இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, September 27, 2014

மதுக்கூரில் தமுமுக மாநில துணைத்தலைவர்
நேற்று 26/09/2014 வெள்ளிக்கிழமை ஒரு நாள் சுற்றுபயணமாக தஞ்சாவூர் மாவட்டம் வருகை தந்த சமுதாய பேரியக்கம் தமுமுகவின் நிறுவனரும்,மாநில தமுமுக துணைத்தலைவருமான பெரியவர் குணங்குடி அனிபா அவர்கள் மாலை 4:30 மணிக்கு மதுக்கூர் நகர் அலுவலகம் வந்தார்.அவரை மாவட்ட துணைச்செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மாணவர் இந்திய நகர நிர்வாகி முகம்மது மர்சுக், மற்றும் தமுமுக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.தமுமுக நகர நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் செய்தார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி கோரியும்.தமுமுகவின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர் அவர்களையும்,மதுக்கூர் பேரூராட்சி தலைவர் ஜனாப் பசீர் அகமது அவர்களையும்,சமூக ஆர்வலர்கள் அண்ணா மெடிக்கல்ஸ் ஜனாப் நத்தர்ஷா அவர்களையும்,லக்கி ஹார்டுவேர்ஸ் ஜனாப் அப்துல் காதர் அவர்களையும்,முன்னாள் அமீரக தமுமுக தலைவர் மதுக்கூர் ஹாஜா மைதீன் அவர்களையும், சந்தித்து பேசினார்.மாநில துணைத்தலைவர் அவர்களுடன் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாவட்ட தலைவர் பாதுஷா,மாநில வர்த்தக அணிச்செயலாளர் கலந்தர் மற்றும் மதுக்கூர் நகர அணி நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.








Wednesday, September 24, 2014


பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு

மதுக்கூர் 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு (கீழக்காடு) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச்சார்ந்த திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.பேரூராட்சி செயல் அலுவலர் திரு ரமேஷ் அவர்கள் பதவி பிராணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,அதிமுக நகர செயலாளர் எழுத்தர் சரீப்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முகைதீன் மரைக்காயர்,பேரூராட்சி உறுப்பினர்கள் முருகையன்,ஆர்.சுரேஷ்.மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.




மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் இடையகாடு மாப்பிள்ளைத்தம்பி வீட்டு அப்துல் ஹமீது அவர்கள் இன்று (24/09/2014) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.

மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)
மதுக்கூர் மாணவிக்கு தங்கப்பதக்கம்..தமுமுக பாராட்டு...
மதுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி தனது அறிவியல் ஆசிரியர் உதவியுடன் இயற்கையில் உணவை பாதுகாக்கும் முறையைக்கண்டறிந்து படைப்பாக வைத்துள்ளார்.குளிர்சாதனப்பெட்டி போன்ற இந்த படைப்பில் மின்சாரம் இல்லாமல் உணவை இயற்கையான முறையில் பதப்படுத்தி பாதுகாத்து வைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது.
இந்த முயற்சிக்கு மாணவி ஜான்சிராணிக்கு மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றார்.
மாணவியின் இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் மதுக்கூர் தமுமுக மாணவரணி சார்பாகவும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா சார்பாகவும் மாணவி ஜான்சிராணிக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர் முகம்மது அஸாருதீன் ,மாணவர் இந்தியா நகர துணைச்செயலாளர் முகம்மது மர்சுக்,தமுமுக நகர தலைவர் ஜபருல்லா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் நிஜாமுதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மாணவியின் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும்,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி செல்வகுமாரி ஆகியோரையும் தமுமுக நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
வருகின்ற 5ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ஜான்சிராணி தேசிய அளவில் நடைபெறக்கூடிய அறிவியல் போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.



Tuesday, September 16, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மரண அறிவிப்பு

மதுக்கூர் M.M.A.அப்துல் ரஜாக் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,M.M.A.அல்லாபிச்சை அவர்களின் தாயாருமாகிய பட்டுக்கோட்டை அம்மா என்கின்ற ஜெமீலா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் O.P.M.அல்லாபிச்சை அவர்களின் மருமகளும்,முகம்மது அலி அவர்களின் மனைவியும்,உமர்கான் அவர்களின் தாயாரும்,மர்ஹும் N.S.A.ஜியாவுதீன் அவர்களின் மகளும்,மதுக்கூர் தங்கப்பா அவர்களின் மாமியாருமான அலியா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Saturday, September 13, 2014

முன்னாள் துபாய் மண்டல தமுமுக தலைவர் மதுக்கூர் S.M.ஹாஜா மைதீன் இல்லத்திருமணம்

மணமக்கள் 
முகம்மது இக்ரம் (த/பெ  ஹாஜா மைதீன்)
ஆசிக் நாச்சியா (த/பெ ஹிதாயத்துல்லாஹ்)

மண நாள் 
ஹிஜிரி 1435 துல்கஃதா பிறை 17 (13/09/2014) சனிக்கிழமை

மண இடம்
ஆழியூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

Tuesday, September 9, 2014

மரண அறிவிப்பு
மதுக்கூர் தமுமுக முன்னாள் தலைவரும்,சிறந்த செயல்வீரருமான ரெடிமேட் சென்டர் உரிமையாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மாமனார் ஹாஜாமுகைதீன் அவர்கள் நேற்று இரவு 08/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று 09/09/2014 மாலை 4:00 மணிக்கு பத்துக்காடு அருகில் உள்ள கரப்பங்காட்டில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

Saturday, August 16, 2014

மதுக்கூரில் மழை

மதுக்கூரில் கடந்த 30 நிமிடங்களாக நல்ல மழை பெய்கின்றது (அல்ஹம்துலில்லாஹ்),வீதிகளில் மழை நீர் பெருகெடுத்து ஓடுகின்றது.மதுக்கூரில் அல்லாஹ்வின் கிருபையால் நல்ல மழை பெய்தது.
 







Friday, August 15, 2014

மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்

மதுக்கூர்  நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இந்தியாவின் 68 வது சுகந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று சிறப்புடன் நடைபெற்றது.

இன்று காலை சுமார் 9:00 மணியளவில் மதுக்கூர் நகர தமுமுக அலுவலகத்தில் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் அமீரக முன்னாள் பொறுப்பாளர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

காலை 10:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் நகர தமுமுக சார்பாக இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இம்முகாமினை சமூக ஆர்வலர் சகோதரர் KNM  நத்தர்ஷா அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் NR ரெங்கராஜன் அவர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் M.தண்டாயுதபாணி,முன்னாள் அரிமா தலைவர் சகோதரர் A.ஜாகீர் உசேன்,வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கத்துரை,முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜான் தனசேகரன்,வாட்டாகுடி பாலசுப்ரமணியன்,டாக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியின் மூலமாக 10 சகோதரர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த வகையினை அறிந்து கொண்டார்கள்

மாலை 7:30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சுகந்திர தின தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது."சுகந்திரப்போரில் முஸ்லிம்களின் பங்கு " என்ற தலைப்பில் தமுமுக தலைமைக்கழகப்பேச்சாளர்  சகோதரர் பழனி பாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்தினர்கள்.முன்னதாக மாவட்ட கழக பேச்சாளர் பவாஸ் மற்றும் கவுன்சிலர் கபார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.




















Thursday, August 14, 2014


இந்திய தேசத்தின் 68வது சுகந்திர தின கொண்டாட்டங்களில் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)


Wednesday, August 13, 2014

எல்லா புகழும் அல்லாஹ்கே 
மதுக்கூர் கீற்று சந்தைப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்துவந்தது.இப்பகுதியில் வேகத்தடை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தது.இதுகுறித்து தமுமுகவும் சம்மந்தப்பட்ட துறையில் கோரிக்கை மனுகொடுத்திருந்தது.கடந்த வாரம் மதுக்கூர் தமுமுக அலுவலகம் வந்த நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.நேற்று 12/08/2014 கீற்று சந்தை பகுதியில் புதிய வேகத்தடை அமைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.(மதுக்கூர் மெயின்ரோடு MSM  motor அருகில் மார்க்கெட் செல்லும் வழியிலும் வேகத்தடை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது)






Saturday, August 9, 2014

நிக்காஹ் வாழ்த்து

மணமக்கள்
A.ஹாஜா நஜுமுதீன் (S/Oமாவண்ண.M.அப்துல் சமது)
J.ஜெமீமா நஸ்ரின் (D/O.S.N.A.ஜாகீர் உசேன்.)

மணநாள்
ஷவ்வால் பிறை 13 (10/08/2014) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மணமக்களை வாழ்த்தும் துவா
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்



Saturday, July 26, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சிவக்கொல்லை (வெஸ்டன் ஸ்கூல் அருகில்) கருப்பூரார் வீட்டு A.M.முகம்மது மைதீன் அவர்களின் மனைவியும்,ரியாஸ்,ராஜிக் அகமது ஆகியோரின் தாயாருமான நஜீமா பேகம் அவர்கள் இன்ரு 26/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Friday, July 25, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 26
கேள்விகள்
1.தர்மம் செய்துவிட்டு சொல்லிக்காட்டுபவர்களுக்கு அல்லாஹ் கூறும் உதாரணம் என்ன ?

2.மன்னு ஸல்வா என்றால் என்ன ? அது யாருக்கு வழங்கப்பட்டது

3.எந்த நபிதோழருக்கு லம் யகுனில்லதின கஃபரூ என்று தொடங்கும் சூராவை ஓதி காட்டுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான்

(பிறை 26 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் அல்லாபிச்சை அவர்கள்)

Thursday, July 24, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 25

கேள்விகள்
1.மூன்று இரவுகள் மட்டும் பேச முடியாமல் இருந்த நபி யார் ?

2.மூஸா நபிக்கு அல்லாஹ் எத்தனை அத்தாட்சிக்களை கொடுத்து இருந்தான் ?

3.அபூதுராப் என்று அழைக்கப்பட்ட நபித்தோழர் யார் ?

(பிறை 25க்கான பரிசுக்களை வழங்குபவர் சகோதரர் N.M.S.அல்லாப்பிச்சை அவர்கள்)
ரமலான் பரிசுப்போட்டி பிறை 23 சரியான பதில்கள்

1.திருடினால் தண்டனை என்ன என்று அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனம் எழுதவும்.

5:38. ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.


2.கியாத் நாளின் பெரிய அடையாளங்கள் எத்தனை ? அவை யாவை ?

மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
பத்து அடையாளங்கள் 

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
3.மீன் வயிற்றுக்குள் யூனூஸ் நபி (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன என்று அல்லாஹ் சொல்கின்றான்.

21:87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
சரியான பதில்களை 9 நபர்கள் எழுதி இருந்தார்கள் அவர்களின் சகோதரி Nawfa Refaideenஅவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.





ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள்

1.போர் முனையில் எவ்வாறு தொழவேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.



2.ஈஸா நபி (அலை) அவர்களின் உதாரணம் யாருடைய உதாரணம் போன்றது என அல்லாஹ் கூறுகின்றான்.

3:59. நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது.


3.லைலத்துல் கத்ரில் என்ன துஆ ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை!
'
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
'
அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)
என்று கற்றுக் கொடுத்தார்கள்.'
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)


ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள் எழுதியவர்கள் மொத்தம் 14 நபர்கள்.அவர்களில் சகோதரர் பயாத் அகமது அவர்கள் பரிசுக்குரியவராக குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார்,

(பரிசுகளை வழங்குபவர்கள் சகோதரர் N.M.S.அல்லாபிச்சை அவர்கள்)
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...