இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, July 7, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 07

சரியான பதில்கள்

சரியான பதில்கள் மொத்தம் 6 நபர்கள் எழுதியிருந்தார்கள்.அவர்களில் சகோதரர்  முகம்மது தாஹா அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசு பெறுகின்றார்.

1.குர் ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழரின் பெயர் என்ன ?
நபி ஸல் அவர்களின் வளர்ப்பு மகன ... ஜைது பின் ஹாரிஸா ரலி
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்துநீரும் அவர் மீது அருள் புரிந்தீரோஅவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் ம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்உம்மிடமே நிறுத்திவைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததைமனிதர்களுக்குப் பயந்து நீர்உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்ஆனால் அல்லாஹ் அவன் தான்நீர் பயப்படுவதற்குத்தகுதியுடையவன்ஆகவே ஜைது அவள விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம்செய்வித்தோம்ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்துவளர்க்கப்பட்டவர்கள்தம் மனைவிமார்களைவிவாகரத்துச் செய்து விட்டால்(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொருதடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இதுநடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர் ஆன் 33:37 )

2.நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு எத்தனை குழுந்தைகள் ? அவற்றில் ஆண் குழந்தை எத்தனை ?பெண் குழந்தை எத்தனை ? 

நபி  ஸல் அவர்களின்  பிள்ளைகளின் விவரங்கள்...
ஆண் மக்கள்
1.காசிம்
2.அப்துல்லாஹ்
3.இப்ராஹீம்  -
ரலியல்லாஹு அன்ஹு (இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மரணம் அடைந்துவிட்டது குறிப்பிடதகுந்தது.)
பெண் மக்கள்
1.ஜைனப்
2.ருக்கையா
3.உம்மு குல்தூம்
4.ஃபாத்திமா
ரலியல்லாஹு அன்ஹா

3.வஸியத்து என்றால் என்ன என  அல குர் ஆன் கூறுகின்றது ?

உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின்அவர்(தம்பெற்றோருக்கும்பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வதுவிதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவதுமுத்தகீன்கள்(பயபக்தியுடையோர்)மீது கடமையாகும். (அல்குர் ஆன் 2:180)

சரியான பதில்கள் மொத்தம் 6 நபர்கள் எழுதியிருந்தார்கள்.அவர்களில் சகோதரர்  முகம்மது தாஹா அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசு பெறுகின்றார்.

(வெற்றி பெற்றவருக்கு பரிசினை வழங்குபவர் K.T.M.நிசார் அகமது அவர்கள்.)
ரமலான் பரிசுப்போட்டி பிறை 08 

கேள்விகள்

1.இரு கடல்களுக்கு இடையே தடுப்பு இருப்பதாக அல்லாஹ் கூறும் வசனம் எது ?

2.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன் மதீனாவுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க அனுப்பபட்ட நபிதோழர் யார் ?

3.குர் ஆனில் எந்த அத்தியாயம் பிஸ்மில்லாஹ் இன்றி துவங்குகிறது ?

(பிறை 07 க்கான விடைகளும் பரிசு பெற்றவர் விபரமும் மாலை வெளியிடப்படும்)

Sunday, July 6, 2014

அன்பான சகோதரர்களுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தாங்கள் சீரிய இஸ்லாமிய சிந்தனைகளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கின்றோம்.

அள்ளித்தாருங்கள்.

1995 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையாலும் தங்களை போன்ற தட்டிகொடுக்கும் நல்ல உள்ளங்களின் பெரும் ஆதரவுடன் சிறப்பாக நமதூரிலும் செயல்படுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த ஆண்டு உங்களிடம் தொடர்ந்து பொருளாதார உதவிகள் கேட்டு வந்தோம்.இல்லை என கூறாமல் அள்ளிக்கொடுத்தீர்கள். (நாடாளுமன்ற தேர்தல் நிதி,முசாபர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி,வாருங்கள் நன்மையை நாடி..மாநாட்டு நிதிஎன எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள்.(ஜஸக்கல்லாஹு கைர் )

இந்த ஆண்டு ரமலானில் நீங்கள் அளிக்கக்கூடிய ஜக்காத் மற்றும் ஸதக்காவில் ஒரு சிறு பங்கினை கொடுத்து எங்களின் சமூக,சமுதாய பணிகள் மேலும் வளர்ச்சி பெற உதவி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர் நகரம்
தஞ்சாவூர் மாவட்டம்

வங்கி கணக்கு விபரம்
BOUSUL RAHMAN,HAJA MOHIDEEN
SB A/C No:045 730 1000 026 440
LAKSHMI VILAS BANK
MADUKKUR BRANCH
IFSC Code: LAVB0000457

ரமலான் பரிசுப்போட்டி பிறை 07

கேள்விகள்

1.குர் ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழரின் பெயர் என்ன ?

2.நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு எத்தனை குழுந்தைகள் ? அவற்றில் ஆண் குழந்தை எத்தனை ? பெண் குழந்தை எத்தனை ? 

3.வஸியத்து என்றால் என்ன என  அல் குர் ஆன் கூறுகின்றது ?

(பிறை 07 க்கான பரிசை வழங்குபவர் K.T.M.நிசார் அகமது அவர்கள்)

ரமலான் பரிசுப்போட்டி 06 விடைகள்

1.பிர் அவ்னின் உடலை மறுமை நாள் வரையில் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறும் வசனம் எது.

"உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.  (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். ( Al Quran 10 :92 ) " 

2.இல்லிய்யின் என்றால் என்ன ?

"அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?அது (செயல்கள் )எழுதப்பட்ட ஏடாகும்." ( Al Quran  83: 18-20 )

3.உங்கள் வீடு அல்லாத மற்றவர்களுடைய வீட்டில் நுழையும் போது எவ்வாறு நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (Al Quran 24 : 27)

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! 'திரும்பி விடுங்கள்!' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.(Al Quran 24 : 28)

யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.(Al Quran 24 : 29 )

ரமலான் பரிசுப்போட்டி 06 மொத்தம் 19 சகோதர,சகோதரிகள் சரியான பதிலை எழுதியிருந்தார்கள்.
அவர்களின் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்.சகோதரர் ஜவஹர் அவர்கள்

Saturday, July 5, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 06

கேள்விகள்

1.பிர் அவ்னின் உடலை மறுமை நாள் வரையில் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறும் வசனம் எது.

2.இல்லிய்யின் என்றால் என்ன ?

3.உங்கள் வீடு அல்லாத மற்றவர்களுடைய வீட்டில் நுழையும் போது எவ்வாறு நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(குறிப்பு: ஒரே நபர் முகநூல் மற்றும் இமெயிலில் விடைகளை எழுதவேண்டும்.எதாவது ஒன்றில் விடைகளை எழுதினால் போதுமானது.சிலர் இரண்டிலும் வெவ்வேறு பெயர்களில் ஐடி வைத்துள்ளார்கள்)
கேள்விகள் அல் குர் ஆனிலிருந்து கேட்கப்பட்டால் கண்டிப்பாக அத்தியாயம் மற்றும் வசன எண்களை குறிப்பிடவும்)

பிறை 05 கேள்விக்கான பதில்களும் வெற்றி பெற்றவர் விபரம் சில நிமிடங்களில்....

நிபந்தனை

1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.

Friday, July 4, 2014

ரமலான் பரிசுப்போட்டி
பிறை 05
கேள்வி
1.நுஹ் நபியின் கப்பல் எந்த மலை மீது இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனத்தை எழுதவும்.
2.பிர் அவ்னின் மனைவி ஆஸியா அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை என்ன ? குர் ஆன் வசனத்தை எழுதவும்.
3.எந்த ஸஹாபியுடைய காலடி ஒசை சொர்க்கத்தில்கேட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறை 04 க்கு சரியான பதில் எழுதியவர்கள் இருவர் அவர்களின் 1.முகம்மது தாஹா,2 அஸ்மா இருவரில் சகோதரி அஸ்மாஅவர்கள் பரிசுக்கான நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிறை 04 கேள்விக்கான பதில்கள்
1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது ?
போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)
2.பஜ்ர் நேரத்தில் குர் ஆன் ஓதுவதினால் என்ன சிறப்பு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான் ?
பஜ்ர் தொழுகையில் ஒதக்கூடிய குர் ஆன் நமக்கு மறுமையில் சான்று கூறுவதாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.( அல்குர் ஆன் 17 : 78)
"நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.:
3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கண் தெரியாத ஓர் சஹாபி பங்கு சொன்னார்.அவரின் பெயர் என்ன
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்கள்
பிறை 04 க்கான பரிசு பொருள் வழங்குபவர் சகோதரர் தீன் முகம்மது (சங்கேந்தியார்).வெற்றி பெற்ற சகோதரருக்கு பரிசுப்பொருள் வீடு தேடி கொடுக்கப்படும்.
(இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுக்கொடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்)
நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
6.உங்களின் பதில்களை madukkurtmmk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும்,madukkurtmmk என்ற முகநூல் inboxக்கும் அனுப்பி வைக்கலாம்.

Thursday, July 3, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் இடையகாடு இந்திரா நகர் (சபுரா காலணி அருகில் ) ஹாஜி முகம்மது,எலக்ரீசியன் பாஸ் என்கின்ற ரஹ்மதுல்லா ஆகியோரின் தாயார் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாத்திமா பிவீ அவர்கள் இன்று 03/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி

பிறை 04 (03/07/2014)கேள்விகள்

1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது ?

2.பஜ்ர் நேரத்தில் குர் ஆன் ஓதுவதினால் என்ன சிறப்பு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கண் தெரியாத ஓர் சஹாபி பங்கு சொன்னார்.அவரின் பெயர் என்ன ?

நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.

3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.

4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)

5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.

6.உங்களின் பதில்களை madukkurtmmk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும்,madukkurtmmk என்ற முகநூல் inboxக்கும் அனுப்பி வைக்கலாம்.

பிறை 03 (02/07/2014) ரமலான் பரிசுப்போட்டியில் வெற்றி பெற்றவர் விபரம் ....சிலநிமிடங்களில்...

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.
 
Wednesday, July 2, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்
முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி
பிறை 03 (02/07/2014) கேள்விகள்
1.அல்லாஹ் தனது அருள்மறை திருக்குரானில் நோன்பு யாரின் மீது எல்லாம் கடமை என கூறுகின்றான்.என்ற அத்தியாயம் மற்றும் வசனத்தின் எண்ணை குறிப்பிடவும்.
2.அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது வயதில் நபித்துவம் கிடைத்தது.
3.இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு ரமலான் எத்தனையாவது மாதம் ?
நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் நெ.ப.அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,மர்ஹும் தா.செ.அ.முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,TSAM அப்துல் காதர்,TSAM அப்துல் வாஹீது,TSAM ஜாகீர் உசேன் ஆகியோரின் தாயாரும்,TAKAமுகைதீன் மரைக்காயர் அவர்களின் மாமியாருமான சுபைதா பீவி அவர்கள் இன்று 03/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Tuesday, July 1, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்
முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP) மதுக்கூர் நகர கிளையின் சார்பாக இமெயில்,முகநூல் வாசகர்கள் கலந்துகொள்ளும் ரமலான் பரிசுப்போட்டி.தினமும் அல் குர் ஆன் மற்றும் எம்பெருமனார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்து (ஹதீஸ்) 3 கேள்விகள் கேட்கப்படும்.
சரியான விடை எழுதும் மதுக்கூர் வாசகர் ஒருவருக்கு அவர் வீடு தேடி பரிசு பொருள் வழங்கப்படும்.
நிபந்தனை

1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.

3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.

4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)

5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை(IPP)
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.

Friday, June 27, 2014

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவரும்,சிறந்த சேவகருமான சகோதரர் பெளசூல் ரஹ்மான் அவர்களின் அன்பு சகோதரர்களின் புதுமனை புகு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.

பெரியவர் அபுபைதா அவர்கள் குடும்பத்தினருக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

Thursday, June 26, 2014

அன்பான சகோதரர்களே ! நம் அனைவரின் மீது ஏக நாயன் அல்லாஹ்வின் அன்பும்,கருணையும் என்றும் நிலைத்து நிலவட்டுமா !

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்".

நம்மை நோக்கி சங்கைமிகு ரமலான் வந்து இதோ வந்துவிட்டது.சென்ற ரமலானில் நம்முடன் இருந்த நமது அன்புக்குரியவர்கள் இடம் மாறி சென்று இருக்கின்றார்கள்.இறந்தும் இருக்கின்றார்கள்.ஆனால் நமது செயல்பாட்டில் மாற்றமில்லை.காரணம் நாம் நமது மார்க்கத்தை முழுமையாக இன்னும் கடைபிடிக்கவில்லை...இன்னும் எத்தனை ஆண்டுகள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகின்றோம்.ஓர் நாள் கடுமையான வேதனைகள் நிறைந்த கப்ருவை காண இருக்கின்றோம்...நிரந்தரமானவாழ்க்கையினை உடைய மறுமையை நேசிக்க இருக்கின்றோம்.அர்ஷில் அல்லாஹ்வை காண இருக்கின்றோம் (இன்ஷா அல்லாஹ்) இவை எல்லாம் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நாம் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காட்டிதந்த போதனைகளை பின்பற்ற மறந்துவிட்டோம்.

இந்த தவறு இந்த ஷாபானுடன் போகட்டும்.வருகின்ற ரமலான் நம்மை உண்மையான முஸ்லிமாக பக்குவப்படுத்த வேண்டும் இதற்காக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.நிச்சயமாக நமது நல்ல முயற்சி ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நம்முடன் துணைநிற்பான்.புறம் பேசுவதை புறந்தள்ளிவிடுவோம்.அவதூறுகளை அறவே இல்லாமல் ஆக்குவோம்.வீண் பேச்சுக்களை தவீர்ப்போம்.வம்பு சண்டைகளை விரட்டுவோம்.பொய் பேசுவதை முற்றிலுமாக ஒழிப்போம்.இறையச்சம் உடைய இறை விசுவாசியாக மாறுவோம்..இறையச்சமுடைய நல்ல அடியானாக மரணிப்போம்.இன்ஷா அல்லாஹ்..

(இதுநாள் வரை எங்களின் பதிவுகளில் யாரையும் மனம் வேதனையடையும்படி பேசியதாக,எழுதியதாக கருதி இருந்தால் அன்பு கூர்ந்த சகோதரர்களை மனப்பூர்வமாக எங்களின் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

Monday, June 23, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் H.R.ஹலீல் ரஹ்மான் (HR MAN),மர்ஹும் ஆரிபு (அண்ணா இல்லம்),சாகுல் ஹமீது,அல்லாப்பிச்சை ஆகியோரின் மாமியாரும்,HRHஅப்துல் ஹமீது,HRH அக்பர் அலி ஆகியோரின் பாட்டியாருமான (அம்மா வழி) முகம்மது பாத்திமா அவர்கள் இன்று 23/06/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Thursday, June 19, 2014

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (கமாலியா தெரு) கடந்த ஞாயிற்றுக்கிழமை 15/06/2014 அன்று எளிமையாக நடைபெற்ற திறப்பு விழாவில்சபுரா அம்மாள் பெண்கள் மதஸரா திறந்து வைப்பட்டது..இம்மதரஸா நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் தனது தாயார் பெயரில் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 18, 2014

மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் மதுக்கூர் நகர தமுமுக சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 18/06/2014 புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஃபவாஸ் அவர்கள் தலைமை ஏற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மாவட்ட துணைச்செயலாளர் E.S.M. ராசிக்,மதுக்கூர் முன்னாள் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் சகோதரர் பழனி M.I.பாரூக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.முடிவில் அமீரக யு.ஏ.இ.தமுமுக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் ராவுத்தர்ஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Saturday, June 14, 2014

 மதுக்கூரில் சபுரா அம்மாள் பெண்கள் தராவீஹ் பள்ளி & மதரஸா

மதுக்கூர் சூரியத்தோட்டம் (லக்கி ஹார்டுவேர்ஸ் பின்புறம்) நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் (மலேசியா) அவர்கள் தனது தாயார் சபுரா அம்மாள் அவர்களின் பெயரில் புதிய பெண்கள் தராவீஹ் பள்ளி மற்றும் ஓர் ஆலிமாவை நியமனம் செய்து அல் குர் ஆன் கற்றுக்கொடுக்கும் மதரஸா திறப்பு நிகழ்ச்சி நாளை தினம் நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்..

சகோதரரின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியினை வழங்க துவா செய்கின்றோம்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் முகம்மதியர் தெரு ஜமால் மளிகை மர்ஹும் செய்யது உசேன் அவர்களின் மனைவியும்,மர்ஹும் சதக்கத்துல்லா,ஜமால் மளிகை உரிமையாளர் ஜமால் முகம்மது ஆகியோரின் தாயாருமான் பாத்திமா பீவி அவர்கள் இன்று 14/06/2014 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...