இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, August 15, 2013

மதுக்கூரில் சுகந்திரதின கொண்டாட்டங்கள்
இந்திய தேசத்தின் 67 சுகந்திர தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..மதுக்கூரில் நடைபெற்ற சுகந்திர தின கொண்டாட்டங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியினை பேரூராட்சி பெருந்தலைவர் என்.எஸ்.எம்.பசீர் அகமது அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அதிகாரி மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,ஜோதிராஜன்,சுரேஸ்,கபார்,மணிவேல்,சுரேஸ்,மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வர்த்தக பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


 மதுக்கூர் நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்)

மதுக்கூர் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் (தெற்கு) சுகந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் முதல்வர் திருமதி காந்திமதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ஜாமியா மஸ்ஜித் தலைவர் சகோதரர் அமானுல்லா,பெற்றோர் ஆசிரியக்கழகத்தலைவர் பெரியவர் அப்துல் காதர்,கல்விக்குழுத்தலைவர் கபார் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சியின் தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


  மதுக்கூர் தமுமுக அலுவலகம்

மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன்  அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.








பிஎப்ஐ அலுவலகம்

பிஎப்ஐ தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள மதுக்கூரில் நகர தலைவர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தலைமையிலும்,சகோதரர்கள் அப்துல் ரஹ்மான்,அப்துல் வாஹீது,அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சகோதரர் ஹாஜிசேக் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். 




காவல் நிலையம்

மதுக்கூர் காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு மனோகரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.



இதுபோல மதுக்கூரில் உள்ள அரசு அலுவலகங்கள்,அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


Tuesday, August 13, 2013

புதுமனை புகுவிழா

மதுக்கூர் இராமம்பாள்புரம் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது அவர்களின் புதியவீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று  13/08/2013 செவ்வாய் இரவு சிறப்பு பயான்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.புதிய வீடு குடிபுகும் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது  மற்றும் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Sunday, July 28, 2013

மதுக்கூரில் ஸ்டேட் பாங்க் SBI

மதுக்கூர் மாநகரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்று இதுவரை இந்தியன் வங்கி மட்டுமே செயல்பட்டுவந்தது.மதுக்கூர் வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதை உணர்ந்த தனியார் வங்கிகள் தங்களின் கிளைகளை போட்டிப்போட்டு மதுக்கூரில் திறக்கின்றார்கள்,மேலும் விசாலமான இடத்திற்க்கு இடமாற்றங்களும் செய்கின்றார்கள்.இந்நிலையில் மதுக்கூருக்கு அரசுடமையாக்கப்பட்ட மேலும் ஒரு வங்கி வேண்டும் என பலரும் பல வகைகளில் முயற்சி மேற்கொண்டார்கள்.குறிப்பாக மதுக்கூர் .காம் வாசகர்கள் சார்பாகவும் அதன் நிறுவனரான சகோதரர் எம்.முகம்மது இஷாக் அவர்களும் அவரின் பங்குக்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

அனைவரின் முயற்சிகளின் அடிப்படையில் பாரத் ஸ்டேட் பாங்கு தனது கிளையினை மதுக்கூர் மெயின்ரோட்டில் அறிவழகன் மருத்துவமனை எதிரில் நாளை29/07/2013 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு அதன் பொதுமேலாளர் திருச்சிராப்பள்ளி  திரு அருண் அகர்வால் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.



Thursday, July 25, 2013

மதுக்கூரில் இஃப்தார்

மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் முதல் மஸ்ஜித் அல் ஹராப் அல் நயீமி வரை உள்ள ஆறு பள்ளிவாசல்களில்  (மஸ்ஜித் அல் ஹராப்  நீங்கலாக)  ஐந்து பள்ளிவாசலில் இஃப்தார் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.நாம் சென்ற வருடம் குறிப்பிட்டதை போன்று ஆரம்ப காலத்தில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜாப்னமஸ் நண்பர்கள் குழுவினை சார்ந்த சகோதரர்கள் இஃப்தார் பணியினை ஒழுங்குபடுத்தினர்கள்.அதன் பின்னர் அத்தகும்மாஸ் குருப்ஸ் மேலப்பள்ளியிலும்,MCA குருப்ஸ் மஸ்ஜித் நூரிலும் இஃப்தார் பணிகளை தொய்வின்றி நன்மையினை எதிர்பார்த்து சிறப்பாக செய்கின்றார்கள்.இப்போது மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசலில் சில இளைஞர்களும்,மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் குவாலிட்டி குருப்ஸ் மற்றும் இளைஞர்கள் இணைந்து சிறப்பாக இஃப்தார் பணிகளை செய்து வருகின்றார்கள்.

அனைத்து பள்ளிவாசல்களிலும் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றது.மஸ்ஜித் தக்வா பள்ளியில் பெரும்பாலும் இஃப்தாருக்கு உணவும் அளிக்கப்படுவதாக தகவல்.மேலும் மேலப்பள்ளிக்கு அதிகம் எதுவும் (சமூசா,வடை,பழவகைகள்) வருவதில்லை என்ற தகவலும் உள்ளது.

எது எப்படியிருந்தாலும் இளைஞர்கள் இஃப்தார் பணிகளில் போட்டி போட்டு சேவை செய்கின்றார்கள்.நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்க்கு எல்லா வகையிலும் உதவி புரிகின்றார்கள்.இவர்களின் சேவையினை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அருள் புரியட்டும்.

குறிப்பு : இஃப்தாருக்கு களைக்கட்டும் கூட்டம் இரவு தொழுகைக்கு இல்லை என்ற ஏக்கமும் உள்ளது.










Wednesday, July 24, 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....                                    

யா அல்லாஹ் !
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்    
உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்...

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர்கொண்டு,முஸ்லிம்களின் உரிமைகளை காக்க பலவிதமான போராட்டங்களின்ல் ஈடுபட்டு வரும் சமுதாய பேரியக்கம் தமுமுக என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சமூக நீதியின் சுடரொளியாம்,சமுதாய கலங்கரை விளக்கமாய் ஒளி வீசும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் - மதுக்கூர் கிளையின் சார்பாக மாநில தலைமையின் சிறப்பான வழிகாட்டலின்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)

எங்களின் சமூக,சமுதாய பணிகள் தொய்வின்றி செயல்பட இப்புனிதமிகு ரமலானில் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுத்து எங்கள் பணிகள் சிறக்க உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் பணிகளில் சில :





  • ஆம்புலன்ஸ் சேவை     








  • சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள்.







  •  வரதட்சனைக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்



  • உயிரினும் மேலான எம்பெருமனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்த எண்ணிய அமெரிக்காவைக்கண்டித்து ஆர்பாட்டம்.








  •     சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை

              மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டம்.

  • முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு போராட்டம்


 


  • பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்






  • மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்







  • மக்கள் நல பணிகளுக்காக அரசை தூண்டும் விதமாக தொடர்ந்து குரல் கொடுத்தல்  .      








  • உலகளவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி




  • திருமணச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு பெறுவதற்கான போராட்டம்.








  • ஊழலுக்கு எதிரான போராட்டம்








  • விவாசாயிகளின் உரிமைப்போராட்டங்களில் பங்கு பெறுதல்.









  • சகோதர இயக்கங்களுடன் இணைந்து போராட்டக்களம்








  • அனைத்து சமுதாய மக்களுக்கும் எந்நேரத்திலும் உதவக்கூடிய இரத்த தானம்.




  • சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  



இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற


வாரீ வழங்கிடுவீர்
வலிமையுடன் செயல்பட...
தமுமுகவின் மக்கள் பணிகள் தொடர்ந்திட.....

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
எம்.எஸ்.எம்.மோட்டார்ஸ் எதிரில்-லக்கி ஹார்டுவேர்ஸ் அருகில்
மெயின்ரோடு
மதுக்கூர் 614903
தஞ்சாவூர் மாவட்டம்.


அமீரக தொடர்புக்கு

A.அஜீம்                               0097155 4465088
E.S.M.முகம்மது பைசல் 0097150 8511842
K.அப்துல் ரெஜாக்          0097155 8137763
M.Y.சேக் ஜலால்             0097150 4202842
A.பஷீர் அகமது (அபுதாபி) 0097150 6950912

வங்கி கணக்கு விபரம் (Lakshmi Vilas Bank)

A.Bousul Rahman & M.Haja Mohideen.
LVB A/C No : 045730 10000 26440
IFSC CODE : LAVB 0000457
Madukkur Branch




   



Saturday, July 20, 2013

மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மதுக்கூரில் செயல்படும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இரண்டும் இணைந்து ஜமாத் பொறுப்பாளர்களை தேர்வு செய்வது என்பது மரபு.இதன்படி புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி முறைப்படி நேற்று மதுக்கூரில் உள்ள இருசங்கங்களில் சார்பாக நோட்டீஸ் வெளியிடப்பட்டு வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டது.



Friday, July 19, 2013

மதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள்.எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வழியில் தொழுகை நடத்தலாம் என தீர்மானித்த மதுக்கூ தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையினர் மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19/07/2013) ஜும்மா தொழுகைக்கு பின்னர் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.முன்னதாக பள்ளியின் இமாம் மெளலவி அன்வாருல் அன்சாரி அவர்கள் மழைத்தொழுகையின் சிறப்புக்களைப்பற்றியும்,பேணுதலைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மழை தொழுகையில் ஜும்மாவிற்க்கு வருகைதந்த அனைவரும் கலந்து கொண்டார்கள்.பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.





நன்றி :mtctonline@gmail.com

Tuesday, July 16, 2013

இப்படியும் ஓர் சேவை...மாஷா அல்லாஹ்.


தஞ்சாவூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக தஞ்சாவூரில் மருத்துவமனைகளில் உள்ள நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு சஹர் உணவு ஏற்பாடுகள் செய்து மருத்துவமனைக்கே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்கின்றார்கள்.இப்பணி ஓர் சிறந்த பணியாகும்.தங்களுக்கு அறிந்த நோன்பாளிகள் தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தங்கி இருந்தால் இச்செய்தியினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.அவர்கள் நோன்பு நோற்க பயன் உள்ளதாக இருக்கும்.

இப்பணி தொய்வின்றி நடைபெற பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு ரூ 6000 வீதம் செலவாகின்றது என்கின்றார்கள் இதன் பொருப்பாளர்கள்.

இச்சேவைக்காக உதவி செய்யவிரும்புவர்கள் தொடர்பு கொள்க :
அப்துல் ஜப்பார் (மாவட்ட தலைவர் தமுமுக ) 944 326 4203
வக்கீல் 904 350 1404
கபார் (மமக பேரூராட்சி கவுன்சிலர் மதுக்கூர்) 986 585 1693

 

Friday, June 21, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

முத்துப்பேட்டை காதர் மைதீன் அவர்களின் மகளும்,மதுக்கூர் இடையகாடு முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,பஷீர் அகமது (அர் ரஹ்மான் கல்விக்குழு உறுப்பினர்) அவர்களின் மாமியாருமான ஹபீபுன்னிஸா அவர்கள் முத்துப்பேட்டையில் இன்று (21/06/2013)வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, June 10, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
                                                                ( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் சூரியத்தோட்டம்,மணியாங்குளம் எதிரில் மர்ஹும் நாராண்டியார் வீட்டுS.முகைதீன் பாவா அவர்களின் மனைவியும்,M.சாகுல்ஹமீது அவர்களின் தாயாருமான பாப்பாத்தி அம்மாள் என்கிற ரபிஹா பீவி அவர்கள் இன்று (10/06/2013) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, May 25, 2013


அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !

எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
    
                                                                      ( அல்குர் ஆன் :89:27-30)



மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு  மர்ஹும் ஹபீப் முகம்மது அவர்களின் மகனும்,உரக்கடை அப்துல் ரொஜக் அவர்களின் மருமகனுமான சேட் என்கின்ற அப்துல்காதர் அவர்கள் இன்று 25/05/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா  செய்வோம்.

Wednesday, May 15, 2013

திருமண வாழ்த்து

மணமகன்


R.இம்ரான் 


(த/பெ S.ரகுமத்துல்லா)

மணமகள்

S.முகைதீன் பீவி

(த/பெ A. சதக்கத்துல்லா)

மணநாள்

ரஜப் மாதம் பிறை 5 (16.05.2013) வியாழக்கிழமை
மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஐமஅ பைனகுமா ஃபீஹைர்

Saturday, May 11, 2013

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் மா.செ.உதுமான்ஷா ராவுத்தர் 

அவர்களின் மகன் மா.செ.ஹலீல் ரஹ்மான் அவர்கள் இன்று 12/05/2013 

வஃபாத்தாகிவிட்டர்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மதுக்கூரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

மதுக்கூரில் பரபரப்பு

பாரதீய ஜனதா கட்சியின் கண்டனப்பொதுக்கூட்டம் (மத்திய அரசை கண்டித்து) இன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெறுகின்றது.இப்பொதுக்கூட்டத்தின் காரணமாக முக்கூட்டுச்சாலைவழியாக பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் காலை முதலே ஒருவழிப்பாதைவழியாக திருப்பிவிடப்பட்டது.மதுக்கூரில் அரசியல்,சமுதாய அமைப்புகள் பொதுகூட்டங்கள் நடத்தினால் பேரூந்து நிலையத்தில் தான் நடைபெறுவது வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக இப்பொதுக்கூட்டத்திற்கு முக்கூட்டுச்சாலையில் (பட்டுக்கோட்டை ரோட்டில்) இடம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த மதுக்கூர் நகர தமுமுகவினர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாரை தொடர்பு கொண்டு வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களுக்கு மிகவும் இடையூறான பகுதியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்த போது.இனிமேல் பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை.வரும் காலங்களில் முக்கூட்டுச்சாலையில் மட்டுமே பொதுகூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்ற மழுப்பல் பதில் ஒன்றை அளித்தார்.

இப்பொதுக்கூட்டத்தில் BJP மாநில தலைவர் பொன்.இராதகிருஷ்ணன் பேசுகின்றார்.இன்று மதுக்கூரில் உள்ள தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுவதல் கூடுதல் பதற்றம் நிகழ்கின்றது.இதன்காரணமாக மதுக்கூரில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்க்கு குவிக்கப்படுவது போன்று போலீஸார் மதுக்கூரில் குவிக்கப்பட்டுள்ளார்கள். மெயின்ரோடு,சூரியத்தோட்டம் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.ஒருவிதமான பதற்றம் மதுக்கூரில் நிலவி வருகின்றது.

Thursday, May 2, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக கடந்த 27/04/2013 அன்று உலகளாவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியும் மற்று மாலை 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 11:00 மணியளவில் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்கள்.தொடர்ந்து பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள்.குறிப்பாக பெண்கள் தங்களின் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக பார்க்க வந்தார்கள்.புகைப்பட கண்காட்சியினை பார்த்து அழுத வண்ணம் சென்றார்கள்.முஸ்லிம் அல்லாத சகோதர,சகோதரிகளும் பெருமளவு புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்தனர்.


புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டவர்களில் ஒருசிலரின் கருத்துக்கள்:


  • பிரார்த்தனை மட்டும் தான் அல்லாஹ் மாற்றம் கொடுப்பான்.விழிப்புணர்வு கண்காட்சி பல் இடங்களில் தொடர்ந்து நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.(கே.என்.எம்)




  • இதை பார்த்து எனது நரம்புகள் துடிக்கின்றது .(அகமது கபீர்.)



  • இந்த கண்காட்சியினை பார்த்து வார்த்தைகள் வரவில்லை.மனிதாபிமானம் இல்லா உலகம்.(வி.சுமதி)



  • கேவலம் மனிதர்களிடையே ஜாதி,மதம் வேறுபாடின்றி வாழவேண்டும்.மனிதர்களாக பிறந்த நாம் இந்த பூமியை கடந்த செல்வது ஒருமுறை மட்டுமே.இந்த நிலையில் ஜாதி மதம் தேவையில்லை விஞ்ஞான உலகில் ஒரு உயிரில் இருந்து வந்த தான் மனித இனம் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.எனவே அனைவரும் சொந்தகளாக வாழ வேண்டும்.(T.இரவிச்சந்திரன்.விக்ரமம்)



  • இனிமேலும் ஏதேனும் நடக்காமல் அல்லாஹ்தான் உதவி செய்யவேண்டும்.நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்யவேண்டும்.அல்லாஹ் இதே போல் தண்டனையை அவர்களுக்கும் கூடிய விரைவில் கொடுப்பான்.நிச்சயம் கொடுக்க வேண்டும்.(திருமதி .சர்புதீன்)



  • சுப்ஹானல்லாஹ்.முஸ்லிம் இனப்படுகொலைகளை பார்க்கும் போது என் கண்ணில் இரத்தம் வந்துவிட்டது.முஸ்லிம்களுக்கு எதிரான அட்டுழியங்கள் எந்த நாட்டில் நடந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேந்து அழிக்குமாறு ஏக இறைவனிடம் துஆ செயதவளாக ஆமீன்.(திருமதி பகத்)

  • அல்ஹம்துலில்லாஹ்..மதுக்கூர் மக்களுக்கு இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக நடக்கும் இந்த அளவு கொடுமைகளை மிகவும் துணிவுடன் வெளிகொண்டு இருப்பது மனதுக்கு ஒரு புதிய நம்பிக்கையினை ஏற்படுத்திஉள்ளது.உங்களின் பணிசிறக்க வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன். (எஸ்.ஜெ.சாகுல்)

  • இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சியின் மூலம் மனிதசமூகத்திற்க்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மறைக்கப்பட்ட உண்மைகளை தமுமுக மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்து நீதிகேட்டுள்ளது.எங்கு மனிதகுலத்திற்கு தீங்கு நடந்தாலும் தன் குரலால் நீதி கேட்டது அதன் தனிதன்மையை பறைசாற்றியுள்ளது.எல்ல புகழும் இறைவனுக்கு (தாஜுதீன்)

  • இஸ்லாத்தின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது.மதுக்கூரில் பல மக்கள் பார்க்காத அரிய புகைப்படங்கள் அமைந்து இருந்தன.அல்ஹம்துலில்லாஹ். (என்.சேக்)



இதுபோன்று பலதரப்பட்ட மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செயதார்கள்.















சமுதாய விழிப்புணர்வு புகைப்படங்கள்













மாலை நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சகோதரர் முகம்மது ராசிக் அவர்களின் இறைவசனத்துடன் இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் அப்துல் ஜபார் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.


சகோதரர் மதுக்கூர் ஃபவாஸ்கான் அவர்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினர்.மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.நிறைவாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது அவர்கள் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவேலைகளை தோலுரித்துகாட்டினர்.

இறுதியாக இலியாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.












கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...