பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.. .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
மதுக்கூரில் மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம்.
மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பான முறையில் நடந்தது.மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்சா தலைமையிலும்,நகர நிர்வாகிகள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான்.நிசார் அகமது,ராசிக் அகமது ஆகியோர் முன்னிலையிலும் மதுக்கூர் வடக்கு பெரமையா கோவிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மதுவுக்கு எதிரான பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கூர் நகர கவுன்சிலர் சகோதரர் கபார் அவர்கள் மதுவின் தீமைகளைப்பற்றி எடுத்துரைத்தார்.மதுக்கூர் ஆற்றாங்கரையில் நகர நிர்வாகி நிசார் அகமது அவர்களும்,சகோதரர் பவாஸ்கான் அவர்களும் மதுவின் தீமைகளை விளக்கி பேசினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக வெளியிட்டு உள்ள குறுந்தகடு பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.மதுக்கூரில் நடைபெற்ற பரப்புரை யுத்த களத்தில் பேரூந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி ஐயா எனது மருமகன் தினமும் குடித்துவிட்டு வந்து எனது மகளை மிகவும் துன்புறுத்துகின்றார்.நீங்கள் எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என மனதார வாழ்த்தினார்கள்.
இறுதியாக பேருந்து நிலையத்தில் சகோதரர் கபார் அவர்களின் உரையுடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் இனிதே நிறைவுபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.
சுமார் 1500 பிரசுரங்களும் நேற்று இரண்டு மணிநேரத்தில் வினியோகம் செய்யப்பட்டது.மேலும் நாளை மதுக்கூர் முக்கூட்டுச்சாலை,சிவக்கொல்லை பகுதிகளிலும் தொடர்ந்து கிராமபுறங்களிலும் பிரச்சாரம் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்)
No comments:
Post a Comment