இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, December 5, 2014

மதுக்கூரில் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே !
டிசம்பர் 6,2014 பாபர் மஸ்ஜித் இடித்து 22 வருடங்களை நினைவுபடுத்துகிறது.இந்த தருணத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகின்றேன்.அப்பொழுது தான் நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.மேலும் அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் இந்த தேசத்திற்கு உறுதி அளித்தபடி மசூதி இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கின்றேன்.














என்ற வாசகம் கொண்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியினை கடந்த 01/1/2014 தமிழகம் முழுவதும் சமுதாய போராளிகளை கொண்ட தமுமுக மிகவும் துரிதமாக நடத்தியது.அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தின் கடைசி நாளான இன்று தமிழகம் முழுதுவம் தமுமுக செயல்வீரர்கள்  உள்ளூர் இஸ்லாமிய சேவை இயக்கங்களின் உறுதுணையுடன் சிறப்பாக களப்பணியாற்றினார்கள்.

மதுக்கூரில் உள்ள அஞ்சலத்தில் இன்று 05/12/2014 வெள்ளிக்கிழமைஜும் ஆ தொழுகைக்கு பின்னர் தமுமுகவின் அனைத்து நிர்வாகிகளும் ஜமாத்தார்கள்,பொதுமக்கள்,மாணவர்கள்,தாய்மார்கள்,இளைஞர்கள்,தொப்புள் கொடி உறவுகள்,வர்த்தகர்களிடமிருந்து பெற்ற சுமார் 1000 மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை அஞ்சல் செய்தார்கள்.

எல்லா புகழும்  அல்லாஹ் ஒருவனுக்கே !

ஆதரவு அளித்த அன்பு உள்ளங்களுக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.


சாமானியர்களும்..ஜமாத்தார்களும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைமையின் வழிகாட்டலின்படி பாபரி மஸ்ஜித்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவேண்டும்,அதே இடத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என  வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டைகளை இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி அவர்களுக்கு தமிழகமுழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றது.

மதுக்கூரில் இன்று ஜும் ஆ தொழுகைக்கு பின்னர் பெரியப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் இஃக்லாஸ் ஆகிய இரு பள்ளிவாசல்களிலும் அஞ்சல் அட்டை அனுப்பும் பணிகளில் தங்களை இணைத்துக்கொள்ளும் மதுக்கூர் ஜமாத் நிர்வாகிகள்,மற்றும் பள்ளி மாணவர்கள்,சமுதாய சொந்தங்கள்,தொப்புள் கொடி உறவுகள்.
மேலும் ஜனாதிபதி அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியில் விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் சகோதரர் இளந்தென்றல் மற்றும் மதுக்கூர் வர்த்தகர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள்.














Thursday, December 4, 2014

மதுக்கூரில் அஞ்சல் அட்டை அனுப்பும் பணிகள் தீவிரம்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே !
டிசம்பர் 6,2014 பாபர் மஸ்ஜித் இடித்து 22 வருடங்களை நினைவுபடுத்துகிறது.இந்த தருணத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகின்றேன்.அப்பொழுது தான் நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.மேலும் அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் இந்த தேசத்திற்கு உறுதி அளித்தபடி மசூதி இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கின்றேன்.
என்ற வாசகம் கொண்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியில் தங்களையும் இணைத்து கொண்ட நமது தொப்புள் கொடி உறவுகள்.

Add caption

டிசம்பர் 6 போராட்டக்களங்களில் மதுக்கூர் தமுமுக
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விட்டு சங்பரிவார் கும்பல் கி.பி.1528 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித்தை இடித்தார்கள்.இந்தியாவில் ஒற்றுமையை குலைத்தார்கள்.மதசார்பின்மை பேசிய நமக்கு வரலாற்றில் கருப்பு தினமாக டிசம்பர் 6 பொறிக்கப்பட்டது.
தமுமுக தொடங்கப்பட்ட வருடமான 1995 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.மதுக்கூரிலும் அதற்கான போஸ்டர் ஒட்டினோம்.ஆனால் யாரும் கடையடைப்பு செய்யவில்லை என்பது வருத்தமான தருணம். காலம் சென்ற நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் ஜலீல் மரைக்காயர் அவர்கள்.தம்பி எது எல்லாம் மதுக்கூருக்கு வேண்டாம் என கூறி பள்ளிவாசலில் தயவு செய்து இது குறித்து நோட்டிஸ் வினியோகம் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அதன்படி நடந்து கொண்டோம்.
1996 கவர்னர் மாளிகை முற்றுகை என தலைமை அறிவிப்பு செய்தது.இன்று போல் அன்று சென்னை செல்வதற்கு சொகுசு பஸ்கள் குறைவு எனவே அரசு போக்குவரத்து கழக பேருந்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து இருந்தோம்.காவல்துறையினர் மன்னார்குடியில் எங்களை தடுத்து நிறுத்தி மதுக்கூருக்கு திருப்பி அனுப்பினார்கள்
இப்படியாக 1997,1998 தடையை மீறிய பேரணி,முற்றுமை போராட்டங்கள்.முதன் முறையாக 1999 அனுமதியுடன் ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நமது டெல்டா மாவட்டம் சார்பாக மயிலாடுதுறையில் தலைமை தகவல் தொடர்பு அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் ரிபாய்,பேராசிரியர் ஹாஜா கனி,அன்றைய பொருளாளர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுக்கூரிலிருந்து சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் இரண்டு வேன்களில் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டோம்.
2000 ஆம் வருடம் தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டதில் மதுக்கூரிலிருந்து பெரும்திரளாக பங்குகொண்டோம்.அண்ணன் மறைந்த தமுமுக போராளி ஜமால் முகம்மது அவர்கள் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் வைத்து நல்லபல அறிவுரைகளை வழங்கி எங்களை போராட்ட களத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
1999முதல் இன்று வரை தமுமுக சார்பாக அறிவிக்கப்படும் டிசம்பர் 6 போராட்டங்களங்களில் மதுக்கூர் தமுமுக ஏற்பாட்டின் படி குறைந்தபட்சம் இரண்டு வேன்களில் மக்களை திரட்டி போராட்டங்களங்களில் பங்கொடுத்து வருகின்றோம்.
டிசம்பர் 6 தமுமுக அறிவிக்கும் வீரியமிக்க போராட்ட களங்களுக்கு மதுக்கூரிலிருந்து மக்களை திரட்டி அழைத்து செல்வதில் 2001 ஆண்டு முதல் தமுமுக நகர தலைவராக சிறப்பாக செயலாற்றிய அண்ணன் நாராண்டி ஜெகபர் அலி அவர்கள் இந்த நேரத்தில் நினைக்க தக்கவர்.
ஜனநாயக வழியில் இந்த சமுதாயம் எப்படி போராடவேண்டும் என கற்று கொடுத்த சமுதாய பேரியக்கம் தமுமுக வின் போராட்டங்களை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அதே ஜனநாயக வழி போராட்டங்களை கையில் எடுத்து இருப்பது காலத்தின் கட்டாயம்.அல்ஹம்துலில்லாஹ்.
தாய்கழகம் உங்களை அன்போடு அழைக்கின்றது.டிசம்பர் 6 போராட்டக்களத்திற்கு.கருஞ்சட்டை அணிந்து கம்பீரமாக அனைவரையும் அழைக்கின்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
மதுக்கூர் நகரம்







மதுக்கூரில் சாலை மறியல்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 4 புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது.மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.இளங்கோ அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டத்தால் மதுக்கூரில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சாலை மறியல் போராட்டத்தில் பேரூராட்சி தலைவர் NSM பசீர் அகமது,மாவட்ட திமுக பிரதிநிதி SNS ஹாஜா முகைதீன்,மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான்,கவுன்சிலர்கள் M.கபார் (மமக),மணிவேல்(திமுக)NPM ரியாஸ் அகமது (திமுக) மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டார்கள்.பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.





Wednesday, December 3, 2014

மதுக்கூரில் தெருமுனைப்பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற விளக்க தெருமுனைக்கூட்டம் இன்று 03/12/2014 புதன் கிழமை மாலை 4:45 மணிக்கு மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நகர தலைவர் சகோதரர் ஜபருல்லா அவர்கள் தலைமையிலும்,சகோதரர் பவாஸ்கான்,கவுன்சிலர் கபார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் பாபரி மஸ்ஜித் வரலாற்றினை எடுத்துரைத்தார்.முக்கூட்டுச்சாலையினை தொடர்ந்து மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மாலை 6:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சார கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.













Tuesday, December 2, 2014

மதுக்கூரில் இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த கபருஸ்தானின் மண்ணின் தன்மை மாறிவிட்டதால் புதிய கபருஸ்தான் அமீரக வாழ் மதுக்கூர் இஸ்லாமிய சகோதரர்களால் மதுக்கூர் வடுககுத்தகை ஏரி அருகாமையில் இடம் வாங்கப்பட்டுள்ளது.இருந்தும் அது இன்னும் செயல்பாட்டிற்கு வராதகாரணத்தினால் பழைய கபருஸ்தான் அருகாமையில் உள்ள (சந்தைப்பேட்டை குப்பைகள் கொட்டும்) இடம் ஜமாத்தார்களால் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் தற்காலிக கபருஸ்தானாக பயன்படுத்தப்பட்டது.




கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...