இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, September 11, 2013

விருந்தழைப்பு

கடந்த ரமலானுக்கு பின்னர் நமதூரில் (மதுக்கூரில்) வீடு குடிபுகும் நிகழ்ச்சிகள்,திருமணங்கள் என ஏராளமான விருந்தழைப்புகள் நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.விருந்தழைப்புகளை ஏற்றுக்கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகின்றார்கள்.

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள்.
1.ஜனாஸாவை பின் தொடரும் படியும்,
2.நோயாளியை நலம் விசாரிக்கும் படியும்,
3.விருந்து
க்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும்.
4.அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
5.செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும்.
6.ஸலாமுக்கு பதில் கூறும்படியும்.
7.தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

மேலும் சில விருந்தழைப்புகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
" செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து மிகவும் கெட்ட விருந்தாகும்". என நபிகள் பெருமகனார் நவின்றுள்ளார்கள்.இன்றைக்கு ஏழைகள் வீடு தேடிபோய் அழைக்கப்ப்டுவது இல்லை.ஏழைகள் விருந்து நடைபெறும் இடத்திற்கு வருகின்றார்கள் உணவு உண்ணுகின்றார்கள்.(சில இடங்களில் ஏழைகள் உணவு உண்ண அனுமதிக்கப்படுவது இல்லை) இதற்கு காரணமும் சொல்லப்படுகின்றது நாங்கள் அழைத்தவர்களுக்கு உணவு இல்லாமல் போய்விடும் என்ற ரெடிமேடு பதில் சொல்லப்படுகின்றது.

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் அழைக்கப்படும் விருந்துக்களில் அதிகம் விரயம் செய்யப்படுவதை உணர முடிகின்றது.
" உண்ணுங்கள் : பருகுங்கள்: ஆனால் விரயம் செய்யாதீர்கள்.திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (திருக்குரான் 7:31)

அதுமட்டுமில்லாது சில இடங்களில் திருமண அழைப்பு கொடுக்க (கூப்பட்டிற்கு) குழுக்களாக செல்வார்கள்.ஆனால் அழைப்பை ஏற்று விருந்து நடைபெறும் இடங்களுக்கு சென்றால் வாசலில் வரவேற்பாளர்கள் இருக்கமாட்டார்கள்.தேவைக்காரர் கொல்லைப்புறத்தில் போய் இருப்பார்.அல்லது மற்றபணிகளை மேற்கொண்டிருப்பார் விருந்தழைப்பை ஏற்று வந்தவரை வாங்க..என்று இன்முகத்துடன் அழைக்க ஆளில்லா அவலநிலைகளும் ஏற்படுகின்றது.

விருந்தினர்களை உபசரிங்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்.உபசரீப்பு என்றால் வெறும் விருந்து மட்டுமல்ல வருபவர்களை இன்முகத்துடன் அழைப்பதும்  என்பதை உணர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரியட்டுமாக !

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...