இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, August 23, 2012

 இன்று 23/08/2012 பட்டுக்கோட்டையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மற்றும் பாளையம் ஆகிய இரு இடங்களில் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
முன்னதாக பட்டுக்கோட்டைக்கு முதன்முதலாக வருகை புரிந்த தமுமுக மூத்த தலைவருக்குபட்டுக்கோட்டை கைக்காட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மகரிப் தொழுகைக்கு பின்னர் பட்டுக்கோட்டை பெரியப்பள்ளி ஜமாத் சார்பாக ஜமாத் தலைவர் அமானுல்லா அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் பள்ளிவாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பேராசிரியர் அவர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் சிறு உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...