இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, July 2, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்
முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி
பிறை 03 (02/07/2014) கேள்விகள்
1.அல்லாஹ் தனது அருள்மறை திருக்குரானில் நோன்பு யாரின் மீது எல்லாம் கடமை என கூறுகின்றான்.என்ற அத்தியாயம் மற்றும் வசனத்தின் எண்ணை குறிப்பிடவும்.
2.அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது வயதில் நபித்துவம் கிடைத்தது.
3.இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு ரமலான் எத்தனையாவது மாதம் ?
நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் நெ.ப.அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,மர்ஹும் தா.செ.அ.முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,TSAM அப்துல் காதர்,TSAM அப்துல் வாஹீது,TSAM ஜாகீர் உசேன் ஆகியோரின் தாயாரும்,TAKAமுகைதீன் மரைக்காயர் அவர்களின் மாமியாருமான சுபைதா பீவி அவர்கள் இன்று 03/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Tuesday, July 1, 2014

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்
முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP) மதுக்கூர் நகர கிளையின் சார்பாக இமெயில்,முகநூல் வாசகர்கள் கலந்துகொள்ளும் ரமலான் பரிசுப்போட்டி.தினமும் அல் குர் ஆன் மற்றும் எம்பெருமனார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்து (ஹதீஸ்) 3 கேள்விகள் கேட்கப்படும்.
சரியான விடை எழுதும் மதுக்கூர் வாசகர் ஒருவருக்கு அவர் வீடு தேடி பரிசு பொருள் வழங்கப்படும்.
நிபந்தனை

1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.

3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.

4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)

5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை(IPP)
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.

Friday, June 27, 2014

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவரும்,சிறந்த சேவகருமான சகோதரர் பெளசூல் ரஹ்மான் அவர்களின் அன்பு சகோதரர்களின் புதுமனை புகு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.

பெரியவர் அபுபைதா அவர்கள் குடும்பத்தினருக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

Thursday, June 26, 2014

அன்பான சகோதரர்களே ! நம் அனைவரின் மீது ஏக நாயன் அல்லாஹ்வின் அன்பும்,கருணையும் என்றும் நிலைத்து நிலவட்டுமா !

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்".

நம்மை நோக்கி சங்கைமிகு ரமலான் வந்து இதோ வந்துவிட்டது.சென்ற ரமலானில் நம்முடன் இருந்த நமது அன்புக்குரியவர்கள் இடம் மாறி சென்று இருக்கின்றார்கள்.இறந்தும் இருக்கின்றார்கள்.ஆனால் நமது செயல்பாட்டில் மாற்றமில்லை.காரணம் நாம் நமது மார்க்கத்தை முழுமையாக இன்னும் கடைபிடிக்கவில்லை...இன்னும் எத்தனை ஆண்டுகள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகின்றோம்.ஓர் நாள் கடுமையான வேதனைகள் நிறைந்த கப்ருவை காண இருக்கின்றோம்...நிரந்தரமானவாழ்க்கையினை உடைய மறுமையை நேசிக்க இருக்கின்றோம்.அர்ஷில் அல்லாஹ்வை காண இருக்கின்றோம் (இன்ஷா அல்லாஹ்) இவை எல்லாம் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நாம் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காட்டிதந்த போதனைகளை பின்பற்ற மறந்துவிட்டோம்.

இந்த தவறு இந்த ஷாபானுடன் போகட்டும்.வருகின்ற ரமலான் நம்மை உண்மையான முஸ்லிமாக பக்குவப்படுத்த வேண்டும் இதற்காக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.நிச்சயமாக நமது நல்ல முயற்சி ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நம்முடன் துணைநிற்பான்.புறம் பேசுவதை புறந்தள்ளிவிடுவோம்.அவதூறுகளை அறவே இல்லாமல் ஆக்குவோம்.வீண் பேச்சுக்களை தவீர்ப்போம்.வம்பு சண்டைகளை விரட்டுவோம்.பொய் பேசுவதை முற்றிலுமாக ஒழிப்போம்.இறையச்சம் உடைய இறை விசுவாசியாக மாறுவோம்..இறையச்சமுடைய நல்ல அடியானாக மரணிப்போம்.இன்ஷா அல்லாஹ்..

(இதுநாள் வரை எங்களின் பதிவுகளில் யாரையும் மனம் வேதனையடையும்படி பேசியதாக,எழுதியதாக கருதி இருந்தால் அன்பு கூர்ந்த சகோதரர்களை மனப்பூர்வமாக எங்களின் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

Monday, June 23, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் H.R.ஹலீல் ரஹ்மான் (HR MAN),மர்ஹும் ஆரிபு (அண்ணா இல்லம்),சாகுல் ஹமீது,அல்லாப்பிச்சை ஆகியோரின் மாமியாரும்,HRHஅப்துல் ஹமீது,HRH அக்பர் அலி ஆகியோரின் பாட்டியாருமான (அம்மா வழி) முகம்மது பாத்திமா அவர்கள் இன்று 23/06/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Thursday, June 19, 2014

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (கமாலியா தெரு) கடந்த ஞாயிற்றுக்கிழமை 15/06/2014 அன்று எளிமையாக நடைபெற்ற திறப்பு விழாவில்சபுரா அம்மாள் பெண்கள் மதஸரா திறந்து வைப்பட்டது..இம்மதரஸா நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் தனது தாயார் பெயரில் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 18, 2014

மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் மதுக்கூர் நகர தமுமுக சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 18/06/2014 புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஃபவாஸ் அவர்கள் தலைமை ஏற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மாவட்ட துணைச்செயலாளர் E.S.M. ராசிக்,மதுக்கூர் முன்னாள் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் சகோதரர் பழனி M.I.பாரூக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.முடிவில் அமீரக யு.ஏ.இ.தமுமுக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் ராவுத்தர்ஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Saturday, June 14, 2014

 மதுக்கூரில் சபுரா அம்மாள் பெண்கள் தராவீஹ் பள்ளி & மதரஸா

மதுக்கூர் சூரியத்தோட்டம் (லக்கி ஹார்டுவேர்ஸ் பின்புறம்) நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் (மலேசியா) அவர்கள் தனது தாயார் சபுரா அம்மாள் அவர்களின் பெயரில் புதிய பெண்கள் தராவீஹ் பள்ளி மற்றும் ஓர் ஆலிமாவை நியமனம் செய்து அல் குர் ஆன் கற்றுக்கொடுக்கும் மதரஸா திறப்பு நிகழ்ச்சி நாளை தினம் நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்..

சகோதரரின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியினை வழங்க துவா செய்கின்றோம்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் முகம்மதியர் தெரு ஜமால் மளிகை மர்ஹும் செய்யது உசேன் அவர்களின் மனைவியும்,மர்ஹும் சதக்கத்துல்லா,ஜமால் மளிகை உரிமையாளர் ஜமால் முகம்மது ஆகியோரின் தாயாருமான் பாத்திமா பீவி அவர்கள் இன்று 14/06/2014 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Wednesday, May 28, 2014

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

மரியாதைக்குரிய சகோதர,சகோதரிகளே தங்களின் மீது அல்லாஹ்வின் அன்பும்,அருளும் நிலவட்டுமாக !

கடந்த மே 25 அன்று மதுக்கூர் மாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவைச்சார்பாக நடத்தப்பட்ட ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் வெற்றி பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மாநாட்டில் நாம் எதிர்பார்த்த அளவு ஆண்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும்,நாம் எதிர்பார்க்காத அளவு தாய்மார்கள் கலந்து கொண்டது.அதுவும் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை ஒரு நாள் முழுவதுமாக மாநாட்டு நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தது மாநாட்டிற்கு அல்லாஹ் தந்த ஓர் அருட்கொடை என வர்ணித்தால் அது மிகையன்று.
மார்க்கத்தின் பால் தங்களுக்கு இருந்த ஈடுபட்டை நமதூர் தாய்மார்கள் மாநாட்டின் இறுதி வரை கலந்து கொண்டு சிறப்பித்ததில் நிருபணம் செய்துள்ளார்கள்.தாய்மார்களுக்கும் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள துண்டு கோலாக இருந்த அத்தனை நபர்களுக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் கீழ் அனைவரும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.குறிப்பாக இலங்கை மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் உரை எதார்த்தமாகவும் ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சியாகவும் அமைத்தது அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது.சகோதரர் கோவை ஜாகீர் அவர்களின் உரையில் அதிகமான சகோதரிகள் கண்கலங்கியதை நம்மால் உணர முடிந்தது.
இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்த எங்கள் இளம் தோழர்களின் பணி மகத்தானது.அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்.

இம்மாநாட்டிற்காக பொருளாதார உதவிகள் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.விளம்பர உதவிகள் புரிந்த வியாபார சொந்தங்களுக்கும்,நாம் வீடு தேடி செல்லும்போதெல்லாம் இல்லை என சொல்லாமல் அள்ளிக்கொடுக்கும் அன்பான தாய்மார்களுக்கும்,கடைகளில் போய் கையோந்து சமயம் எல்லாம் கைநிறைய அள்ளிக்கொடுக்கும் வணிக பெருமக்களுக்கும்,பல வகைகளில் ஒத்துழைப்பு நல்கிய அன்பு சகோதர,சகோதரிகளுக்கும்,மாநாடுக்கு இடம் கொடுத்து உதவிய ஈகை குணம் கொண்ட சகோதரர்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை நெஞ்சம் நிறைவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல தாய்மார்களின்  அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமதூரில் நடத்தப்படவேண்டும் என்ற தங்களின் கருத்தை ஆணித்தரமாக நமக்கு பதிவு செய்து இருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

நடைபெற்ற மாநாடு என்பது இது வரை மதுக்கூரில் வரலாற்றில் இதுபோன்ற ஓர் நிகழ்ச்சி நடந்ததில்லை இது போன்று உள்ளூர் பெண்களும் சற்றும் கலையாமல் காலை முதல் இரவு வரை கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.நாம் மிகைப்படுத்தி எழதவில்லை கலந்து கொண்ட தங்கள் குடும்பத்தின் சகோதரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.அத்தனை நிகழ்ச்சிகளையும் அல்லாஹ் அருமையாக்கி வைத்தான்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்

Monday, May 26, 2014

வாருங்கள் நன்மையை நாடி...

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக மே 25 ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
முதல் அமர்வு
மெளலவி அய்யுபுல் அன்சாரி சிராஜி அவர்களின் இறைவசனத்தோடு மாநாடு துவங்கியது.மெளலவி அன்சார் ஃஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை வெற்றிக்கு வழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மதரஸா மாணவர்களின் அல் புரூஜ் நாடகம் நடைபெற்றது

இரண்டாவது அமர்வு
மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்கு பின்னர் 2:30 மணிக்கு தென்காசி சகோதரர் ஃபஸ்லுதீன் அவர்கள் நிகழ்த்திய மந்திரமா ? தந்திரமா ? நிகழ்ச்சி நடைபெற்றது

தொடர்ந்து ரமலானே வருக என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ஷல் ஷபில் உரைநிகழ்த்தினர்.

முன்றாவது அமர்வு
அஸர் தொழுகைக்கு பின்னர் சரியாக 4:15 மணிக்கு தொடங்கியது மெளலவி முகம்மது ரபீக் ஃபிர்தவ்ஸி அவர்கள் குர் ஆன் கூறும் குடும்ப வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள்.அவரை தொடர்ந்து சகோதரர் கோவை ஜாகீர் உசேன் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் மரண பயத்தை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக உரைநிகழ்த்தினர்.
இலங்கையை சார்ந்த மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் தாய்மார்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பான " பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் இலங்கைத்தமிழில் மிகவும் சிறப்பான உரையினை நிகழ்த்தினர். இறுதியாக மெளலவி ஜெ.எஸ்.ரிஃபாய் அவர்கள் மாநாட்டின் தலைப்பான வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி,இரத்த தானம் முகாம்,இரத்தம் கண்டறியும் முகாம்,மாற்று மத சகோதரர்களுக்கான தாவா முகாம் நடைபெற்றது.இம்மாநாட்டில் 13 யூனிட் இரத்த தானம் பெறப்பட்டது.
உள்ளூர் தாய்மார்கள் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு அதிகனோர் கலந்துகொண்டார்கள்.காலை முதல் மாலை வரை கலைந்து செல்லாமல் மாநாட்டின் நிகழ்ந்தப்பட்ட உரைகள கவனமுடன் கேட்டார்கள்.இம்மாநாட்டை அல்லாஹ் வெற்றி மாநாடாக மாற்றி வைத்தான் என்றால் அது மிகையல்ல: கோடை காலம் என்பதால் மாநாட்டு பந்தல் முழுவதும் சுமார் 50 மின்விசிறிகள் பொருந்தப்பட்டு இருந்தது.

எல்லா புகழும் அல்லாஹ்கே

Saturday, May 24, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பட்டாணியர் தெரு மர்ஹும் M.A.அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மைதீன் பிச்சை,செல்லப்பா என்கின்ற ஜாகீர் உசேன்,ஜெகபர் சாதிக்,சேத்தப்பா என்கின்ற தஜ்மல் உசேன்,அப்துல் ரஹீம் ஆகியோரின் தாயாருமான நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் இன்று 24/05/2014 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
.

Monday, May 19, 2014

மரியாதைக்குரிய ஜமாத் பெருமக்களே
சமுதாயத்தின் மானம் காக்கும் தாய்மார்களே
வீரத்தின் விளைநிலங்களான இளைஞர் நண்பர்களே
புரட்சிமிகுந்த மாணவ தோழர்களே

வாருங்கள் நன்மையை நாடி....

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்

இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP) சார்பாக மே 25 ஆம் தேதி (வருகின்ற ஞாயிற்றுக்கிழமை)

ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

அழைக்கின்றது
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP)
மதுக்கூர்

Sunday, May 4, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் முகம்மதியர் தெரு A.M.பாரூக் அவர்களின் தம்பி பாய்கடை மற்றும் சுமங்கலி கவரிங் உரிமையாளர் A.M.சதக்கத்துல்லா அவர்கள் இன்று 04/05/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
.

Friday, May 2, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பள்ளிவாசல் தெரு தங்கத்தாய் காலணி மர்ஹும் அப்துல் ரகீம் அவர்களின் மனைவியும்,சேக்பரீது அவர்களின் தாயாருமான அஜீஸ் அம்மாள் அவர்கள் இன்று 02/05/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

(அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.)

Sunday, April 27, 2014

நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

A.இப்ராம்ஷா (த/பெ S.அப்துல் ரசாது)
P.தியானா நஸ்ரின் (A.பீர் முகம்மது)

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர்  மாதம் பிறை 26 (27/04/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

Wednesday, April 16, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு "சாந்தி மெடிக்கல்ஸ்" உரிமையாளர் அஷ்ரப் அலி அவர்கள் இன்று 16/04/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Monday, April 14, 2014

மரண அறிவிப்பு

மதுக்கூர் நகரில் பல ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் வாஞ்சிலிங்கம் அவர்கள் இன்று (14/01/2014) அதிகாலை மரணமடைந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday, April 5, 2014

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்
 சகோதரர் A.  ஜிபிரில் இல்லத்திருமணம்.

நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

A.காதர் முகைதீன் (த/பெ மர்ஹும் M.அஜீஸ் ரஹ்மான்)
S.ஜொஹரான் பீவி (த/பெ  H.செய்கு நசுருதீன் )

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர்  மாதம் பிறை 05 (06/04/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்
     சகோதரர் A.சாதிக் அகமது, கஃல்ப் டிராவல்ஸ் K.S.N.A.சாகுல்ஹமீதுஇல்லத்திருமணம்.

மணமக்கள்

A.அனீஸ் அகமது (த/பெ K.S.M.அப்துல் ஜப்பார்)
N.லெமியா பேகம் (த/பெ K.S.N.A.நத்தர்ஷா )

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர்  மாதம் பிறை 05 (06/04/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...