இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, December 22, 2014

சரித்திரம்...சகாப்தம்...சந்தைப்பள்ளிக்கூடம் !

நமதூர் சந்தைப்பள்ளிக்கூடம் என அழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகள் வரை பிறந்த பெரும்பாலன மதுக்கூர் இஸ்லாமிய மாணவ,மாணவியர்கள் இப்பள்ளிக்கூடத்தில் தான் தனது ஆரம்பக்கல்வியை துவங்கினார்கள் என்றால் அது மிகையல்ல.




(இது குறித்து நமது மதுக்கூர் தமுமுக madukkurtmmk@gmail.com இமெயிலில் சந்தைப்பள்ளிக்கூடம் ஓர் பார்வை என்று தலைப்பிட்ட கட்டுரை 10/05/2012 அன்று பிரசுரம் ஆகியுள்ளது என்பதை நினைவு கூறுகின்றோம்.)

சந்தைப்பள்ளியின் பழமையான கட்டிடத்தை இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஓர் தீர்வு வரும் என்ற காரணத்தை முன்னிட்டு பெரியவர் ANM முகம்மது அலி ஜின்னா மற்றும் A. ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னின்று இடித்தார்கள்.அந்த நேரத்தில் இது சம்பந்தமாக ஓர் சலசலப்பு வந்தது.பிறகு அச்சலசலப்பு பேச்சுவார்த்தை மூலமாக சுமூக தீர்வு ஏற்பட்டது.

நமதூர் சந்தைப்பள்ளிக்கூடம் புதிய கட்டிடம் கட்ட இன்று 12/05/2012 ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி மூலமாக ஓர் குழு அமைக்கப்பட்டுள்ளது.பின்னர் பேரூராட்சி தலைவர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் பெரும் முயற்சிகளினால் தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

அடிக்கல் நிகழ்ச்சி
ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியோர்கள்,பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி கடந்த 01/05/2013 அன்று நடைபெற்றது.






ஆரம்பக்கட்ட பணிகள்
மதுக்கூரின் மையப்பகுதியில் இருக்கும் இப்பள்ளிக்கூடத்தில் முஸ்லிம் மாணவ,மாணவியர்கள் தான் அதிகமளவில் பயில்கின்றார்கள்.இப்பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படவேண்டும் என்ற முனைப்பு நமதூரில் உள்ள கல்வியாளர்கள் பலர் பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.இறுதியில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது அவர்களும் முயற்சிகள் மேற்கொண்டு பேரூராட்சி தன்னிறைவுத்திட்டம் (நமக்கு நாமே திட்டம்) மூலமாக சந்தைப்பள்ளிக்கூட கட்டிட பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.குறிப்பாக அமீரகம் வாழ் சகோதரர்கள் சந்தைப்பள்ளிக்கூடம் கட்டுவதற்காக சுமார் 13 இலட்சம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.    (பதிவு 12/06/2013 @ madukkurtmmk@gmail.com)

சிலாப்பு போடப்பட்டது
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்) பேரூராட்சி தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் (வெளிநாடு வாழ் மதுக்கூர் சகோதரர்களின்) புதிய கட்டிட கட்டுமான பணிகள் பேரூராட்சி தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களின் தீவிர முயற்சியால் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றது.இன்று 24/09/2013 ஒட்டு எனப்படும் சிலாப்பு போடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..(பதிவு 24/09/2013 @ madukkurtmmk@gmail.com)


பணிகள் நிறைவு
படிபடியாக சந்தைப்பள்ளிக்கூட கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த 28/11/2014 அன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சந்தைப்பள்ளிக்கூட கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால் அதை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்தைப்பள்ளிக்கூடம் புதிய கட்டிடத்தில்  அனைவரின் ஒத்துழைப்பாலும்,பேரூராட்சி தலைவர் சகோதரர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் பெரும் முயற்சியாலும் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் இன்று 22/12/2014 திங்கள் கிழமை பஜ்ர் தொழுகைகு பின்னர் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.














நன்றி
இப்பள்ளிக்கூடத்திற்கு  எல்ல வகையிலும் உதவி புரிந்த முன்னாள்,இன்னாள் ஜமாத் நிர்வாகிகளுக்கும்,பொருளாதார உதவி புரிந்த கொடையாளர்களுக்கும்,கல்வியாளர்களுக்கும்,பேரூராட்சி உறுப்பினர் பெருமக்களுக்கும்,எடுத்துக்கொண்ட பணியினை சிறப்புடன் நிறைவேற்றிய மதுக்கூர் பேரூராட்சி தலைவர் N.S.M. பஷீர் அகமது அவர்களுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகரத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்,நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


(இப்பள்ளியின் அரசு சார்பு திறப்பு நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என தெரிகின்றது)






No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...