இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, June 21, 2012


சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி

அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.08.2012 ஆகும். கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டிலை உரிய வடிவத்தில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
என்ற இணையதள முகவரியில் படிவங்களையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...