இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, October 11, 2014

நிக்காஹ் வாழ்த்து


மணமக்கள்
A.முகம்மது இத்ரீஸ் (த/பெ A.அமானுல்லா)
S.ஷிஃபானா (த/பெ M.N.சேக் அலாவுதீன்)

மணநாள் 
ஹிஜிரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 17 (12/10/2014) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 

மதுக்கூர்



மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

மதுக்கூர் தமுமுக அமீரக பொறுப்பாளர் சகோதரர் பாபு (என்கின்ற) சேக் கலிபா (எஸ்.கே) திருமணம்
மதுக்கூர் தமுமுக நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர்  முகம்மது அசாரூதீன் மற்றும் 
நிசாருதீன் இல்ல திருமணம்

மணமக்கள்
M.சேக் கலிபா (த/பெ S.முகைதீன் அப்துல் காதர்)
M.ஹனான் பீவி (த/பெ A.முகம்மது மைதீன்)

மணநாள் 
ஹிஜிரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 17 (12/10/2014) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
மதுக்கூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

Tuesday, October 7, 2014

மதுக்கூரில் கூட்டு குர்பானி
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக கூட்டுக்குர்பானி 12 மாடுகள் கொடுக்கப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத்திலிருந்து சேர்ந்த பங்குகளுக்காக 4 மாடுகளும்,உள்ளூர் வாசிகள் கொடுத்த பங்குகளுக்காக இன்று செவ்வாய்கிழமை 8 மாடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டது.இந்த பணிகளில் மதுக்கூர் தமுமுகவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்,குறிப்பாக அமீரக அன்பர்கள் சர்புதீன்,பைசல்,நிஜாமுதீன்,ஜாசிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்,
மாடுகளில் இறைச்சிகளை இஸ்லாமியபெரியோர்கள்,தாய்மார்கள் வந்து வாங்கி சென்றார்கள்.ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்யப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே !





Monday, October 6, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பட்டாணியர் தெரு முன்னாள் கவுன்சிலர் அப்துல் கனி (சமையல் மாஸ்டர்) அவர்களின் மாமனாரும்,கோழிக்கடை அப்துல் ரஷீது,கோழிக்கடை முகம்மது ஆகியோரின் தந்தையுமான கடலைக்கடை ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று 06/10/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Saturday, October 4, 2014

அன்பான சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அனைவரும் ஹஜ் பெருநாள் (தியாகத்திருநாள்) நல்வாழ்த்துக்கள்.
தங்கள் இல்லங்களில் கொடுக்கப்படும் குர்பானி பிராணிகளின் தோல்களை நமதூர் (மதுக்கூர்) தமுமுக வினரிடம் கொடுத்து காஷ்மீர் மக்களுக்கும் நமதூரை சார்ந்த ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


Wednesday, October 1, 2014

மதுக்கூர் தமுமுக வின் முன் முயற்சி
மதுக்கூரில் ஏராளமான சகோதரர்கள் ஹஜ் பெருநாளைக்கு குர்பானி கொடுக்கின்றார்கள்.அப்படி குர்பானி கொடுக்கும் பிராணிகளின் தோலை நமதூரில் செயல்படும் பல அமைப்புகள்,இயக்கங்கள் (தமுமுக உட்பட) பெற்று அவரவர் தலைமையின் வழிகாட்டலின்படி அதை உரிய வழியில் பயன்படுத்துகின்றார்கள்.அனைத்து இயக்கங்கள்,அமைப்புகளை ஒருகிணைந்து நமதூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் தலைமையில் ஓர் குழு அமைத்து குர்பானி பிராணிகளின் தோல்களை வசூல் செய்து நமதூர் ஏழைகள் பயன்படும் வகையில் அதை உரியவர்களுக்கு பங்கீட்டு கொடுக்கலாம் என்ற நோக்கில் கடந்த வாரம் மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர்,செயலாளர் ஜனாப் சதக்கத்துல்லா,மிப்தாஹுல் சங்க தலைவர் ஜனாப் அஜீஸ் ரஹ்மான்,செயலாளர் ஜனாப் ஹாஜா முகைதீன்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜனாப் ஜபருல்லா,ஆகியோரை சந்தித்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் மதுக்கூர் ராசிக்,மதுக்கூர் நகர தமுமுக தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மற்றும் நகர நிர்வாகிள் அளித்தார்கள்.








Saturday, September 27, 2014

மதுக்கூரில் தமுமுக மாநில துணைத்தலைவர்
நேற்று 26/09/2014 வெள்ளிக்கிழமை ஒரு நாள் சுற்றுபயணமாக தஞ்சாவூர் மாவட்டம் வருகை தந்த சமுதாய பேரியக்கம் தமுமுகவின் நிறுவனரும்,மாநில தமுமுக துணைத்தலைவருமான பெரியவர் குணங்குடி அனிபா அவர்கள் மாலை 4:30 மணிக்கு மதுக்கூர் நகர் அலுவலகம் வந்தார்.அவரை மாவட்ட துணைச்செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மாணவர் இந்திய நகர நிர்வாகி முகம்மது மர்சுக், மற்றும் தமுமுக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.தமுமுக நகர நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் செய்தார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி கோரியும்.தமுமுகவின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர் அவர்களையும்,மதுக்கூர் பேரூராட்சி தலைவர் ஜனாப் பசீர் அகமது அவர்களையும்,சமூக ஆர்வலர்கள் அண்ணா மெடிக்கல்ஸ் ஜனாப் நத்தர்ஷா அவர்களையும்,லக்கி ஹார்டுவேர்ஸ் ஜனாப் அப்துல் காதர் அவர்களையும்,முன்னாள் அமீரக தமுமுக தலைவர் மதுக்கூர் ஹாஜா மைதீன் அவர்களையும், சந்தித்து பேசினார்.மாநில துணைத்தலைவர் அவர்களுடன் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாவட்ட தலைவர் பாதுஷா,மாநில வர்த்தக அணிச்செயலாளர் கலந்தர் மற்றும் மதுக்கூர் நகர அணி நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.








Wednesday, September 24, 2014


பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு

மதுக்கூர் 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு (கீழக்காடு) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச்சார்ந்த திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.பேரூராட்சி செயல் அலுவலர் திரு ரமேஷ் அவர்கள் பதவி பிராணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,அதிமுக நகர செயலாளர் எழுத்தர் சரீப்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முகைதீன் மரைக்காயர்,பேரூராட்சி உறுப்பினர்கள் முருகையன்,ஆர்.சுரேஷ்.மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.




மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் இடையகாடு மாப்பிள்ளைத்தம்பி வீட்டு அப்துல் ஹமீது அவர்கள் இன்று (24/09/2014) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.

மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)
மதுக்கூர் மாணவிக்கு தங்கப்பதக்கம்..தமுமுக பாராட்டு...
மதுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி தனது அறிவியல் ஆசிரியர் உதவியுடன் இயற்கையில் உணவை பாதுகாக்கும் முறையைக்கண்டறிந்து படைப்பாக வைத்துள்ளார்.குளிர்சாதனப்பெட்டி போன்ற இந்த படைப்பில் மின்சாரம் இல்லாமல் உணவை இயற்கையான முறையில் பதப்படுத்தி பாதுகாத்து வைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது.
இந்த முயற்சிக்கு மாணவி ஜான்சிராணிக்கு மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றார்.
மாணவியின் இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் மதுக்கூர் தமுமுக மாணவரணி சார்பாகவும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா சார்பாகவும் மாணவி ஜான்சிராணிக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர் முகம்மது அஸாருதீன் ,மாணவர் இந்தியா நகர துணைச்செயலாளர் முகம்மது மர்சுக்,தமுமுக நகர தலைவர் ஜபருல்லா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் நிஜாமுதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மாணவியின் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும்,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி செல்வகுமாரி ஆகியோரையும் தமுமுக நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
வருகின்ற 5ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ஜான்சிராணி தேசிய அளவில் நடைபெறக்கூடிய அறிவியல் போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.



Tuesday, September 16, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மரண அறிவிப்பு

மதுக்கூர் M.M.A.அப்துல் ரஜாக் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,M.M.A.அல்லாபிச்சை அவர்களின் தாயாருமாகிய பட்டுக்கோட்டை அம்மா என்கின்ற ஜெமீலா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் O.P.M.அல்லாபிச்சை அவர்களின் மருமகளும்,முகம்மது அலி அவர்களின் மனைவியும்,உமர்கான் அவர்களின் தாயாரும்,மர்ஹும் N.S.A.ஜியாவுதீன் அவர்களின் மகளும்,மதுக்கூர் தங்கப்பா அவர்களின் மாமியாருமான அலியா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Saturday, September 13, 2014

முன்னாள் துபாய் மண்டல தமுமுக தலைவர் மதுக்கூர் S.M.ஹாஜா மைதீன் இல்லத்திருமணம்

மணமக்கள் 
முகம்மது இக்ரம் (த/பெ  ஹாஜா மைதீன்)
ஆசிக் நாச்சியா (த/பெ ஹிதாயத்துல்லாஹ்)

மண நாள் 
ஹிஜிரி 1435 துல்கஃதா பிறை 17 (13/09/2014) சனிக்கிழமை

மண இடம்
ஆழியூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

Tuesday, September 9, 2014

மரண அறிவிப்பு
மதுக்கூர் தமுமுக முன்னாள் தலைவரும்,சிறந்த செயல்வீரருமான ரெடிமேட் சென்டர் உரிமையாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மாமனார் ஹாஜாமுகைதீன் அவர்கள் நேற்று இரவு 08/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று 09/09/2014 மாலை 4:00 மணிக்கு பத்துக்காடு அருகில் உள்ள கரப்பங்காட்டில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

Saturday, August 16, 2014

மதுக்கூரில் மழை

மதுக்கூரில் கடந்த 30 நிமிடங்களாக நல்ல மழை பெய்கின்றது (அல்ஹம்துலில்லாஹ்),வீதிகளில் மழை நீர் பெருகெடுத்து ஓடுகின்றது.மதுக்கூரில் அல்லாஹ்வின் கிருபையால் நல்ல மழை பெய்தது.
 







Friday, August 15, 2014

மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்

மதுக்கூர்  நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இந்தியாவின் 68 வது சுகந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று சிறப்புடன் நடைபெற்றது.

இன்று காலை சுமார் 9:00 மணியளவில் மதுக்கூர் நகர தமுமுக அலுவலகத்தில் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் அமீரக முன்னாள் பொறுப்பாளர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

காலை 10:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் நகர தமுமுக சார்பாக இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இம்முகாமினை சமூக ஆர்வலர் சகோதரர் KNM  நத்தர்ஷா அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் NR ரெங்கராஜன் அவர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் M.தண்டாயுதபாணி,முன்னாள் அரிமா தலைவர் சகோதரர் A.ஜாகீர் உசேன்,வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கத்துரை,முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜான் தனசேகரன்,வாட்டாகுடி பாலசுப்ரமணியன்,டாக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியின் மூலமாக 10 சகோதரர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த வகையினை அறிந்து கொண்டார்கள்

மாலை 7:30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சுகந்திர தின தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது."சுகந்திரப்போரில் முஸ்லிம்களின் பங்கு " என்ற தலைப்பில் தமுமுக தலைமைக்கழகப்பேச்சாளர்  சகோதரர் பழனி பாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்தினர்கள்.முன்னதாக மாவட்ட கழக பேச்சாளர் பவாஸ் மற்றும் கவுன்சிலர் கபார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.




















கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...