இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 20, 2012


இட ஒதுக்கீட்டை உயர்த்தாவிட்டால் போராட்டம்! நெல்லை கிழக்கு மாவட்ட மமக மாநாட்டில் பிரகடனம்.

கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்



 விரிவான செய்தி விரைவில்

மாநாட்டின் நேர்பகுதி

பெண்களுக்கு தனிப்பகுதி

இனப்படுகொலைகளுக்கு எதிரான மாணவர் இந்தியாவின் புகைப்பட கண்காட்சியை மமக மாநில அமைப்புச் செயலாளர் ஜோசப் நோலஸ்கோ திறந்து வைக்கிறார்.


இலங்கை, காஷ்மீர், ஈராக், ஆப்கானிஸ்தான், குஜராத் என உலகமெங்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்காட்சியை பார்வையிடும் மக்கள்

வீர தீர விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார் மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது.


விளையாட்டுப்போட்டிகளில் ஒரு காட்சி.


மாநாட்டில் கொடியேற்றி முழக்கமிடுகிறார் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி


சாதனை படைத்த பல்வேறு சமூகங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.








தலைவர்களின் முழக்கங்கள்








மாவட்ட நிர்வாகிகள் பேசுகிறார்கள்















Tuesday, June 19, 2012




மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே சேவை
மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவை
மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இரயில் சேவை தொடங்கப்போவதாக  இரயில்வே நிலைக்குழுத்தலைவர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் அறிவித்தார்கள்.இச்சேவைக்காக கடந்த காலங்களில் சர்வே எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சுமார் 3 முறை சர்வே மேற்கொள்ளப்பட்டது.2012 ஆம் ஆண்டு இச்சர்வே  இறுதி செய்யப்பட்டதாக தெரிகின்றது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்சேவை மதுக்கூர் வழியா? வடசேரிவழியா ?எந்தவழியாக என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 24/03/2012 அன்று  மதுக்கூர் ,பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு வர்த்தகசங்கங்கள்,தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பாரளுமன்ற உறுப்பினரும்,இரயில்வே நிலைக்குழுத்தலைவருமான சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களை சந்தித்து பட்டுக்கோட்டை அரியலூர் இரயில்சேவை வேண்டும் என்ற ஓர் கோரிக்கை மனு அளித்தனார்.




மதுக்கூர் பட்டுக்கோட்டை இரயில்வே சேவையினைப்பற்றி மதுக்கூரிலிருந்து சென்றவர்கள் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள்களிடம் கேட்டபோது.அது மதுக்கூர் வழியாக தான் சர்வேயும் முடிந்துவிட்டது என்ற தகவலை கூறினார்.25/03/2012 முன்னனி செய்திதாள்களில் மேற்கண்ட சந்திப்பு பிரசுரம் ஆனது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்சேவைக்காக முதல் கட்டமாக ரூ 70 கோடி ஓதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.

இதனை தொடர்ந்து 28/03/2012 மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் பாதைத்திட்டம் யாருக்காக? என்ற தலைப்பில் மேற்கண்ட இரயில் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழு என்ற பெயரில் சுவரொட்டி  ஒட்டப்பட்டு இருந்தது.

30/03/2012 அன்று மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் ஆதரவு தெரிவித்து மக்களுக்காக என ஒரு சுவரொட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.மேலும் இத்திட்டத்தினை கொண்டுவந்த சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேலும் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.கடந்த 28/04/2012 அன்று மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயிவே திட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்ட சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு தீர்மானத்துடன் நன்றி அறிவிப்பு கடிதமும் அனுப்பப்பட்டது.


இந்நிலையில் கடந்த 01/04/2012 அன்று பட்டுக்கோட்டையில் புதிய இரயில் பாதை போராட்டக்குழு சார்பாக கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிகின்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சாவூர் தொகுதி பாரளுமனற உறுப்பினரும்,மத்திய நிதித்துறை இணைஅமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்  அவர்கள் மன்னார்குடி,பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் தேவை இல்லை என பேசியதாக கூறப்படுகின்றது.இச்செய்தி 02/04/2012 வெளியான நாளிதழ்களில் வெளியானது.



தஞ்சாவூர் பாரளுமன்ற உறுப்பினர் சகோதரர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இப்படி பேசியது பலருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவையினால ஒரிரு கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றது என்பது உண்மையே.1932 ஆம் ஆண்டு சர்வே எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட பட்டுக்கோட்டை அரியலூர் இரயில் திட்டம் போல மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ  என்ற ஆதங்கத்தில் இத்திட்டத்தை ஆதரிக்கும் ஒருவர் நம்மிடம் கூறினார்.மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் நிறைவேறினால் தென்மாவட்டங்களிடம் வர்த்தக தொடர்பு ஏற்படும் என்பது வர்த்தகர்களின் எண்ணமாகும்.

இத்திட்டத்தினை எதிர்த்து பேசியதாக கூறப்பட்ட சகோதரர் பழனிமாணிக்கம் கடந்த 15/04/2012 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.



மன்னார்குடி பட்டுக்கோட்டை இரயில்வே சேவையினை எதிர்த்தவர்களும் பிறகு இத்திட்டத்தினை வரவேற்று இருப்பது சந்தோஷமான  செய்தியாகும்.எப்படியோ இத்திட்டம் நிறைவேறினால் நன்று.

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் சமையல் மாஸ்டர் ஹனிபா அவர்கள் நேற்றிரவு 18/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, June 18, 2012


திருமணப்பதிவுச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை - சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லாஹ் MLA (வீடியோ)


 

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை" யின் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை (ஆடியோ)

"இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை" யின் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ்


காந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்? சிறுமியின் கேள்விக்கு திணறிய மத்திய அரசு


எந்தப் பெயருக்கும் செயலுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இது திரைப்படப் பாடல் மட்டுமல்ல, நிகழ்கால வாழ்வின் நிதர்சன உண்மையும் அதுவே. கேள்விகள் கேட்கப்படுவதால்தான் தகுந்த பதில்கள், சால்ஜாப்பு பதில்கள், சவடால் பதில்கள், சமாளிப்பு பதில்கள், தருக்குப் பதில்கள், கிறுக்குப் பதில்கள் என பல்வேறு விதமான பதில்களைக் கேட்டு மனிதர்களின் தரம், தன்மை குறித்த மதிப்பீடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ், பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித், மருத்துவ இயலின் தந்தை ஹிப்போ கிரடிஸ், இதுபோன்ற பல்வேறு துறைகளுக்கும் தந்தை யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு மேற்குறிப் பிடப்பட்டவர்கள் எல்லாம் அத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களாக இருந்ததனாலும் முன்னோடிகளாக விளங்கியதாலும் அத்துறைகளின் தந்தை என துறைசார்ந்த நிபுணர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சில கேள்விகளைக் கேட்கும்போது சுவாரசியமான, அதிர்ச்சி விடைகள் கிடைக்கும். அதுபோன்ற ஒரு கேள்வியைத்தான் லக்னோவைச் சேர்ந்த சிறுமி ஐஸ்வர்யா என்ற 6வது வகுப்பு படிக்கும் மாணவி கேட்டார்.
கேட்பதற்கு எளிதானக் கேள்விபோல் தோன்றலாம். இந்தியப் பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சக அலுவலகமும், இந்திய தேசிய ஆவணக் காப்பகமும் திக்கித் திணறி மயங்கி, கிறங்கி, விட்டால் போதும் என ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு அப்படி என்னதான் கேள்வி கேட்டாள் அந்த பச்சிளம் சிறுமி. 1) காந்தி தேசத்தந்தை ஆனது எப்போது? 2) காந்திக்கு தேசத்தந்தை எனப் பெயர் சூட்டியது யார்? இந்த இரண்டு கேள்விகளைத்தான் மாணவி ஐஸ்வர்யா கேட்டாள்.
காந்தி பாசத்தந்தை ஆனக் கதை அவரது மூத்த மகன் பிறந்தபொழுது. ஆனால் தேசத்தந்தை ஆன கதை யாருக்கும் தெரியவில்லை என்பது தான் கொஞ்சம் சுவாரசியமான சோகம். இதே கேள்வியை மாணவி ஐஸ்வர்யா முதலில் தனது பள்ளிக்கூட ஆசிரியையிடம்தான் கேட்டாள். பாவம் பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியவில்லை. பெற்றோருக்கும் தெரியவில்லை.
எல்லாவகையான கேள்விகளுக்கும் வகை வகையாய் விடைகளை பந்திபோல் வலை தளத்தில் வைத்துப் பரிமாறும் கூகுள் இணையதளத்திற்கும் கூட இதற்கான விடை தெரியவில்லை.
ஐஸ்வர்யா

அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அதன் வாயிலாக பிரதமர் அலுவலகத்தை அணுகினார். பிரதமர் அலுவலகத்திற்கும் ஐஸ்வர்யாவின் வினாவுக்கு விடை அளிக்க முடியவில்லை. பாவம் பிரதமர்! அவரது அலுவலகத்தாரும் என்னதான் செய்வார்கள்?
ஒய் திஸ் கொலைவெறி என்ற ஆக்கப்பூர்வமும்(?) அறிவாற்றலும்(?) மிகுந்த திரைப்பாடலைப் பாடிய தனுஷ் என்ற சமூகப்போராளி(?)க்கு விருந்து கொடுப்பதில் ஈடுபாடு காட்டும் பிரதமர் அலுவலகத்திற்கு இதுபோன்ற சின்னபுள்ளத்தனமான கேள்விக்கு விடை தெரியுமா என்ன? வினா, சத்தம் இல்லாமல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப் பப்படுகிறது.
இங்குதான் ஒருவர் கொஞ்சமும் சளைக்காமல் தன்னை நோக்கி வீசப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் எப்படி பதில் சொன்னால் மாட்டிக்கொள்ள முடியுமோ அப்படி பதில் சொல்லும் ஒருவர் இருக்கிறார் என நினைத்ததோ என்னவோ? ஐஸ்வர்யாவின் கேள்வி பிரதமர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் தேசிய தகவல் பதிவகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஊருக்கெல்லாம் தகவல்களை அள்ளி வழங்கும் தேசிய பதிவகத்திற்குகூட இதற்கு விடை தெரியவில்லை.
தங்களிடம் இதுதொடர்பான எவ்வித ஆவணப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என தேசிய தகவல் பதிவகம் தெரிவித்ததோடு ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் அதனை வைத்து ஆய்வுகளை மேற்கொள் ளுமாறு (அடேங்கப்பா) அந்த சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதிலிருந்து முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் எல்லாம் இதைப்போன்ற குபீர் சிரிப்புக் கதைகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகள் அமைகின்றன.
ஹிந்தி தேசிய மொழி என்பதும், இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களின் சமயம் ஹிந்து மதம் என்பது போன்ற தகவல்கள் இதுபோன்ற வகையைச் சார்ந்தவைதான் போலிருக்கிறது.
ஐஸ்வர்யாவைப் போன்ற துடிப்புமிக்க குழந்தைகள் இந்தியா முழுவதும் எழுந்து இதுபோன்ற வினாக்களை எழுப்ப வேண்டும். காந்தியடிகளைக் குறிப்பிட்ட பட்டம் வைத்து அழைத்துத்தான் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதில்லை. காந்தியார் தன் வாழ்நாளின் போதே தன் மீது நேசம் காட்டிய கோடிக்கணக்கான மக்களைக் கண்டு மகிழ்ந்தார். அவருக்குப் பட்டங்கள் வழங்குவது என்பதெல்லாம் சமுத்திரத்துக்கு பிரேம் போட்டு புகைப்படமாகத் தொங்கவிடலாம் என நினைப்பது போன்ற அபத்தம்தானே தவிர வேறொன்றும் இல்லை.
அதுசரி. மக்கள் உணர்ச்சி மிகுதியில் அள்ளி வழங்கும் பட்டங்களின் பூர்வீகத்தை ஆராயப் புகுந்தால் அதிர்ச்சி குண்டுகளும் அநியாயக் காமெடிக் காட்சிகளும் வெளிப்படுமோ!

Sunday, June 17, 2012

கடியச்சேரி சகோதரர் சிராஜுதீன் அவர்களின் மச்சானும்,சகோதரர் மதுக்கூர் SMJ சாதிக்அலி,A.ஜாகீர் உசேன் ஆகியோரின் சகலையுமாகிய சேக்தாவூத் அவர்கள் நீர்முளையில் இன்று 17/06/2012 வஃபாத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
சிராஜுதீன் அவர்களின் தொடர்பு எண் : 9750365293 

Saturday, June 16, 2012


மதச்சார்பற்ற இராணுவம்

பிறந்த நாள் சர்ச்சையில் சிக்கித் தவித்த ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பதவிக் காலம் நிறைவடைந்ததால் புதிய தலைமைத் தளபதியாக பொறுப் பேற்றுக் கொண்ட நாட்டிற்கு மிகமுக்கியமானதொரு செய்தியைக் கூறினார். இந்திய ராணுவம் குறித்த வெளிப்படையான அதிருப்திகளைப் புரிந்துகொண்டவராகப் பேசியிருக்கிறார். குறிப்பாக, ராணுவம் மதச்சார்பற்றத் தன்மை யுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சீக்கிய சமூகத்தில் இருந்து வந்திருப்பதால் பிக்ரம் சிங், ராணுவத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றி பேசுகிறார். சீக்கிய பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை, பாபர் பள்ளிவாசல் இடித்தபோதான சம்பவங்களில் இந்திய ராணுவத்தின் மதச்சார்பு தன்மை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. பொற்கோவில் தாக்குதலில் காலணிகளை அணிந்தவாறு அதன் மதிப்பை மிதித்துக்கொண்டு ரத்த நடவடிக்கைகளில் இறங்கியது. சொற்ப நேரத்திற்குள் சீக்கிய சமூகத்திற்கும் இந்திய தேசத்திற்கும் இடையே அணைக்க முடியாத பகையையும் ராணுவம் பிளவையும் உண்டுபண்ணியது.
அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டபோது, இதே ராணுவம், கோயில் கொடைக்கு வந்ததுபோல ஊர்சுற்றித் திரிந்தது. வீரர்கள் கையில் இருந்த ஆயுதங்களை பவ்யமாக வைத்துவிட்டு, சட்டவிரோத கட்டுமானத்தின் முன் கைகூப்பி நின்றனர். கரசேவகர்களை கலவரக்காரர்களாகப் பார்க்காமல் பக்தர்களாகப் பார்த்தனர். அப்போதுதான், இந்திய சிறுபான்மை சமூகங்களுக்கு இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கை தூர்ந்து போனது.
இனரீதியாகவும், பகுதி உணர்வுகளோடும் கூட ராணுவம் சார்பு நிலை எடுக்கிறது. விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவதாக சொல்லிச் சென்று இலங்கையில் ஈழ மக்களைக் கொன்று குவித்தது அமைதிப்படை. ஈழத்தமிழ் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது. ராணுவம் செய்த கொடுமைக்காகவே ராஜீவ் காந்தி பலிவாங்கப்பட்டார்.
வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் சிறப்புச் சட்டங்கள் இயற்றி வீதிக்கு வீதி நிற்கிறது ராணுவம். அங்கெல்லாம் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கொண்டு அங்குள்ள மக்கள் மிக பயங்கரமானவர்கள், தேசவிரோதிகள் என்றெல்லாம் நம்பவைக்கப்படுகின்றனர். மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் இந்திய ராணுவம் செய்திருக்கும் இரக்கமற்ற படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும் இன்னும் விசாரணைக்குள் வராத கொடும் குற்றங்கள்.
நாகலாந்தின் திமாப்பூர் மாவட்டத்தில் ராணுவம் செய்த போலி என்கவுண்டரை விசாரிக்க திமாப்பூர் ராணுவ அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பிக்ரம் சிங் கூறுகிறார். ஒப்புக்கு ஒரு சம்பவத்தை விசாரித்து விட்டால் மக்களை திருப்திப்படுத்திவிட முடியுமா?
ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் மோதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுவதில் இருந்து, ராணுவம் என்பது மக்களின் அதிருப்தியைப் பெற்ற அமைப்பு, அது மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே அவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவ அதிகாரிகளுக்கும் - ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் விசாரிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரிகளும் - வீரர்களும் ‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் இளைஞர்கள் பலரை ‘காணாப் பொணமாக்கி’ உள்ளனர். இளம்பெண்கள் மீது வன்புணர்ச்சியும், கொலைகளும் நடத்தியுள் ளனர். தேசமே அதிர்ந்த சோப்போர் சம்பவம் உதாரணம்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் வெளிப்படையான மத உணர்வுகளை செயல்படுத்தி வருகிறது. கல்லெறிந்த சிறுவர்களைக் கூட ராணுவம் வீடாகத் தேடி கைது செய்கிறது.
ராணுவத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் பங்களிப்பும், எண்ணிக்கையும் மிகக்குறைவாக இருக்கிறது. ராணுவத்துக்குள்ளேயே அவர்கள் சக்தி வாய்ந்த சமூகமாக இல்லை. சுதந்திர இந்தியாவில் ராணுவத்தில் இதுவரை ஒரு முஸ்லிம் தலைமைத் தளபதியாக பதவி வகித்ததில்லை.
மதக்கலவரத் தடுப்பு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது. மாநில அரசுகள் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், மாநில காவல்துறையின் செயல்பாடுகளில் நம்பிக்கையில்லாது போனால், அப்பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பிவைக்கப்படும் என்று அந்த மசோதா கூறுகிறது. இந்த இடத்தில்தான் மதச்சார்பற்றத் தன்மையுடன் ராணுவம் இருக்கவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.
உள்ளூர் காவல்துறை முதல் உளவுத்துறை வரை மதச்சார்பு ஊட்டப்பட்டவர்களாக அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளனர். நாட்டில் ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்திற்கும் கண்காணிப்புக்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட கல்வி முறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வையும், இருப்புக்கு எதிரான எரிச்சலையும் ஊட்டியிரு க்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வி கண்டிருப்பதற்கும், அரசு எந்திரங்களை வேலை வாங்குவதில் நம்பிக்கையற்றுப் போயிருப்பதற்கும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த உணர்வுகளும், எரிச்சல்களுமே காரணம்.
முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி ஊட்டப்படும் சமூக அமைப்பில் இருந்தே காவல்துறைக்கும், உளவு அமைப்புகளுக்கும் ஆள் எடுக்கப்பட்டிருப்பதைப் போன்று ராணுவத்திற்கும் ஆள்சேர்ப்பு நடக்கிறது. பின்னர் ராணுவம் எப்படி சிறுபான்மையினரின் நம்பிக்கைக்குரிய அமைப்பாக இருக்க முடியும். ராணுவம் ஏற்கெனவே அந்த நம்பிக்கையை இழந்திருக்கிறது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதுவும் முஸ்லிம்களால் நடந்ததாக செய்திகள் பரப்பப்பட்டால் முஸ்லிம்களின் குடியிருப்புகளை சீருடைகள் சூழ்ந்து கொள்கின்றன. பதற்றம் பற்றவைக்கப்படுகிறது. பருந்துகளைக் கண்ட கோழிக் குஞ்சுகளைப் போல முஸ்லிம்கள் வீடுகளில் ஒதுங்குகின்றனர். சற்று நேரங்களில் கைது செய்யப்படப் போகும் தங்கள் பிள்ளைகளின் நிலை கண்டு பதறுகின்றனர். பின்பு அவர்கள் உயிருடன் திரும்புவார்களா? இல்லை, எங்கோ கொண்டு போகப்பட்டு ராணுவத்தின் என்கவுண்டர்களுக்கு இரையாவார்களா? என்பது யாருக்குத் தெரியும்.
துப்பாக்கி ரவைக்கு இரையானதும் செய்தித் துறைக்கு தீனியானதும் இந்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள்தானே. பயங்கரவாதிகள் என்ற பட்டப் பெயருடன் அவர்களுடைய வரலாறு முடிகிறது. இவ்வாறான பின்னணியில் ராணுவத்தை நம்பிக்கைக்குரியதாக எப்படி உணர முடியும்? அன்னிய நாடொன்றில் புகுந்துவிட்டதான வெற்றிக்களிப்பைப் போன்றே சொந்த மக்களின் வீதிகளில் ராணுவமும் மிடுக்காக நடந்துகொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் ராணுவம் அண்டை நாடுகளுடன் மோதியதைவிட சொந்த நாட்டு மக்களோடு மோதிய சம்பவங்கள்தான் அதிகம். மியான்மர் ராணுவ ஆட்சி நடக்கும் நாடு. ஆனால் மியான்மரைக் காட்டிலும் இந்தியாவிலும் இலங்கையிலும்தான் மக்கள் மீதான ராணுவத்தின் அடக்கு முறைகள் அதிகம் நடந்திருக்கின்றன. கார்க்கில் மோதலில் விருதுகளுக்காக தன் நாட்டு வீரர்களையே கொன்று விட்டு கணக்கு காட்டிய துரோக கதையும் உண்டு தானே?
ஆனாலும் ராணுவம் மரியாதைக்குரிய பீடமாக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங்தோனி தான் ஓய்வு பெற்றதும் ராணுவத்தில் சேர்வதாக கூறுகிறார். ராணுவ பயன்பாடு இல்லாத சமூகமே நல்ல மனிதர்களை கொண்ட சமூகமாக இருக்கும்.
இன உணர்வுகளும், மத உணர்வுகளும் வெறியாக ஊட்டப்பட்ட சமூக அமைப்பில் இருந்து பொறுக்கி எடுக்கப்படும் வீரர்களை வெறும் 28 மாத பணிக்காலத்தில் தளபதி பிக்ரம் சிங் எப்படி மதச்சார்பற்ற அமைப்பாக மாற்றுவார் என்பதே கேள்வி.

Friday, June 15, 2012


ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் குடிமகனுக்கான போட்டியில் முன்னணியில் உள்ள பிரணப் முகர்ஜியின் கடந்த கால வாழ்க்கை
மேற்குவங்க மாநிலம் Birbhum மாவட்டத்தில் Mirati என்ற இடத்தில் சுதந்திர போராட்ட வீரரான Kamada Kinkar Mukherjee – Rajlakshmi தம்பதியருக்கு 1935ம் ஆண்டு பிறந்தார் பிரணப் முகர்ஜி. சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, அரசியல் ஆகிய இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  இவர் சட்டமும் பயின்றுள்ளார். ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரணப். தமது 22வது வயதில் Suvra Mukharjee-ஐ மணந்த இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தந்தையின் மறைவுக்குப் பின் 1960களில் அரசியலில் நுழைந்த பிரணப், 1969ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2004, 2009ம்  ஆண்டுகளில் மக்களவைககும் தேர்வானார் பிரணப் முகர்ஜி. மாநிலங்களவையிலும், மக்களவையிலும் அவை முன்னவராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பிரணப், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2000வது ஆண்டு முதல் மேற்குவங்க காங்கிரஸ் தலைவராகவும், 2004ம் ஆண்டு முதல் மக்களவையின் அவைத்தலைவராகவும் நீடிக்கிறார் பிரணப் முகர்ஜி.
1973ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தியின் அமைச்சரவையில் தொழில் வளர்ச்சித்துறை துணையமைச்சராக பொறுப்பேற்றது முதலே நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக பிரணப் இருந்து வருகிறார்.  1980இல் கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரணப், நிதி, வர்த்தகம், வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் திறம்பட நிர்வகித்துள்ளார். 1980-களில் நிதியமைச்சராக இருந்த போது, அவரால் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங். திட்டக்குழு துணைத் தலைவராக 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இவர் பதவி வகித்துள்ளார்.  சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்ரிக்க வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பல்வேறு முக்கிய  பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார் பிரணப் முகர்ஜி.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றது முதல் மத்திய அரசின் அச்சாணியாக திகழ்கிறார் பிரணப் முகர்ஜி. அரசியல், பொருளாதார விவகாரங்களில் வித்தகரான பிரணப் ஆட்சியிலும், நிர்வாகத்திலும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறார்.  தாம் ஏற்ற அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு அந்த பதவிகளுக்கு பெருமை சேர்த்த பிரணப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகனாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

Thursday, June 14, 2012


திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் 10 வகுப்பு 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது.
அதைபோல் 6 முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணமாக ரூ 2,00,000 (இரண்டு லட்சம்) வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட செயலாளர் (ம.ம.க) பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ், கிளை தலைவர் முஹம்மது பாபு, கிளை செயலாளர் அப்துல் நாசர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணிச்செயலளர் காஜா மொய்தீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும்,மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களும்,மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை மாணவரணிச்செயலாளர் மன்சூர் பாபர் அவர்கள் நன்றி கூறினார்.









குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை வெளியிடப்படுகிறது.
அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.
வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17.
தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.
பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நிரந்தரப் பதிவு:
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Wednesday, June 13, 2012


எண்ணெய் கிணறு தோண்டுதல் பணி :
பட்டுக்கோட்டையில் 15ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களில் எண் ணெய் கிணறுகள் அகழ்வாராய்ந்து தோ ண்டுதல் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 15ம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது.
கெயில் (இந்தியா) லிமிடெட்., கடற்கரை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு (அகழ்வாராய்ச்சி கிணறு தோண் டுதல்) காவிரி வடிகால் பிளாக் நிறுவனம் சார்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
 தஞ்சை மாவட்டத்தில் முழு முப்பரிமாண பூகோள சர்வே அடிப்படையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களில் அமைந்துள்ள கிராமங்களில் வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியும் இடங்களில் 4 எண்ணெய் கிணறுகளை 2 கட்டங்களில் அகழ்வாராய்ந்து தோண்டி ஆய்வு நடத்த உள்ளனர்.
இத்திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் பட்டுக்கோட்டை மாரியம்மன்கோயில் ரோடு, பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குட்டாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் நோக்கங்களை கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கால்பந்து தொடர் போட்டி

கால்பந்து என்ற ஓர் விளையாட்டு இந்தியாவில் இன்று விளையாடப்படுகின்றதா ? என்பது ஓர் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

ஆனால் நமதூர் அருகாமையில் உள்ள ஆலத்தூரில் ஆலத்தூர் கால்பந்து கழகம் நடத்தும் முத்துச்சாமிM.A.,சின்னத்தம்பிB.A., நினைவு கோப்பைக்கான 46 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி நாளை 14/06/2012 முதல் நடைபெறுகின்றது.

நாளைய ஆட்டம் (14/06/2012)

மதுக்கூர் Vs பொதக்குடி
 


மதுக்கூர் இராமம்பாள்புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டுகள்,திருட்டு முயற்சிகள் நடந்து வருகின்றது என்பதை நாம் நமது இமெயில் சேவை முலமாக தெரியப்படுத்தி வந்துள்ளோம்.தக்வா மஸ்ஜித் அருகில் உள்ள மர்ஹும் நாகூரார் வீட்டு ரபி அவர்கள் குடும்பத்தினர் நேற்று மாலை 12/06/12 உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனார்.இரவு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார்கள்.இன்று 13/06/2012 காலை  வீட்டிற்க்கு வந்துள்ளார்கள்.வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.வீட்டின் அறைகள் திறக்கப்பட்டு பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் நகைகளும்,ரூ 6000/= கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அக்கபக்கத்தில் இருந்தவர்கள்கூடினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்டது சம்மந்தமாக மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை நடத்தினார்கள்.

 சென்ற மாதம் இதே பகுதியில் அதாவது திருட்டு நடைபெற்ற வீட்டின் மிக அருகில் உள்ள சகோதரர் ஜமால் முகம்மது வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                கொள்ளை நடந்த வீடு


மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் சாபு என்கின்ற அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அபுதாகீர் அவர்களின் தாயாருமான தாஜுன்னிஸா அவர்கள் இன்று 12/06/2012 வஃபாத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


அபுதாகீர் தொடர்பு எண் : 055 8688968 

Tuesday, June 12, 2012


மதுக்கூர் மேலசூரியதோட்டம் மீன்கடை முஹம்மது அவர்களின் மகளும்,அதிராம்பட்டிணம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அபுதாகீர்,ஹக்கீம்,அப்பாஸ் ஆகியோரின் தாயாருமான,அனீஸ் அகமது,ஜாகீர் உசேன் ஆகியோரின் சகோதரியுமான வஹீதா பீவி அவர்கள் இன்று 12/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


(அன்னாரின் நல்லடக்கம் அதிராம்பட்டிணத்தில் நடைபெறும்)


ஹக்கீம் அவர்களின் தொடர்பு எண் : 9965440107

Monday, June 11, 2012


சிறைவாசிகளை விடுதலை செய்க!


இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் J.S. ரிபாயி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.





 

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் முஹம்மது 

இஸ்மத்


PDFE-mailPrint
முஹம்மது இஸ்மத், மணிப்பூரைச் சேர்ந்த மாணவர். அகில இந்திய பள்ளி கல்வித் தேர்வான சி.பி.எஸ்.இன் 12ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளார். இவர், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி நாட்டுக்கும்; மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால லட்சியம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள தவ்பல் மாவட்டத்தில் லைலாங் ஹையோரபி என்ற குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முஹம்மது இஸ்மத்தின் வீட்டில் மின்சார வசதி கிடையாது.
ஐ.ஏ.எஸ். தேர்விலும் இந்தியாவிலேயே முதலாவதாக தேர்வாவது தனது லட்சியம் என்று கூறிய இஸ்மத், அந்தப் பதவியின் மூலம் நாட்டு மக்களின் அமைதி மற்றும் சமாதானத்திற்காகப் பாடுபடுவேன் என்கிறார். புதுடெல்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் (இயற்பியல்) சேர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்மத் 18 மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் இறந்துவிட்டார்.
இஸ்மத்தின் தந்தையார் மவ்லவி பசியுர் ரஹ்மான் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியராகவே பணியாற்றி தனது ஏழு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். ஆறு பெண் குழந்தைகளுக்குப் பின்னர் கடைக்குட்டி ஆண் குழந்தையாய் பிறந்தார் முகமது இஸ்மத். வறுமையிலும் செம்மை பேரணி ஆறு பெண்களை பட்டதாரிகளாக்கினார் மவ்லவி பசியுர் ரஹ்மான். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவார்த்தி வெளிச்சத்தில் படித்த முஹமது இஸ்மத், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றார். கணிதம், வேதியியல், ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம்சயின்ஸ் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்μம், இயற்பியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தினமும் எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை படித்து தேசிய அளவில் முதலிடம் பிடித்த முஹமது இஸ்மத் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்.

Sunday, June 10, 2012

மதுக்கூர் பெரியார்நகர் ரோஜா தெரு சகோதரர் M.M.A.முகம்மது ராசிக் (த/பெ தங்கக்கனி என்கின்ற M.M.A.அப்துல்காதர்)அவர்களின் வீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று 10/06/2012  நடைபெறுகின்றது.







சகோதரரின் குடும்பத்தினருக்கு எங்களின் வாழ்த்துக்கள் (பாரக்கல்லாஹ்)

Saturday, June 9, 2012


மதுக்கூர் சிவக்கொல்லை பாரதி நகர் வெஸ்டன் ஸ்கூல் பின்புறம் மர்ஹும் மு.ரா.அப்துல்கறீம் அவர்களின் மனைவியும்,மீன் மார்கெட் ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமான சுல்தான் அம்மாள் அவர்கள் இன்று 09/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Friday, June 8, 2012


மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் ம.செ.அப்துல் ஜப்பார் அவர்களின் மகள் மெஹர் பானு அவர்கள் இன்று 08/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

மதுக்கூர் மெளலானா தோப்பு பக்கீர்ஷா வீட்டு மர்ஹும் சேக் அலாவுதீன் அவர்களின் மனைவி பஜரீயா பீவி அவர்கள் இன்று 08/06/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
சிறுபான்மையினர் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரி: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


 முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை நியமிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சச்சார் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக ஜூன் மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.
 சச்சார் கமிட்டியின் இந்த முக்கிய பரிந்துரையை பெரும்பாலான மாநில அரசுகள் இன்னும் நிறைவேற்றாததை அடுத்து இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
 இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து அறிவதற்காக நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் 2005 மார்ச் 9-ம் தேதி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
 முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் போலீஸ் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளராக ஒரு முஸ்லிம் அதிகாரியையாவது நியமிக்க வேண்டும் என்று சச்சார் கமிட்டி நவம்பர் 2006-ம் ஆண்டு சமர்ப்பித்த தனது அறிக்கையில் தெரிவித்தது.
 4 ஆண்டுகளுக்கு முன்பாக மாநில அரசுகளை இது தொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. "கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும், அந்த நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்துமாறும்' அந்தக் கடிதத்தில் ஆர்.கே.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
 சச்சார் கமிட்டியின் இந்த பரிந்துரையை அமல் செய்வதில் ஒழுங்கற்ற முறை நிலவுவதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 கமிட்டியின் மற்ற பரிந்துரைகளை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தங்களது நிர்வாக எல்லைக்கு உட்பட்டு நிறைவேற்றி வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  
                                                                                            

Thursday, June 7, 2012


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் என்னும் ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.அதுவும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இந்நோய்வின் தாக்கம் அதிகமாக உள்ளது.உயிர் இழப்புகளும் அன்றாடம் ஏற்படுகின்றது.இந்நோய் கொசுவிலிருந்து உற்பத்தியாகின்றது.

தோங்கி கிடங்கும் தண்ணீர்
உபயோகம் மற்ற கழிவறைகள்
பழைய பிளாஸ்டிக் பொருட்கள்
உபயோகமற்ற மாவு அறவை கல்

ஆகியவற்றிலிருந்து உண்டாகும் கொசுகளிலிருந்து டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது.காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றது.நமது வீட்டை சுற்றி உபயோகமற்ற பொருட்கள் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

டெங்கு காய்ச்சலை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாநில,மாவட்ட,பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல்படுகின்றது.நமதூர் பேரூராட்சி நிர்வாகமும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுவினை அழிக்கவேண்டும் என்ற முனைப்புடன் இன்று (07/06/2012) நகரின் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டது.


சென்னையில் அதிகரிக்கும் சிசேரியன் குழந்தைகள்


சென்னையில், கர்ப்பிணிப் பெண்களில் இருவரில் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனராம். கடந்த ஆண்டு அரசு மருத்துவ மனைகள் மற்றும் மாநகராட்சி பேறுகால மையங்களில் குழந்தைப் பெற வரும் பெண்களில் சுகப்பிரசவம் பெறுபவர்களைவிட அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகக் பேறு மருத்துவர்கள் (obsterician) கூறுகிறார்கள்.
சென்னையில், முன்னணி மருத்துவமனைகளில் 50 சதவீத குழந்தைகள் பிறக்கின்றன. எழும்பூரில் உள்ள தாய்மை மற்றும் பெண்கள் நோய்க்கான பயிற்சியகத்தில் குழந்தைப் பேறுக்காகச் சேர்ந்தவர்களில் 50 சதவீதத்தினர் அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்திருந்தனர். மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் கடினமாகியுள்ளது என்கிறார் இந்தப் பயிற்சியகத்தின் இயக்குனர் கே.ஜெயஸ்ரீ.
கடினமான பிரசவங்களை நகரின் முக்கிய மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. அதுவும் இதற்கொரு காரணம் என்கிறார். கர்ப்பிணிப் பெண்களிடம் உயர் அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை (gestational diabetes), கருவில் ரத்தக்கசிவு போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன என்கிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெற்றவர்களையும், அதன்பின்னர் இரண்டாண்டு இடைவெளியின்றி கற்பமுற்ற பெண்களையும் இம்மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் உள் புண் ஆற இரண்டு ஆண்டுகள் அவசியப்படும். அதற்கு முன்பாக கருவுற்றால், அது அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும். இரண்டு ஆண்டு இடைவெளிக்குள்ளாக கருவுறும் பெண்களையும் எடுத்துக் கொள்கிறோம். தினமும் 200 மகளிர் வெளிநோயாளிகளாக வருகின்றனர் என்கிறார் ஜெயஸ்ரீ.
தாயையும், சேயையும் ஒருங்கே காப்பாற்ற வேண்டுமென்ற அச்ச உணர்வுதான் பேறுகால அறுவை அதிகரிப்பதற்கு காரணம் என்கிறார் சென்னை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பி.கோபினாத். கடந்த வருடம் இம்மருத்துவமனையில், 45 முதல் 50 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு 25 பெண்கள் இங்கு குழந்தைப் பெறுகின்றனர். சென்னை இராயபுரத்தில் உள்ள ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்) மகப்பேறு மருத்துவமனையில் அதிகபட்சமாக 51 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.
பெண்கள் கருவுறுகின்றனர். அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்ய தகுந்த காரணம் இருக்கிறது. நாங்கள் அதை ஆய்வு செய்கிறோம். இருந்தாலும் சில பெண்கள் இரத்த சோகையால் மரணிக்கின்றனர். இதுதான் இன்றுவரையுள்ள பிரச்சனை. இரத்த சோகையுடன் (anaemic) நலக்குறைவுடனும் தான் கருவுறுகின்றனர் என்கிறார் பி.கோபினாத்.

Wednesday, June 6, 2012


மதுக்கூர் (வடக்கு) பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படையெடுக்கும் பெற்றோர்கள் 

தங்கள் பிள்ளைகளுக்கு அதுவும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய கல்வி கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் ஆண்,பெண் இருபாலாரும் இணைந்து படிக்கின்ற பள்ளிகளிலிருந்து குறிப்பாக 5 வகுப்பிலிருந்து 6 வகுப்புக்கு தேர்ச்சி பெறும் மாணவிக்கு அவர்கள் படித்துகொண்டிருக்கின்ற பள்ளிகளிலிருந்து மாற்று சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு மதுக்கூர் வடக்கில் இருக்கின்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகமான பெற்றோர் படையெடுக்கின்றார்கள்

ஆனால் வருகின்ற அத்தனை மாணவர்களுக்கு அங்கு சேர்த்து கொள்ள போதுமான இடவசதி இல்லை என கூறி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்.இதனால் சிலருக்கு இடம் கிடைக்கவில்லை என்ற  ஏமாற்றமும் ஏற்படுகின்றது.

தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அதிக கவனத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது பாராட்டுக்குரியது.இப்பள்ளியில் பயின்ற முஸ்லிம் மாணவிகள் அரசு பொதுத்தேர்வுகளில் இப்பள்ளியளவில் தொடர்ந்து முன்னிலையில் மதிப்பெண்கள் பெற்று வருவதும் கவனிக்ககூடிய அம்சம்.

நல்லமுறையில் கல்வி பயின்று கொடுக்கின்ற இப்பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்




இணைவைப்புக்கு எதிரான பொதுக்கூட்டம்

நேற்று 05/06/2012 மாலை பிறை 15 மதுக்கூரில் உள்ள தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது.இக்கந்தூரி விழாவினை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இணைவைப்புக்கு எதிரான பொதுக்கூட்டம் நேற்று நூருல் இஸ்லாம் தெருவில் (டி.எம்.ஏ.அபுபக்கர் வீடு அருகாமையில்) நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டதில் மசூதா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும்,மெளலவி அப்துல் காதர் மன்பஈ அவர்கள் இனைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பிலும்,மெளலவி செங்கீஸ்கான் அவர்கள் நபிதோழர்களும்,நாமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

ஆண்கள்,பெண்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டார்கள்




இக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என காவல் துறையினை நமதூர் ஜமாத் நிர்வாகம் அனுகியது.பலன் கிடைக்கவில்லை.மேலும் பொதுக்கூட்டத்தில் பேசபடும் கருத்துக்கள் வெளியில் யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வருடம் இஸ்லாமிய பாடல்கள் ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக தொடர்ந்து ஒலிபெருக்கியில் போடப்பட்டது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இஷா தொழுகை பங்குக்கு கூட இஸ்லாமிய பாடல்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டது.

Tuesday, June 5, 2012


மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம்


மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள், காலையிலும், மாலையிலும் சென்று வருகிறார்கள். இப்பகுதியில் மாணவ, மாணவிகள் நடமாட்டத்திற்கு இடைய்யூராகவும், மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு அச்சத்தையும், இடையூரையும் ஏற்படுத்தும் விதமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு திடீரென அப்பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை (கடை எண் 10653) உடனே அப்புறப்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் மதுக்கடை முன் முற்றுகைப் போராட்டம் 03.06.2012 அன்று நடைபெற்றது.
மமக மாவட்ட செயலாளர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சர்தார் அலி, மாவட்ட துணைச் செயலாளர் செய்யது சிராஜுதீன், மைதீன், மாவட்ட தலைவர் பாலை பாரூக், தமுமுக மாவட்ட செயலாளர் கே.எஸ். காசிம் பிர்தவ்ஸி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பகுதி தலைவர் A. காஜா, செயலாளர் இ.எம். அப்துல் காதர், பொருளாளர் அசன் மைதீன், துணைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.








மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பேருந்து நிறுத்தத்திற்க்கு மிக,மிக அருகாமையில் கிழக்கு,தெற்கு திசைகளில் இரண்டு அரசு மதுபானக்கடைகள் உள்ளது.இதன் காரணமாக "குடிமகன்"களால் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அந்த இரு மதுபானக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற் நோக்கத்தில் மனித நேய் மக்கள் கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்ற்து.அதன் ஒரு பகுதியாக சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு,மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ம்னு என சில ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றது.



பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடை புகைப்படம்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...