் கேட்டபோது.அது மதுக்கூர் வழியாக தான் சர்வேயும் முடிந்துவிட்டது என்ற தகவலை கூறினார்.25/03/2012 முன்னனி செய்திதாள்களில் மேற்கண்ட சந்திப்பு பிரசுரம் ஆனது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்சேவைக்காக முதல் கட்டமாக ரூ 70 கோடி ஓதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.
இதனை தொடர்ந்து 28/03/2012 மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் பாதைத்திட்டம் யாருக்காக? என்ற தலைப்பில் மேற்கண்ட இரயில் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழு என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.
30/03/2012 அன்று மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் ஆதரவு தெரிவித்து மக்களுக்காக என ஒரு சுவரொட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.மேலும் இத்திட்டத்தினை கொண்டுவந்த சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேலும் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.கடந்த 28/04/2012 அன்று மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயிவே திட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்ட சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு தீர்மானத்துடன் நன்றி அறிவிப்பு கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த 01/04/2012 அன்று பட்டுக்கோட்டையில் புதிய இரயில் பாதை போராட்டக்குழு சார்பாக கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிகின்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சாவூர் தொகுதி பாரளுமனற உறுப்பினரும்,மத்திய நிதித்துறை இணைஅமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் மன்னார்குடி,பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் தேவை இல்லை என பேசியதாக கூறப்படுகின்றது.இச்செய்தி 02/04/2012 வெளியான நாளிதழ்களில் வெளியானது.
தஞ்சாவூர் பாரளுமன்ற உறுப்பினர் சகோதரர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இப்படி பேசியது பலருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவையினால ஒரிரு கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றது என்பது உண்மையே.1932 ஆம் ஆண்டு சர்வே எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட பட்டுக்கோட்டை அரியலூர் இரயில் திட்டம் போல மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கத்தில் இத்திட்டத்தை ஆதரிக்கும் ஒருவர் நம்மிடம் கூறினார்.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் நிறைவேறினால் தென்மாவட்டங்களிடம் வர்த்தக தொடர்பு ஏற்படும் என்பது வர்த்தகர்களின் எண்ணமாகும்.
இத்திட்டத்தினை எதிர்த்து பேசியதாக கூறப்பட்ட சகோதரர் பழனிமாணிக்கம் கடந்த 15/04/2012 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே சேவையினை எதிர்த்தவர்களும் பிறகு இத்திட்டத்தினை வரவேற்று இருப்பது சந்தோஷமான செய்தியாகும்.எப்படியோ இத்திட்டம் நிறைவேறினால் நன்று.
No comments:
Post a Comment