இடையிடாது நடைபெறும் இறை இல்லப்பணி
மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாக்குளம் செல்லும் வழியில் (தோப்புக்காரவீடு ஜக்கரியா அவர்கள்-டைகர் ஜமால் முகம்மது ஆகியோர் வீட்டிற்க்கு எதிர்புறத்தில்) மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு சொந்தமான இடத்தில் மதுக்கூர் மாநகருக்கு மகுடன் சூட்டுவது போன்று மேலும் ஓர் இறைஇல்லம் கட்டுமான பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகின்றது.
அமீரக வாழ் ஒரு சில சகோதரர்கள் குறிப்பாக சகோதரர்கள் SNA புகாரி,PTEA ரகுமத்துல்லா,SNSராவுத்தர் (எ) நைனா முகம்மது ஆகியோர் அமீரக அரபியர் ஒருவரின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து அவரின் எண்ணத்தை பிரதிப்பலிக்கும் விதமாக அவரை சந்தித்து எங்கள் மதுக்கூருக்கு இறைஇல்லம் கட்ட உதவி தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க அன்புடன் இசைந்த அமீரக அரபியர் இடத்தைப்பார்வைவிட வேண்டும் என கூற மதுக்கூர் மாநகருக்கு கடந்த மே மாதம் வருகை தந்து இடத்தையும் பார்வைவிட இறைஇல்லத்திற்க்கும் நிதி உதவி செய்வதாக கூறி முதல் தவணையினையும் அடுத்த நாளே கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இப்படி ஆரம்பமான இறைஇல்ல ஆரம்ப பணிகள் கடந்த 28/07/2012 அன்று கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.மிகவும் சின்ன இடம் இதில் என்ன பள்ளிவாசல் கட்டமுடியும் என அனைவரும் முனுமுனுத்து கொண்டிருக்கையில் மிகவும் அழகாக விரிவாக தனக்கு இறைஇல்லம் கட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாக செய்துகொண்டிருக்கின்றாய் சகோதர அப்துல் காதர் (லக்கி ஹார்டுவேர்ஸ்) அவர்கள்.கடும் வெயில்,மழை நேரங்களிலும் இடையிடாது நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இறைஇல்லப்பணி (அல்ஹம்துலில்லாஹ்)இருதளம் கொண்ட இப்பள்ளிவாசல் மொத்த மதிப்பீடு சுமார் ரூ 23.50 இலட்சம் என தெரிகின்றது.
எவர் ஒருவர் இறைவனை தொழுவதற்க்காக மஸ்ஜித் கட்டுகிறார்களோ மறுமையில் இறைவன் அவர்களுக்காக சொர்க்கத்தில் ஓர் அழகிய வீட்டை கட்டுகின்றான் என்ற நபிகள் பெருமகனார் அவர்களின் கூற்றுப்படி இப்பள்ளிவாசல் கட்டுவதற்க்கு யாரல்லாம் முயற்சி கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய துவா செய்வோம்.
No comments:
Post a Comment