இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, June 5, 2012



சட்டமன்ற உறுப்பினர்களுடன் மதுக்கூர் தமுமுக & மமக நிர்வாகிகள் சந்திப்பு

கடந்த வாரம் முத்துப்பேட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமுமுக மூத்த தலைவரும்,மமக சட்டமன்ற உறுப்பினருமான போரசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை மதுக்கூர் நகர தமுமுக நிர்வாகிகள் சந்தித்து மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இயங்கும் அரசு மதுபானக்கடைகளை அகற்ற அரசினை வலியுறுத்த  புகைப்படங்களுடன் கூடிய கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.போரசிரியர் அவர்களும் இக்கோரிக்கை சம்மந்தமாக பல ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டை தொகுதிக்காக குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த மதுக்கூர்,அதிராம்பட்டிணம் பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார்.

இந்நிலையின் இன்று 24/05/2012 காலை சுமார் 10:00 மணிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் சந்தித்தனர் மதுக்கூர் பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து தாங்கள் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பதற்க்கு மதுக்கூர் நகர தமுமுக & மமக சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.மதுக்கூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு மக்கள் பணிகள் சம்மந்தமான கோரிக்கை மனு சட்டமன்ற உறுப்பினரிடம் அளிக்கப்பட்டது.

மேலும் கடந்த 14/05/2012 அன்று மதுக்கூரை சார்ந்த சகோதரர் ஹாஜா சேக் அலாவுதீன் (வயது 23) BE மாணவன் கரூர் அருகில் சாலை விபத்தில் வஃபாத்தனார்.இவரின் தந்தை மெளலவி அப்துல் ரஹ்மான் அவர்கள் கட்டிமேடு ஆதிரெங்கம் பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றுகின்றார்.இக்குடும்பத்திற்க்கு முதலமைச்சர் நிவாரணநிதி பெற்றுக்கொடுக்க மதுக்கூர் தமுமுக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.இது சம்மந்தமாகவும் சட்டமன்ற உறுப்பினரிடம் சகோதரர் ஹாஜா சேக் அலாவுதீனின் தந்தை அப்துல் ரஹ்மான் அவர்களும்  மனு ஒன்று அளித்தார்.மாவட்ட ஆட்சியர் முலம் முதலமைச்சருக்கு பரிந்தரை செய்வதாக சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் தெரிவித்தார்கள்

சட்டமன்ற உறுப்பினர்களை சந்திப்பின்போது நகர தலைவர் பெளசூல் ரஹமான்,மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளரும்,பேரூராட்சி கவுன்சிலருமான கபார்,நகர பொருளாளர் ஹாஜா மைதீன்,மாணவர் அணி பெறுப்பாளர்கள் ஜபருல்லா,பவாஸ்கான்,நஸாரூதீன்,முகம்மது ராசிக்  ஆகியோர் உடன் இருந்தனார்.



IMG_1821.JPG

IMG_1820.JPGI
IMG_1853.JPG

IMG_1852.JPG

IMG_1858.JPG

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...