இணைவைப்புக்கு எதிரான பொதுக்கூட்டம்
நேற்று 05/06/2012 மாலை பிறை 15 மதுக்கூரில் உள்ள தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது.இக்கந்தூரி விழாவினை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இணைவைப்புக்கு எதிரான பொதுக்கூட்டம் நேற்று நூருல் இஸ்லாம் தெருவில் (டி.எம்.ஏ.அபுபக்கர் வீடு அருகாமையில்) நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டதில் மசூதா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்,மெளலவி அப்துல் காதர் மன்பஈ அவர்கள் இனைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பிலும்,மெளலவி செங்கீஸ்கான் அவர்கள் நபிதோழர்களும்,நாமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்கள்,பெண்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டார்கள்
இக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என காவல் துறையினை நமதூர் ஜமாத் நிர்வாகம் அனுகியது.பலன் கிடைக்கவில்லை.மேலும் பொதுக்கூட்டத்தில் பேசபடும் கருத்துக்கள் வெளியில் யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வருடம் இஸ்லாமிய பாடல்கள் ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக தொடர்ந்து ஒலிபெருக்கியில் போடப்பட்டது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இஷா தொழுகை பங்குக்கு கூட இஸ்லாமிய பாடல்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது.
No comments:
Post a Comment