இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, May 25, 2017

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக இஸ்லாமிய பிரச்சார பேரவை மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பாக கடந்த நான்கு ஆண்டு காலமாக மதுக்கூரில்
 "வாருங்கள் நன்மையை நாடி " என்ற
தலைப்பில் இஸ்லாமிய மாநாடு,பொதுக்கூட்டம்,கண்காட்சி என மார்க்க நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகின்றோம்.அதன் ஒரு பகுதியாக 

23/05/2017 செவ்வாய் கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெருவில் சகோதரர் S.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோதரர் M.சேக் ராவுத்தர் இறைவசனம் ஓத.சகோதரர் A,தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினர்.முதல் அமர்வில் துவக்க உரையாக சகோதரர் S.M.ஹாஜா மைதீன் அவர்கள் இப்பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து இரத்தின சுருக்கமாக விளக்கினார்.

மெளலவி பிலால் பிர்தெளவ்ஸி அவர்கள் "மரண சிந்தனை " என்ற தலைப்பிலும்,ஆலிமா பர்வீன் பானு அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.

இஷா தொழுகைக்கு பின்னர் இரண்டாவது அமர்வில் மெளலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் "ரமலானும் சஹாபாக்களும்" என்ற தலைப்பில் நீண்ட உருக்கமான உரையினை நிகழ்த்தினர்.ஹுசைன் மன்ப ஈ அவர்களின் உரையின் இறுதியில் தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக ரமலானில் அதிகம் அதிகம் துவா செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிகளை M.கபார் தொகுத்து வழங்கினர்.சகோதரர் A.முகம்மது இலியாஸ்,S.முஜிபுர் ரஹ்மான்,அதிரை அகமது ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சகோதரர் மதுக்கூர் A.ஃபவாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.    
Image may contain: 6 people, people standing



Image may contain: 2 people, people sitting

Image may contain: 4 people


Image may contain: one or more people and crowd

Tuesday, May 16, 2017

மதுக்கூர் புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி

மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மர்ஹும் K.A.ஜமால் முகம்மது அரங்கத்தில் மதுக்கூர் தமுமுக சார்பாக பொதுமக்களின் பொருளாதார பங்களிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்குமான புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி தமுமுக & மமக மாவட்ட பொருளாளர் A.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி,மமக அமைப்பு செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப்,தஞ்சை I.M.பாதுஷா,மதுக்கூர் S.M.ஹாஜா முகைதீன்,மதுக்கூர் A. ஃபவாஸ்கான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்கள்.தமுமுக ஆம்புலன்ஸ் சேவை பாராட்டி மதுக்கூர் பகுதியின் அரசியல் பிரமுகர்கள்,ஜமாத் சங்கங்களின் பொறுப்பாளர்கள்,வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Image may contain: 10 people, people standingNo automatic alt text available.Image may contain: 7 people, people standingImage may contain: one or more peopleImage may contain: 3 people, people playing musical instruments and people on stageImage may contain: 5 people, people standingImage may contain: 6 people, people standing and outdoorImage may contain: 6 peopleImage may contain: 9 people, people standingImage may contain: 4 people, people on stage and people standingImage may contain: 7 people, people standing and people on stageImage may contain: 6 people, people smiling, people standingImage may contain: 7 people, people standing and people sittingImage may contain: 1 person, on stageImage may contain: 2 people, people on stage and people standingImage may contain: 4 peopleImage may contain: 2 peopleImage may contain: one or more people, people on stage and people standingImage may contain: 4 people, people playing musical instruments and nightImage may contain: 6 people, people standing

Saturday, May 13, 2017

பனிரெண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் மாணவ,மாணவியர்களுக்கு பரிசு
நேற்று வெளியிடப்பட்ட +2 தேர்வு முடிவுகளில் மதுக்கூர் அளவில் உள்ள பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களை மதுக்கூரில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பரிசுகள் வழங்கி பாரட்டினார்கள்.
மேனிகா (காந்தி ஸ்கூல்) மதிப்பெண் 1133
அகமது ஜாசிம் (பாத்திமா ஸ்கூல்) மதிப்பெண் 1131
சங்கீதா (பெண்கள் மேல்நிலைப்பள்ளி) மதிப்பெண் 1129
சேக் அஸ்மான் (ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) மதிப்பெண் 1027
Image may contain: 5 people, people standingImage may contain: 5 people, people standingImage may contain: 3 people, people standingImage may contain: 3 people, people standing

Saturday, March 18, 2017

சட்டமன்ற உறுப்பினருடன் மமக வினர் சந்திப்பு
மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்ற 25/03/2017 சனிக்கிழமை மதுக்கூர் பேரூர் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் ஒரு நாள் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
அதை அறிந்த தொகுதி (பட்டுக்கோட்டை )சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் அரசு நிகழ்ச்சிக்காக மதுக்கூர் வருகை தந்தபோது மனிதநேய மக்கள் கட்சியினரை சந்திக்கவேண்டும் என அழைப்பு விடுத்ததின்பெயரில் தமுமுக & மமக பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில்,மாவட்ட செயலாளர் கபார்,பேரூர் கழக நிர்வாகிகள் நிசார் அகமது,ஹாஜா மைதீன் ஆகியோர்அரசு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு சென்ற மமகவினரை அன்புடன் வரவேற்று கோரிக்கையினை கேட்டு கூடிய விரைவில் மதுக்கூருக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படுவார் என்ற தகவலுடன் கூடுதலாக மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைஅரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பொதுமக்கள் அனைவரின் முன்னிலையில் பேசினார். மமக வினரின் போராட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார். பேரூர் கழகத்தின் ஆலோசனைக்கு பின்னர் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும். (இன்ஷா அல்லாஹ்)
(முன்னதாக மதுக்கூரில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்களுக்கு மதுக்கூர் பேரூர் கழத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.)




Saturday, January 21, 2017

தமிழர்களின் கலாச்சார போராட்ட களத்திற்கு மத்தியில் தமிழர்களின் உயிர் நாடியான விவசாயத்திற்கான போராட்டம் "சோறுடைத்த சோழ நாட்டின் தலைநகர் தஞ்சையில் சோற்றுக்காக வழி இன்றி வாடும் விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனவரி 19 தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்ட பத்திரிக்கை செய்திகள்.



Tuesday, January 10, 2017

புதுமனை புகு விழா
மதுக்கூர் (அமீரக) தமுமுக செயல் வீரர் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா

மதுக்கூர் இடையகாடு (சபுரா காலணி) அருகில் சகோதரர் ஜிப்ரில் அவர்களின் புதுமனை புகுவிழா நாளை ஹிஜ்ரி 1438 ரபிய்யுல் ஆகிர் பிறை 12 ( 11/01/2017 புதன்கிழமை) நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஜிபிரில் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். 

சந்தேகத்தை வெளிப்படுத்தும் போது ஓதும் துஆ

Wednesday, December 21, 2016

புதிய ஆம்புலன்ஸுக்கு நிதி தாரீர்..
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்((தமுமுக) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படுகின்ற வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டு சிறப்புடன் சேவையை செய்து வருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது பழைய ஆம்புலன்ஸை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் மூலம் சேவையை இன்னும் துரிதப்படுத்தலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக நிதி வேண்டி உங்களை எல்லாம் சந்திக்க வர உள்ளோம்.இன்ஷா அல்லாஹ்.
அள்ளிக்கொடுக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களே ஆம்புலன்ஸ் சேவைக்கான நிதி தாரீர் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)
மதுக்கூர் பேரூர் கழகம்.

Sunday, December 11, 2016

மதுக்கூர் பேரூர் கழக மனிதநேய மக்கள் கட்சி துணைச்செயலாளர்  சகோதரர் M.அப்பாஸ் அவர்களின் நிக்காஹ்.

மணமக்கள்
M.அப்பாஸ் (த/பெ முகம்மது முஸ்தபா)
B.ஆமினம்மாள் (த/பெ பகுருதீன்)

மணநாள்
ஹிஜ்ரி 1438 ரபியுல் அவ்வல் பிறை 11 (12/12/2016 திங்கள் கிழமை)

இடம் : MSA திருமண மஹால்.மதுக்கூர்.

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.
(அல்லாஹ் உமக்கு அருள் வளம் புரியட்டும்.உங்கள் இருவருக்கும் சுபிட்சம் பொழியட்டும்,நன்மையில் உங்கள் இருவரையும் இணைக்கட்டும்)

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
மதுக்கூர் பேரூர்.

Saturday, October 22, 2016



                                      சிங்கத்துரை (அல்ல)தங்கத்துரை
மதுக்கூர் அருகில் உள்ள கிராம ஊராட்சி தலைவரின் அரிய முயற்சி !
உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!


தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள். குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!
“வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.
ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.
என்ன இல்லை எங்கள் பள்ளியில்?
“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.
ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.
நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.
ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.
கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.
அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!
இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!
அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.
அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள். இது மட்டுமா?
நன்றி : தி இந்து தமிழ் (22/10/2016)

Wednesday, October 19, 2016

தலைமை எங்களுக்கு ஆணையிட்டால்...
தவறாமல் செய்து முடிப்போம்...இன்ஷா அல்லாஹ்.

ஷரீ அத் சட்டத்தைப் பாதுகாக்க தமுமுக தலைமை உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றது.தமுமுக தலைமை இன்று அறிவிப்பு செய்தது.தலைமையின் ஆணையின்படி கையெழுத்து இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்  17/10/2016 சகோதரிகளிடமிருந்து தொடங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.





Tuesday, October 11, 2016

வக்ப் செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ்வின் பேராருளாலும் மறைந்த பெரியவர்கள் மர்ஹும் அப்துல்லா (பஞ்சாயத்துபோர்டு),மர்ஹும் முகம்மது சாலின் (மூட்டை பூச்சி ஆலிம்ஷா) உதவியுடனும்,மறைந்த பெரியவர் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் சீரிய நிர்வாகத்தாலும்,உழைப்பாலும் பல முயற்சிகள் மேற்கொண்டதின் காரணமாக அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட இறை சொத்துக்களான கீழ்கண்ட சொத்துக்களூம் மற்றும் அதன் சார்பு நிர்வாகமும் தற்போது மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி வசம்வக்ப் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.




1.மதுக்கூர் இராமம்பாள் புரத்தில் உள்ள தக்வா பள்ளிவாசல் (சமீபத்தில் சகோதரர் கமாலுதீன் ஹதியா செய்த 4 குழி உட்பட மொத்தம் 28 குழி மற்றும் பயன்பாட்டில் உள்ள பொருட்கள்)
2.மதுக்கூர் இந்திரா நகரில் சகோதரர் நத்தர்ஷா அவர்கள் ஹிப்பத் மூலம் அளித்த இடம்.(தற்போதைய மக்கா மஸ்ஜித்)
3.மதுக்கூர் இடையகாடு ஷேக் நசுருதீன் (பூண்டியார்) அவர்கள் ஹிப்பத் மூலம் எழுதி கொடுத்த இடம் (தற்போதைய குர் ஆன் மதரஸா)
4.மதுக்கூர் படப்பைக்காட்டில் முகம்மது ராசுத்தர் மகன் முகம்மது தாவூத் அளித்த இடம்.
மேற்கண்ட அனைத்தும் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களால் அல்லாஹ்வின் உதவியினை கொண்டு உள்ளூர் ,வெளியூர் கொடை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களால் மிகச்சீரிய மார்க்கப்பணிக்காக உழைப்பாலும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.இப்பணிகளுக்காக உழைத்த சகோதரர்கள் ஜமால் முகம்மது (ஆனந்த),SPN நைனா முகம்மது,VM முகம்மது இஸ்ஷாக்,மர்ஹும் ASM ஜக்கிரியா,A.ஜாகீர் உசேன்,NPMF ரியாஸ் அகமது,SMR அப்துல் ஹமீது,KNM அப்துல் மாலிக் ஆகியோருக்கு அல்லாஹ் அருள் புரியட்டுமாக.
கடந்த இரண்டு வருடங்களாக இச்சொத்துக்களை பெரியப்பள்ளி நிர்வாகத்திடம் வக்ப் செய்யப்போவதாக மறைந்த ANM முகம்மது அலி ஜின்னா அவர்கள் கூறி அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.தற்போது அன்னாரின் மறைவுக்கு பின்னர் அன்னாரின் எண்ணத்தின் பெயரில் அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து சொத்துக்களும் ஜாமியா மஸ்ஜித் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் இல்லத்தில் வைத்து ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திடம்வக்ப் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய நற்பணிக்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் என்றென்றும் அருள் புரியட்டும்.



Saturday, September 24, 2016

அதிகார பூர்வ அறிவிப்பு

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி மதுக்கூர் பேரூராட்சி வார்டுகள் ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
மதுக்கூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு,

பெண்களுக்கு 1, 4, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள்.

ஆண்களுக்கு 2,5,6,7,13,14,15

அன்புடன்
தமுமுக & மமக
மதுக்கூர்.
வாழ்த்துகின்றோம்...
 

மதுக்கூர் புதுத்தெருவை சார்ந்த அன்பு சகோதரர் நத்தர்ஷா அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (TNCSC) தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் பொறுப்பிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளராக (REGIONAL MANAGER of TNCSC) பொறுப்பு ஏற்க உள்ளார்கள்.
சகோதரர் நத்தர்ஷா அவர்களுக்கு 
எங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி

மதுக்கூர்.

Wednesday, September 7, 2016

உள்ளாட்சி  தேர்தல் அதிமுக தீவிரம்

இன்னும் ஒரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .உள்ளாட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றது.அதன்படி மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இன்று அதிமுக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டது.
 

  •  08 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் சூரியத்தோட்டம் மற்றும் மேலசூரியத்தோட்டம்  வார்டுகள்  போட்டியிட பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஜெ.ஆனந்தன்,

  • 11 வது வார்டு புதுத்தெருவில் முகைதீன் மரைக்காயர்,சிப்பி அப்துல் காதர்,முகம்மது யாக்கூப் 

  • 4 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் மாரிமுத்து,முன்னாள் நகர செயலாளர் மெட்ரோ சாகுல்,சேட் வாவா என்கின்ற அப்துல்லா, 


  • 5வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் சுரேஷ்,

  •  
  • 6வது வார்டு மெயின்ரோடு மெளலான தோப்பு நிஜாம் ராஜா,பஷீர் அகமது, திருப்பதி ராஜ்



  • 10 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர்  நாகூர்கனி,

  • 12 வார்டு பள்ளிவாசல் தெருவில் முத்துமுகம்மது.வசந்தம் சாகுல் ஹமீது,ரகுமத்துல்லா,செய்யது முகம்மது.

  • 13 வது வார்டில்(பெரியச்செட்டித்தெரு) போட்டியிட திருநாவுச்சரவு,

  • 14 வது வார்டில் நகர செயலாளர் எழுத்தர் ஷரீப்,

  • 9வது வார்டில் சாகுல் ஹமீது,நாகராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tuesday, August 30, 2016

மதுக்கூரில்

கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தரக்கோரி இன்று விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் மமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

மனிதநேய மக்கள் கட்சி தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எம்.கபார்.தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.



மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரமருத்துவர்கள் நியமிக்க மமகவினர் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை..

மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர்கள் பணி அமர்த்த கோரி இன்று மாவட்ட ஆட்சி தலைவரை மனிதநேய மக்கள் கட்சியினர் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இக்கோரிக்கை மிக முக்கியமானது எனவும் அவசியமானது எனவும் பலதரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து.

இச் சந்திப்பில் மமக மதுக்கூர் நகர செயலாளர் ராசிக் அகமது, துனை செயலாளர் சபீர் அகமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...