உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - திருச்சியில் நடைபெற்றது
திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மமக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர்கள் கோவை செய்யது,ஆம்பூர்சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா சம்சுதீன் நாசர் உமரி, தருமபுரி சாதிக், மைதீன் உலவி, ராவுத்தர்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக உள்ளாட்சித் துறையில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்படப் பணியாற்றிய வழக்கறிஞர் மஹபூப் அலி அவர்கள் மிகச்சிறப்பாக வகுப்பெடுத்தார். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி பேராசிரியர் அபுல்பைசல் அவர்கள் உள்ளாட்சி சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை விளக்கினார்.
பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மமகவினர் தூய்மையோடு ஆற்றிவரும் அரசியல் பணிகளை சிலாகித்து, மக்கள் விரும்பும் நேர்மையான அரசியலை மமக முன்னெடுக்கும் என்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஹக்கிம், இப்ராஹிம் ஷா, பைஜிஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் புத்துணர்வு பெற்றவர்களாக தங்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்ற நோக்குடன் புறப்பட்டு சென்றனர்.
வெற்றிபெற்ற மமக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்காக சென்னையைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருச்சியில் இரண்டாவது பயிற்சி முகாமை நடத்தி தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment