மதுக்கூரில் மதுக்கடை முற்றுகை தற்காலிகமாக நிறுத்தம்
மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்,பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக குடியிருப்பு பகுதியில் இருக்கின்ற அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக் கடை எண் : 7870) அகற்றக்கோரி இன்று 14/08/2016 மாலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு பின்னர் முற்றுகைப்போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.இதன் காரணமாக இன்று காலை முதலே பரபரப்புடன் மதுக்கூர் காணப்பட்டது.காவல் துறை தீவிர கண்காணிப்புகளிலும் ஈடுபட்டனர்.
நேற்றுவரை மெத்தனமாக இருந்த அரசு நிர்வாகம்.மதுக்கூரில் நடைபெறும் மதுக்கடை முற்றுகை போராட்டத்திற்கு டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து மனிதநேய சொந்தங்கள்,தமுமுக செயல்வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாக உளவுத்துறை தகவலை அடுத்து இன்று மதியம் 1:00 மணியளவில் போராட்டம் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஏற்படுத்தலாம் என்று அரசு துறை சமாதான முயற்சிகள் மேற்கொண்டதின் பெயரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைதி பேச்சுவார்த்தையில் மூன்று மாதத்திற்குள்ளாக முக்கூட்டுச்சாலை மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என எழுத்துபூர்வமாக கொடுத்ததின் பெயரில் இன்று நடைபெறுவதாக இருந்த மதுக்கூர் முக்கூட்டுச்சாலை மதுக்கடை முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்.
அரசு தரப்பு :பட்டுக்கோட்டை வட்டாட்சியர்,மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர்,பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர்,மதுக்கூர் காவல் ஆய்வாளர்,கிராம அதிகாரி ஆகியோர்,
தமுமுக & மமக தரப்பு : மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்,நகர செயலாளர்கள் ராசிக் அகமது (மமக),பவாஸ் (தமுமுக)நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,நகர துணை நிர்வாகிகள் அப்பாஸ்,புரோஸ்,முஜிபுர் ரஹ்மான்,அமீரக நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,நிசார் அகமது,சிராஜுதீன்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்துகொன்டார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

No comments:
Post a Comment