இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, June 4, 2012


பெட்ரோல் விலை ஏற்றம்... மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்


இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு 159 ரூபாய் மட்டும் வாடகை செலுத்தும் மேற்கு வங்காள அரசு... தொடரும் வக்ஃபு முறைகேடுகள்


பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களுக்கு மாதம் 159 ரூபாய் மட்டும் வாடகை கொடுக்கிறார்கள். இவர்கள் தாதாக்களோ, ஆதிக்க வெறிபிடித்த பண முதலைகளோ அல்ல. மேற்கு வங்காள மாநில அரசுதான் இத்தகைய சாதனைக்கு(?) சொந்தக்காரனாக விளங்குகிறது.
ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், தலைமைச் செயலகம் செயல்படும் வில்லியம்ஸ் கோட்டை, சீதாபூர் மதரஸா மற்றும் அதைச் சார்ந்த மைதானம் (ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது), இவ்வாறு முக்கிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து மேற்கு வங்காள அரசு அற்பசொற்ப வாடகை கொடுத்து வந்தது நாட்டு மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.
2555 பிகாசாவுள்ள (511 ஏக்கர்) நிலத்திற்கு மாநில அரசு 159 ரூபாய் மட்டுமே மாத வாடகை செலுத்துகிறது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
இந்த 159 ரூபாய் மாத வாடகைக் கூட 1999ஆம் ஆண்டு வரைதான் கொடுத்து வந்தது. அதன்பிறகு அதனைக்கூட நிறுத்திவிட்டது. மேற்கூறப்பட்ட வக்ஃபு சொத்துக்களுக்கு முத்தவல்லியான மவ்லவி அபுல் பரகாத் தனது 99ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசும் மகனுமான அபுநயீம் சித்தீக்கியிடம் ஒரு பைசாகூட அரசால் வழங்கப்படவில்லை.
கொல்கத்தாவின் பல்லாயிரம் கோடி வக்ஃபு சொத்துக்களின் முத்தவல்லி அபூநயீம் சித்தீக்கி...

வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் நவாபாக இருந்த நவாப் அலி வர்திகான், சீதாபூர் மஸ்ஜித் மற்றும் மதரஸாவைப் பராமரிக்கும் செலவு வகைக்காக மவ்லவி சம்சுத்தீன் மற்றும் மசியுத்தீன் ஆகிய இருவருக்கும் கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நிலங்களில் பிரம்மாண்டமான அரசு கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்காக மிகப்பெரிய தொகையாக(?) 159 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.
எந்த மஸ்ஜித் மற்றும் மதரஸாவின் பராமரிப்புக்காக சொத்துக்கள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை. மதரஸாவும், மஸ்ஜிதும் பாழடைந்த நிலையில் உள்ளன என்பதுதான் பெரும் சோகம்.
வில்லியம் கோட்டை, ராஜ்பவன், புகழ்பெற்ற ஈடன் கார்டன் உள்ளிட்ட பானிபவான் மைதானம் முதலிய முக்கிய இடங்கள் அனைத்தும் தங்களது மூதாதையர்களின் சொத்துக்களே என பெருமிதத்துடன் கூறுகிறார். ஆனால் இவர்களது உரிமையை மறுத்து நியாயமான தொகையை வழங்க மறுத்து அரசுகள் வீண் பிடிவாதம் காட்டி வருவதாக வருந்துகிறார்.
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் காலம் தொடங்கி ஜவஹர்லால் நேரு தொடர்ந்து இந்திரா காந்தி, ஜோதிபாசு போன்றவர்களின் காலங்களில் கூட நியாயம் வழங்கப்படவில்லை.
சீதாபூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் 1772ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு மாதம் 158 ரூபாய் வாடகைத் தொகையாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக அபூநயீம் சித்தீக்கி கூறுகிறார். அதன்பிறகு ஒரு ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடடா, என்ன நேர்மை? 17ஆம் நூற்றாண்டில் முர்ஷிதாபாத்துக்கு வருகை தந்த நவாப் அலி வர்திகான், ஹூக்ளி மாவட்டத்தில் 15 ஆயிரம் பிகா நிலமும் (3000 ஏக்கர்), ஹவுரா மற்றும் 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் 2555 பிகா நிலங்கள் (511 ஏக்கர்) வழங்கப்பட்டன. இன்று இவை அனைத்தும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளின் முக்கிய சொத்துக்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அநீதிகள் தொடர்கின்றன.
தனி நபர்கள் முறைகேடு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். அரசாங்கமே முறைகேடு செய்தால் எங்குபோய் முறையிடுவது? முறையான, நீதியான நிர்வாகம் பற்றி வாய்கிழியப் பேசும் மம்தா பானர்ஜி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

Saturday, June 2, 2012


மணமகன் 
A.முகம்மது நிஜாமுதீன்
(த/பெ K.அப்துல் சலாம்)

மணமகள்
B.சாலிஹா இர்ஃபானா
(த/பெ K.பஷீர் அஹமது)

மணநாள்
ஹிஜிரி 1433 ஆம் ஆண்டு ரஜப் பிறை 12 (03.06.2012) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
முகம்மதியர் தெரு-மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வ ஐம பைனாகுமா பீகைர்.


மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் எதிர்புறம் (அண்ணா மெடிக்கல்ஸ் ) சுவரில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.




நிக்காஹ் வாழ்த்து

மணமகன் 
A.முகம்மது நிஜாமுதீன்
(த/பெ K.அப்துல் சலாம்)

மணமகள்
B.சாலிஹா இர்ஃபானா
(த/பெ K.பஷீர் அஹமது)

மணநாள்
ஹிஜிரி 1433 ஆம் ஆண்டு ரஜப் பிறை 12 (03.06.2012) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
முகம்மதியர் தெரு-மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வ ஐம பைனாகுமா பீகைர்.



மாவட்ட ஆட்சியருடன் மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு


கடந்த மாதம் (ஏப்ரல் 28) மதுக்கூர் தமுமுக சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பொதுகூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது ஒரு சம்பிரதய நிகழ்வாக இருக்கக்கூடாது என்ற முனைப்புடன் இருந்த மதுக்கூர் நகர தமுமுக நிர்வாகிகள் தீர்மானங்கள் சம்மந்தப்பட்ட அந்தந்த துறைக்களுக்கு பதிவு தபால்கள் மூலம் அனுப்பப்பட்டது.


மேலும் தீர்மானங்களுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக கடந்த வாரம் 28/05/2012 அன்று மனிதநேயமக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்களின் தலைமையில் நகர நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனார்.இச்சந்திப்பின் போது நகர பொருளாளர் சகோ.ஹாஜா மைதீன்,மமக நகர செயலாளர் சகோ.கபார்,நகரப்பெறுப்பாளர் முகம்மது ராசிக்,மாணவர் இந்திய பொறுப்பாளர்கள் ஜபருல்லா,ராசிக்,ஆகியோர் கலந்து கொண்டனர்.


மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சிய்ரை சந்தித்தை முன்னனி செய்தி பத்திரிக்கைகள் 29/05/2012 செய்தியினை வெளியிட்டது.




கோரிக்கை மனுவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்


  • மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இருக்கும் இரு மதுபானக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்

  • மதுக்கூர் அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்தவும்,விரிவாக்கம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • மதுக்கூர் காவல் நிலையத்தில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.


Sunday, April 15, 2012

மாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சிக் குரல்!

சனிக்கிழமை (14.04.2012) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகள் தினத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக ஸஸ்டாவா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் அணிதிரண்டனர்.

"தமது நாட்டின் சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும், தம்முடைய எதிர்காலத் தலைமுறை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்; உலகில் வாழும் ஏனைய சிறுவர்களைப் போல கௌரவமான மகிழ்ச்சியான வாழ்வை அடையவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்திற்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பலஸ்தீன் கைதிகளின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே நாம் இங்கு கூடியுள்ளோம்" என பேரணியினர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். 

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் எந்தவித நியாயமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், வருடக்கணக்காக பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்துவரும் பலஸ்தீன் கைதிகளின் பொறுமையும் தியாகமும் மகத்தானவை; கௌரவத்துக்கு உரியவை. எனவே, அவற்றை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது இன்றியமையாததாகும்" என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் ஸியோனிஸ காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலஸ்தீன் கைதிகளின் போராட்டம் நியாயமானது. எனவே, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அவர்களின் சாத்வீகப் போராட்டத்தைத் தோல்வியடைய விடாமல் காப்பது மனிதத்துவமுள்ள அனைவரதும் கடமையாகும்" என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Thanks: inneram.com

Thursday, April 12, 2012

குஜராத் கலவரம்: 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தின்போது ஓடே கிராமத்தில் 23 பேரை உயிருடன் தீவைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து குஜராத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். பலர் வாய் விட்டுக் கதறி அழுதனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரத்தையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. இது அநீதியானது. இந்த கோர்ட் நீதியின் ஆலயமல்ல என்று அவர்கள் குமுறினர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் கூடியிருந்தனர். அத்தனை பேரும் தீர்ப்பை எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குஜராத் முழுவதும் பெரும் மதக் கலவரம் மூண்டது. இந்த நிலையில், ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் புகுந்த வெறியர்கள், அங்கிருந்த முஸ்லீம்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு 3 மாடிக் கட்டடத்தில் முஸ்லீ்ம் குடும்பங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வீட்டை வெறியர்கள் தீவைத்து விட்டனர். இதில் 23 பேரும் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் மஜீத் மியான் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதவாத தாக்குதலில் ஓடே கிராம சம்பவமும் ஒன்றாகும். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 150 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 35 பேர் பிறழ் சாட்சியாகி விட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார்.

தற்போது தண்டனைக்குள்ளாகியுள்ள 46 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடந்த 9 மதக் கலவர வழக்குகளில் தற்போது 2வது வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 33 பேரின் உயிரைப் பறித்த சர்தார்புரா படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்புக் கோர்ட் தீர்ப்பளித்தது.

Saturday, March 31, 2012

திசை மாறும் ஊடகங்கள்

ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவரேஜ் செய்கின்றன. நாட்டின் எரியும் பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பினை தட்டிக் கழித்துவிட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய விஷயங்களைப் பரப்புவதில் அதீத ஆர்வம் காட்டும் செயலை பிரஸ் கவுன்சிலின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சமூகநல ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மக்கள் நலன் நாடும் அமைப்புகளையெல்லாம் தொடர்ந்து கூறிவந்த கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பணியினை சிறப்பாக வகித்த மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது பொருத்தமானது. வணிகநோக்கு ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க அறிவியல் பூர்வமான எந்தத் தீர்வையும் அவரால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 'பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடுவதாலும், வெறும் 15 நாட்கள் போராடினால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது எனக்கூறிய கட்ஜு,

"நாட்டில் எரியும் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை என எவ்வளவோ இருக்க ஐஸ்வர்யா ராய் எப்போது குழந்தை பெறுவார், சச்சின் டெண்டல்கர் எப்போது சதம் அடிப்பார் என்பது போன்ற அறிவுப்பூர்வமான(?) விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சாடினார். டெண்டுல்கர் சதம் அடிப்பதால் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா?"

என்று குத்தலாகக் கேட்டார்.



நாட்டின் 90 சதவீத ஊடகங்கள் இத்தகையப் போக்கினையே கடைப்பிடிப்பதை எவ்வளவு நாள்தான் சகித்துக் கொண்டிருப்பது என்ற வினாவினை நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். மார்க்கண்டேய கட்ஜு போன்ற நடுநிலையோடு செயல்படும் சான்றோர்களின் கருத்துக்கள் இப்போது தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டு மக்களின் மனநிலையை, பொதுப்புத்தியை வடிவமைக்க நினைக்கும் வணிகநோக்கு ஊடகங்களின் எண்ணம் இனிவரும் காலத்தில் நிறைவேறாது என்பது திண்ணம்.

மக்களின் விழிப்புணர்வு பற்றிப்பரவத் தொடங்கி யதால் செயற்கையான பரபரப்பு விரைவில் மறையத் தொடங்கும்

Thursday, March 29, 2012

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு.

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்கு குடிக்க தண்ணீர் கூட ஒழுங்காகக் கொடுப்பதில்லை. அவருக்கு கொடுக்கும் உணவில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.அவரை விசாரணை என்ற பெயரில் தூங்க விடுவதில்லை. அவர் செய்யாதக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இஸ்ரேலிய தூதரக காரில் வைக்கப்பட்ட காந்தக குண்டுவெடிப்பு வழக்கு என்பதால் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாத் பிரிவினரும் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு வகையான முறையில் காசிமி சித்திரவதை செய்யப்படுகிறார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் செயலைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மூத்த பத்திரிக்கையாளர் காஸிமிக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிடுகையில், இதுபோன்ற செயல் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுல்தான் அஹமது எம்.பி. உட்பட பத்து எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மூத்த பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பாமர முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய சான்றாக உள்ளது.

Sunday, March 25, 2012

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்


இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் சட்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன், மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் தஸ்பிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க அமைப்புகள், பொதுநலஅமைப்புகள் கலந்து கொண்டனா;.

கோரிக்கை:

1) மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

2) மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

3) திருச்சி - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

4) காரைக்குடி - கன்னியாகுமரி இடையே இராமநாதபுரம் வழியாக புதிய வழித்தடம்

5) ராமநாதபுரம் வந்துசேரும் சென்னை விரைவு ரயில் காலை 5 முதல் 8 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

6) சென்னை விரைவு ரயில்களை உச்சப்புளி ரயில்நிலையத்தில் நிறுத்துதல்.

7) சென்னை - ராமேஸ்வரம் இடையே சூப்பர் பாஸ்ட் வண்டியை பகல் நேரத்தில் விடுதல்

8) ராமேஸ்வரம் முதல் கோவை வரை ரயில் சேவை வேண்டும்.


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.




Thanks : tmmk.in

Thursday, March 22, 2012

புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.

மயிலாடுதுறை மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்றது.

புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள் இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட , தக்க துணையின்றிப் பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத நான்கு பெண்மணிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர் ஹைதர் அலி ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள் இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.

Wednesday, March 21, 2012

பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் பயணிகளுக்காக மார்ச் 24-ல் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்தில் (பி.எஸ்.கே.) ஹஜ் பயணிகள் பாஸ்போர்ட் பெறும் வகையிலான ஹஜ் மேளா என்ற சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே. பாலமுருகன் தெரிவித்திருப்பது:

ஹஜ் யாத்திரை செல்லும் பாஸ்போர்ட் இல்லாத யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் பெற வசதி ஏற்படுத்தி தரும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் மேளா மார்ச் 24-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த மேளா அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த மேளாவில் பங்கேற்கவுள்ள யாத்ரீகர்கள் இணையவழி மூலம் விண்ணப்பம் செய்து, விண்ணப்பப் பதிவு எண் நகலுடன் வர வேண்டும். மேலும், பாஸ்போர்ட்டுக்குத் தேவையான நகல், அசல் ஆவணங்களுடனும் வர வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. முன்பதிவு தேவையில்லை என்றார் அவர்.

Saturday, March 10, 2012

கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது-தமுமுக கவலை


சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அல்ஹஸா நகர புதிய நிர்வாகிகள் தேர்தல் மற்றும், “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் அல்ஹஸா நகரில் நடைபெற்றது.அல்ஹஸா மாநகர தமுமுக தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அல்ஹஸா, மாநகர தமுமுக பொருளாளர் ஜெக்கரிய்யா வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணைத்தலைவரும், ஊடகத்துறை பொறுப்பாளருமான அப்துல் காதர், பொதுச்செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் நஸ்ருத்தீன் சாலிஹ், துணைச் செயலாளர் அப்துல் அலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்இரு அமர்வுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல் அமர்வில் “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தனது தலைமையுரையில் “கலாச்சார சீரழிவு தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது. இப்போக்கு கவலையளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் மாண்புகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். இதற்கு வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.வெள்ளிக்கிழமை சிறப்பு பேருரையினை மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி நிகழ்த்தினார். தொழுகை – உணவு இடைவேளைக்கு பின்னர் கூடிய இரண்டாம் அமர்வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மண்டல துணைத்தலைவர் அப்துல் காதர் பணியாற்றினார்.தலைவர் பதவிக்கு அஹமது சுகர்னோ மட்டுமே முன்மொழியப்பட்டதால், அஹமது சுகர்னோ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்களாக ஜெக்கரிய்யா(தமுமுக), பரக்கத்துல்லாஹ்(மமக),, செயலாளர்களாக லால்பேட்டை அமானுல்லாஹ்(தமுமுக) ஆவனியாபுரம் ஷஹாபுதீன்(மமக), பொருளாளராக அன்வர், துணைச்செயலாளர்களாக ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா, கபீர், அப்துல் ஹக்கீம், ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் தமிழகத்திலிருந்து அலைப்பேசி வழியாக மமக பொதுச்செயலாளார் தமீமுன் அன்சாரி உரையாற்றினார். மண்டல நிர்வாகிகள் உரை, மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடலுக்கு பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.இறுதியாக அல்ஹஸா மாநகர தமுமுக துணைச்செயலாளர் ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா நன்றியுரையாற்றினர்..கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமுமுக மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் ஆவனியாபுரம் ஷஹாபுதீன், கந்தகுமாரன் அமானுல்லாஹ், கோட்டக்குப்பம் அப்துல் ரஹ்மான், பின்னத்தூர் ரபி, பரங்கிப்பேட்டை பாரூக் ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி:- இந்நேரம்.காம்

Sunday, March 4, 2012

அசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு!


''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசை அவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன். அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த ரூ.3,052 சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!) 'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்! 'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!'' நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது! ஜூனியர் விகடன், 26.02.2012 அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழ வைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்து விட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார். பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்தவள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கை வைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின. ''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக்குள் சர்..சர் என சைக்கிள் விட்டுக் கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து. ''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!'' நன்றி: ஆனந்த விகடன் 07 மார்ச்

Thursday, March 1, 2012

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு

தஞ்சாவூர், பிப். 28: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடைய பயனாளிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்ற முறை புகைப்படம் எடுக்கத் தவறியவர்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.தகுதியுடைய பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் நேரில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சிறப்பு மையம் ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் அலுவலக நேரத்தில் இயங்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஓர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் இருதயம், சிறுநீரகம், நரம்பு, நுரையீரல், எலும்பு, மூட்டு, குடல் உள்ளிட்ட 1016 வகையான நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர சிகிச்சைகளை சிறந்த மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 13 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 1800 425 3993 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி: திணமணி செய்தி 01-Mar-2012

Monday, February 27, 2012

நியமனக்குழு உறுப்பினர் தேர்தல்














மதுக்கூர் பேரூராட்சி நியமன குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இன்று 27/02/2012 திங்கட்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைப்பெற்றது.

15 வார்டு உறுப்பினர்களை கொண்ட மதுக்கூர் பேரூராட்சியில் நியமன குழு தேர்தலை 13 வது திமுக கவுன்சிலர் சுரேஷ் அவர்கள் புறகணித்தார்.மீதமுள்ள 14 கவுன்சிலர்களில் 9வதுவார்டு கவுன்சிலரும், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளருமாகிய சகோதரர் மு.கபார் அவர்கள் அதிமுக ஆதரவுடனும்,14 வது வார்டு கவுன்சிலர் சகோதரர் மணிவேல் அவர்கள் திமுக சார்பிலும் போட்டியிட்டனர்.இத்தேர்தலில் சகோதரர் கபார் அவர்களுக்கு 8 வாக்குகள் கிடைத்தது.சகோதரர் மணிவேல் அவர்களுக்கு 6 வாக்குகள் கிடைத்தது.

8 வாக்குகள் பெற்ற சகோதரர் M.கபார் நியமன குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். (எல்லா புகழும் அல்லாஹுக்கே )

Thursday, February 23, 2012

தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்



19 /2/2012 அன்று கும்பகோணம் தாஜ் மகாலில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது செல்லப்பா தலைமை தாங்கினார். மமக மாவட்ட செயலாளர் உமர் ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மமக அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவ்த்தர்ஷ, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மமக மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தமுமுக செயலாளர் ராசுதீன் செயல் தொகுப்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் புலவர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.

இதில் பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.

தகவல்:- தமுமுக இணையதளம் : www.tmmk.in

சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி கைது




2007 பிப்ரவரி 12. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் என்கிற ரயிலில் வைக்கப்பட்ட குண்டுவெடித்து 68 பேர் பலியாயினர். தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய், நல்லெண்ண திட்டமாக விட்ட விரைவு ரயில்தான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ். இக்குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப் படை (ATS) தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் புலனாய்வு காரணமாக மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்), அஜ்மீர் தர்கா (ராஜஸ்தான்), மலேகான் (மகாராஷ்ட்ரம்) குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.

தகவல்:- தமுமுக இணையதளம் :- www.tmmk.in

சங்கரன்கோவில் கலவரம்: நடந்தது என்ன??



சங்கரன்கோவிலில் கடந்த 7.2.2012 அன்று இரவு 7.30 மணியளவில் காளியம்மன் கோவில் கொடை விழா ஊர்வலம் நடைபெற்றது. கழுகுமலை சாலையில் ஜும்ஆ பள்ளிவாசலின் அருகில் ஊர்வலம் வந்தபொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசுகளை வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் பள்ளிவாசலில் உள்ளே செருப்புகள் மற்றும் கற்கள் எறிந்தும் வன்முறையில் தலித் சமுதாய மக்களில் சிலர் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.



இவ்விஷயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, பாதுகாப்புக்காக மூன்று போலீசார் மட்டுமே வந்துள்ளனர். இதனிடையே ஊர்வலம் பஜார் வீதிகளுக்குச் சென்று திரும்பியபோது இரவு சுமார் 8.30 மணியளவில் மீண்டும் பட்டாசுகள் வைத்து வெடித்துள்ளனர். போலீசார், அவர்களைக் கண்டித்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார்களையும் பின்பு இஷா தொழுகை முடித்துவிட்டு வெளியில் வந்த முஸ்லிம்களையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். முஸ்லிம்களில் சிலர் பதிலடி தர, இது கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 50 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகளில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் கார்கள், வேன்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊனமுற்றோருடைய வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 5 மற்றும் 6ம் தெருவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.


சில முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாமல், தலித்துகளின் தெருக்களில் வசித்து வந்தனர். கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்களால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வீட்டுக்குள் பயந்து உள்ளே இருந்த மக்களையும் வெளியே வரவழைப்பதற்காக ஈவிரக்கமின்றி விஷப்பூச்சி மருந்துகளை வீட்டுக்குள் தெளித்து வெளியில் விரட்டப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் கலவரம் நீடித்தது. இரவு சுமார் 11 மணியளவில் கலவரத் தடுப்பு போலீசார் வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

இதனையொட்டி இருதரப்பிலிருந்தும் 19 நபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பில்லாத திவான் அலி என்ற படிக்கும் மாணவரையும், மனநோயாளியான செய்யது அலி என்ற வாலிபரையும் கைது செய்தனர்.

டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திரபிதலி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தகவல் கிடைத்ததும் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர்கள் நயினார் முஹம்மது, திவான் மைதீன், துணைச் செயலாளர் சேகண்ணா, விவசாய அணி செயலாளர் சுலைமான் ஆகியோர் உடனடியாக சங்கரன்கோவில் விரைந்தனர். மாநில நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

மூத்த தலைவர்கள் பேரா. ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனடியாக நெல்லை சரக டி.ஜி.ஜி. மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் சுமார் 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். இரவு முழுவதும் சமுதாய மக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்தனர்.


இந்தக் கலவரத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துகள் நாசமாயின. இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்தி முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 10.02.2012 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இருசமுதாய மக்களும், ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் கூடினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைதியான சூழ்நிலை தற்போது நிலவிவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான் கலந்துகொண்டார்.



சங்பரிவாருக்கு தொடர்பு?

சங்கரன்கோவில் கலவரத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டோரில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், சங்கரன்கோவில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களில் அன்புராஜ், வழக்கறிஞர் சாக்ரடீஸ், மாவட்ட நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், பழனிச்சாமி, ஆறுமுகசாமி ஆகியோர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சங்கரன்கோவில் பாஜக வேட்பாளர் தேர்வுக்காக சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



களத்தில் தமுமுக நிர்வாகிகள்

சங்கரன்கோவிலில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் நயினார் முஹம்மது, மாவட்டப் பொருளாளர் பொட்டபுதூர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் சங்கரன்கோவிலில் மூன்று நாட்களும் தங்கியிருந்து கலவரம் மீண்டும் நடைபெறாமல் அமைதி நிலவ பாடுபட்டனர்.

தகவல்:- தமுமுக இணையளதம் : www.tmmk.in

Wednesday, February 15, 2012

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகியா​க மதுக்கூர் ராவ்த்தர் ஷா​ தேர்வு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம. தமீமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை



மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

துணைத் தலைவர் பொறியளார் என். ஷபியுல்லாஹ் கான்

துணைப் பொதுச் செயலாளர் எஸ். எஸ் ஹாரூன் ரஷீத்

அமைப்பு செயலாளர்க்ள்

எஸ் சலீமுல்லாஹ் கான்

சத்தியமங்கலம் சையத் அஹ்மது பாரூக்

மதுரை முகைதீன் உலவி

மதுக்கூர் ராவ்த்தர் ஷா


















தலைமை நிலையச் செயலாளர்

வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்கதீன்

Tuesday, February 14, 2012

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.தூதரக அதிகாரிகள் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் ஹுஸைன் கனி, நூர், ஆஷிக் உள்ளிட்டோரும்,

தம்மாமிலிருந்து பிலால், அஜ்மல் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.அந்நிகழ்ச்சியில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.தமிழக தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை சுலபமாக எடுத்துரைப்பதற்கு வசதியாக, தமிழ் பேசும் ஊழியர்களை தூதரகம் நியமிக்க வேண்டும் என்றும், தொழிலாளர் ஒப்பந்த நகலை தூதரகம் பெற்று, அவை மீறப்படும் பட்சத்தில் சவுதி அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.குறிப்பாக, தொழிலாளர் பிரச்சனைகளான, ஹுரூப் (வேலைக்கு அமர்த்தியவரிடமிருந்து வெளியேறி விடுதல்) தொழிலாளர் ஒப்பந்தத்தை மீறுதல், குடியேற்ற/ குடிவிலக நடைமுறைகள் போன்ற முக்கியமான விடயங்கள் குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.மேலும், சிறை அல்லது தடுப்புக்காவலில் உள்ள இந்தியர்களின் விடுதலை குறித்தும், அவர்களுக்கித் தேவையான சட்ட ஆலோசனைகளை அளிப்பது குறித்தும், தூதரகத்தில் இந்திய தொழிலாளர்கள் நலன் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.அத்துடன், கிழக்கு பிராந்தியத்தில், மிக அதிக அளவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய தொழிலாளர்கள், தங்களது பிரச்சனைகளுக்காக ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 800 கி.மீ பயணப்பட்டு வருவதை தவிர்க்க கிழக்கு பிராந்தியமான தம்மாமில் ஏன் ஒரு, துணை தூதரகத்தை அமைக்கக்கூடாது என்ற ஆலோசனையும் த மு மு க நிர்வாகிகளால் முன் வைக்கப்பட்டது.த மு மு க நிர்வாகிகளின் கருத்துக்களை கவனமுடன் செவிமடுத்த தூதரக அதிகாரிகள், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், அத்துடன் த மு மு க நிர்வாகிகளும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக தூதரக அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் பணியை சுலபமாக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.இறுதியாக இந்திய தூதரின் செயலாளர் திரு. மனோகர் ராம் த மு மு க நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றி கூறினார்

Monday, February 13, 2012

அலிகார் முஸ்லிம் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2012-13ம் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.டெக்., பி.ஆர்க்., பி.ஏ. (ஹானர்ஸ்), பி.எஸ்சி (ஹானர்ஸ்), பி.காம். (ஹானர்ஸ்), எம்.ஏ., எம்.எஸ்சி.,. எம்.காம்., ஆகியப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மற்றும் கல்வி நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

Saturday, January 21, 2012

+2 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான வினா வங்கி ( Quenstion Bank )

தமிழ்நாட்டில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்ககாக கடந்த கால வினாத்தாள்களை கிழ்கண்ட தளத்தில் இருந்து இலவசமாக டவுன் லோடு பண்ணி உபயோகித்து கொள்ளலாம். இங்கு 2006 முதல் கடந்த ஆண்டு வரை நடந்த தேர்விற்கான வினாக்கள் உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடிய மாணவர்களுக்குரிய எல்லா பாடப் பிரிவுகள்க்குமான வினாத்தாள்கள் இங்கு உள்ளது.


This post is very useful for “Tamilnadu Plus Two (+2) students. who ever going to write plus two(+2) board exam they can find Previous Year Question Papers here.

12thQuestion bank


இது Government of Tamil Nadu Directorate of Government Examination அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Directorate ofGovernment Examination Tamilnadu Official website

Visit this link to get all the latest news from the directorate of Government examination. Here you can get all the details about 10th and 12th exams.

Head Office
Director- Tmt D Vasundaradevi
Directorate of Government Examination,
College Road, D.P.I. Campus
Nungabakkam,
Chennai - 600 006.
Phone : 28278286, 28272088, 28269982
28275125, 28275126

இந்த பதிவு மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் வெளியிடப்படுகிறது. இதனைப்பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் நண்பர் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நன்றி

Monday, January 16, 2012

Job vacancies

Dear Candidate,

We have the following requirements for a reputed Company in Qatar engaged in Manpower Services, Waste Management Services etc.,

The requirements are:
1) Assistant Manager-Waste Management Services
2) Executive-Operations
3) Assistant Manager-Operations

Nationality Preferred:Indian

Total Salary: 10K-12K (Gross) for 1,2 and 3 positions

Please send your resumes to keerthi@teyseerhr.com, with your notice period. Also provide references to your friends who may be interested in the role.

Saturday, January 14, 2012

ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?

ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.
சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.

தமிழக கோட்டா அதிகரிப்பு

தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.

சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.

நடவடிக்கை உறுதி

இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.

கர்நாடகாவில் ஹஜ் இல்லம்

எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி - சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Thursday, January 12, 2012

ஈரான் அணுவிஞ்ஞானி குண்டு வீசி கொலை: இஸ்ரேல் காரணமா?

இன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததில், அந்நாட்டின் அணுவிஞ்ஞானி முஸ்தஃபா அஹமது ரோஷன் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காந்தவிசை கொண்ட வெடிகுண்டை குறிப்பிட்ட பீஜியாட் 405 காரில் பொருத்திவைத்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஈரானின் அணுவிஞ்ஞானிகளைத் தேடிக்கொல்லும் அமெரிக்க இஸ்ரேல் உளவு ஸ்தாபனங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலும் ஈரானின் அணு விஞ்ஞானிகள் மூவர் இதேபோல் கார்குண்டு வெடித்து கொல்லப்பட்டிருந்தனர்.

2010ல் நடைபெற்ற மற்றொரு கொலைமுயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ஃபரீதுன் அப்பாஸி மயிரிழையில் தப்பியிருந்தும் நினைவிருக்கலாம். தன் மனைவியுடன் காரை விட்டு அப்பாஸி இறங்கிய சில விநாடிகளில் அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்திருந்தது.

முஸ்தஃபா அஹ்மது விஞ்ஞானியாகவும் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாயுக்களைப் பிரித்தெடுக்க உதவும் பாலிமெரிக் இழைகளின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டுவந்தார்.

அமெரிக்க உளவு நிறுவங்களின் துணை கொண்டு, இஸ்ரேலின் மொசாத் அமைப்பு ஈரானின் விஞ்ஞானிகளை குறிவைத்து அழிப்பதாக ஈரானின் இல்னா செய்தி ஸ்தாபனம் கூறியுள்ளது.

Read more about ஈரான் அணுவிஞ்ஞானி குண்டு வீசி கொலை: இஸ்ரேல் காரணமா? at www.inneram.com

Monday, January 9, 2012

மதுக்கூர் செய்தி மடல்

ஏக இறைவனின் திருப்பெயரால்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

மதுக்கூர் செய்தி மடல் என்ற பெயரில் மதுக்கூரில் நடைபெறும் நிகழ்வுகள், சமுதாய செய்திகள், மாவட்ட செய்திகள், மார்க்க சிந்தணைகள், பயனுள்ள தகவல்களை அனைவரும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த செய்தி மடல் துவங்கப்பட்டுள்ளது.

பல்வேறு தகவல்களை நாம் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், டிவிக்களில் நாம் கண்டு வந்தாலும் இன்னமும் செய்திகளை படிக்கும் ஆர்வம் பெரும்பாலான மக்களிடம் இன்றளவும் இருக்கிறது. அந்த மக்களுடன் தகவல்களை பதிவு செய்யவும் பயனுள்ள செய்திகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவும் சிறு முயற்சி.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை நாங்கள் துவக்கியதாக அறிவித்திருந்தோம். ஆனாலும் அந்த சமயத்தில் நாம் துவங்கிய ஆம்புலன்ஸ் சேவைக்கான பொருளாதார திரட்டல் மற்றும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு காரணமாக அந்த நேரத்தில முழுவீச்சில் இப்பணியில் ஈடுபடமுடியவில்லை. தற்போது மீண்டும் தொடர்ந்திருக்கிறோம். இறைவனுக்கே எல்லாபுகழும்!!!.

கடந்த 3 வருடத்திற்கு மேலாக மதுக்கூர் தமுமுகவின் இமெயில் ஊடாக உங்கள் அனைவருடனும் தகவல்களை பகிர்ந்து வருகிறோம். சமீபகாலமாக பேஷ்புக் மற்றும் மதுக்கூர் தமுமுகவின் இணையதளத்திலும் செய்திகளை பதிவு செய்து வருகிறோம். அமீரகத்தில் உள்ள மதுக்கூர் தமுமுக சகோதரர்களின் நண்பர்கள் வட்டமும் மதுக்கூரில் உள்ள தமுமுக நிர்வாகிகளும் இணைந்து இன்ஷாஅல்லாஹ் இந்த முயற்சியை தொடர்வார்கள்.

வழக்கம் போல் தங்களது உற்சாகமான வரவேற்பை எதிர்நோக்குகிறோம்.

என்றும் நட்புடன்

மதுக்கூர் செய்தி மடல் குழு,

மதுக்கூர் நகர தமுமுக,

அமீரக மதுக்கூர் தமுமுக நண்பர்கள் வட்டம்.


செய்திமடலை உங்கள் இமெயில் -லில் பெற்றுக்கொள்ள seithimadal@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.

Saturday, January 7, 2012

ஆம்பூர் நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA



காலை 10 மணி ஆகியும் நியாய விலை கடை திறக்க வில்லை, கடை ஊழியர்கள் எங்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள், பொருட்கன் எடை குறைவாக போடுகிறார்கள், போன்ற புகார்களோடு , தினந்தோறும் காலையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களுக்கு ஆம்பூர் பொதுமக்கள் போன் செய்த வண்ணம் இருந்தனர் , இதை தொடர்ந்து



கடந்த 14/12/11 அன்று தாலுக்கா அலுவலகத்தில் . வட்ட வழங்கல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் , ஆம்பூரில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தினார், காலையில் 9 மணிக்கே எல்லா கடைகளைகளையும் திறக்கவேண்டும் என்றும், பொதுமக்களிடம் நல்லமுறையில் பேசவேண்டும் எனவும், எடை சரியாக இருக்க வேண்டும் என்றும், அறிவுரித்தியதோடு இதை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார் , இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் நசீர், மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ் , மமக நகர செயலாளர் ஹமீத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

மரண அறிவிப்பு

மதுக்கூர் இடையகாடு கருப்பூரார் வீட்டு உதுமான் அவர்களின் பேத்தியும்,மாலிக் உசேன் அவர்களின் மகளுமாகிய சைமா வஃபாத்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

குழந்தையின் மறுமை சிறக்க துவா செய்வோம்.

Death News

Name:- Saima passed away on 06-01-2012
Relation: Daughter of Malik hussain
Street:- Edaiyakadu

மாயா சூப்பர் மார்க்கெட்

மதுக்கூரில் பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரர்களாக இருந்த ஒரு சிலர் தனியாக பிரிந்து சென்று மாயா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் புதிய (தற்காலிக)சூப்பர் மார்க்கெட்டினை இன்று மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் திறந்து உள்ளார்கள்.பொங்கல் வியாபாரத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மாயா சூப்பர் மார்க்கெட் தனது அதிகாரபூர்வ திறப்பு விழாவினை 25/03/2011 அன்று மதுக்கூர் ஆற்றாங்கரை அருகில்,பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

Friday, January 6, 2012

மரண அறிவிப்பு.

மதுக்கூர் பள்ளிவாசல் தெரு நத்தர்ஷா,நஜ்புதீன்,நசீர் அகமது இவர்களின் தகப்பனார் பட்டுக்கோட்டையார் அப்துல் ஜப்பார் அவர்கள் (வயது சுமார் 70) இன்று வஃபாத் ஆனார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


Death Messages

Name:- Abdul Jabbar (Pattukkotai) passed away today (Innalilahi va inna ilaihi rajivoon)

Father of:- Natharsha (emirates), Najmudeen , and Najeer

Street : Mosque street, Madukkur

Wednesday, January 4, 2012

மதுக்கூரில் புதிய வங்கி....



மதுக்கூரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியாக இந்தியன் வங்கி மட்டுமே உள்ளது.தனியார் வங்கிகளாக லஷ்மி வில்ஸ் வங்கி,கும்பகோணம் பரஸ்பர பண்ட லிமிடெட் ஆகியவைகளும்,தமிழக அரசினால் நிர்வாகிக்கப்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி,தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவைகளும் உள்ளது.
நமதூருக்கு மேலும் ஒரு அரசுடமை வங்கி குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியினை கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.அவர்களின் முயற்சிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்.

இந்நிலையில் சிட்டி யூனியன் பாங்க் லிட் தனது கிளையினை மதுக்கூரில் தொடங்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு மதுக்கூர் மெயின்ரோடு மாஸ் சிட்டி டவர் என்ற முகவரில் இன்னும் ஒரிரு நாட்களில் துவக்க விழா காண இருக்கின்றது.
சிட்டி யூனியன் பாங்க் முதன்முதலில் 31/10/1904 அன்று கும்பகோணத்தில் தனது முதல் கிளையினை தொடங்கி இந்தியாவின் 14 மாநிலங்களில் சுமார் 275 கிளைகளை கொண்டுள்ளது

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய், EXNORA நிறுவனர் நிர்மல் குமார், Bio Gas நிறுவனர் ராக்கி, Welfare Association தலைவர் ETA சலாவுதீன், உஸ்வத்துல் ஹசனா தலைவர் அப்துல் காதர், கீழக்கரை கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், துணை செயலாளர் ஹாஜா மொய்தீன், தமுமுக நகர் தலைவர் செய்யது இப்ராஹீம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிடாகத் விழிப்புணர்வு 2வது முகாம்

சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சவூதிஅரேபியாவில் நிடாகத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை 2 வது முகாம் ரியாத் நகரில் சிறப்பாக நடைபெற்றது.


ரியாத் நகரின் மையப்பகுதியான பத்தாஹ்வில் குறிப்பாக தமிழ்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 2வது முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டினை லக்கி குழுமத்தினர் மிகச் சிறப்பாக செய்து கொடுத்திருந்தனர் லக்கி சில்க்ஸின் புதிய கட்டிடத்தின் மேல் தளத்தில் ஷாமியான அமைத்து 2 நாள் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், pleaceindia மற்றும் Sauditimes இணைந்து நடத்திய இந்த முகாமில் பெரும் திரளான மக்கள் பயன்பெற்றுச் சென்றனர். இந்த 2 வது நிடாகத் திட்டம் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சியில் ஸ்பான்சர்களால் பாதிக்கப்பட்ட அதிகமான மக்களுக்கு சட்ட ரீதியிலான ஆலோசனைகளும் தீர்வுகளும் வழக்கறிஞர் குழு மற்றும் தூதரகபிரதிகளால் சம்பந்தப்பட்ட ஸ்பான்சர்களிடம் தொலைபேசியில் பேசி உடனடியாக முகாமில் நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 நாள் முகாமில் இந்தியச் சமூகம் போதிய விழிப்புணர்வும் ஆலோசனைகளும் பெற்றுச் சென்றுள்ளது மனநிறைவை அளிக்கிறது எல்லாப்புகழும் இறைவனுக்கே

புகைப்படங்கள்






மக்கள் குறை தீர்க்கும் முகாம்

இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் அவர்களிடம் நேரில் வழங்கி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வலியுறுத்தப்பட்டது.

Saturday, December 31, 2011

அமீரக மதுக்கூர் தமுமுக நிர்வாகிகளின் விபரங்கள்

அமீரக மதுக்கூர் தமுமுக நிர்வாகிகளின் விபரங்கள்

1. M.Y சேக் ஜலால் - 050-4202842
2. A. அப்துல் ரசாக் - 055-8137763
3. A. அஜிம் -055-4465088
4. A. அசாருதீன் -055-5269379
5. M. பஷீர் அஹமது - 050-6950912
6. M. சேக் பரீது - 050-5578719
7. A.J. சிராஜுதீன் -050-9431980
8. S. நிஜாமுதின் -055-4573155
9. E.S.M. பைசல் அஹமது-050-8511842


மதுக்கூர் தமுமுக பேஷ்புக் அப்டேட்

ஜியாவுல் ஹக் - 056 7943965

மதுக்கூர் தமுமுக இமெயில் அப்டேட் -

M. பஷீர் அஹமது - 050-6950912
M.S.O.A. ஹபிபுல்லாஹ் -050-8552272
A. கபார் -9865851693

மதுக்கூர் தமுமுக இணையதள அப்டேட்

K.T.M. J.நிஷார் அகமது - 055-9898409.

மீண்டும் உங்களிடத்தில்...

மதுக்கூர் த.மு.மு.க. வின் இணயதளம் மறு சீரமைப்பிற்கு இன்று முதல் மீண்டும் செயல்பட உள்ளது. இனிவரும் காலங்களில் முன்பு போலவே சமுதாய, மதுக்கூர் த.மு.மு.க வின் செயல்பாடுகள் மற்றும் நமது ஊரை சார்ந்த செய்திகள் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்படும்.

எப்போதும் போல் உங்களது ஆதரவையும் கருத்துகளையும் எங்களுக்கு வழங்கும்படி கேட்டுகொள்கிறோம்..

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...