இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, April 25, 2020


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
*மதுக்கூர் தமுமுக சார்பாக இரண்டாம் ஆண்டில் நோன்பு வைக்கக்கூடிய ஏழைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது*.
(நோன்பு வைக்க இயலாத சகோதர,சகோதரிகள் அதற்கு பகரமாக தந்த பொருளாதார உதவிகளை கொண்டு கீழ்கண்ட பொருள்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உணவு பொருள்களின் மதிப்பு ரூ 3000 /=
*வழங்கப்பட்ட உணவு பொருள்களின் விபரம்* :
அரிசி 25 கிலோ
பூண்டு 250
து.பருப்பு 1 கிலோ
உளுந்து 1 கிலோ
க.பருப்பு 100
ப.பருப்பு 250
சமையல் ஆயில் 2லிட்டர்
சீனி 1 கிலோ
சேமியா 2 பாக்கெட்
டீ தூள் 100
வருகடலை 250
சின்ன பல்லாரி 1 கிலோ
மல்லி 1 கிலோ
மிளகாய் அரை கிலோ
மஞ்சள் 100
கடுகு 100
சோம்பு 200
மிளகு 50
சிரகம் 200
புளி அரை கிலோ
ஜவ்வரசி 250
நெய் 50
டால்டா 200
திரட்சை முந்திரி 20 ரூபாய்
கிராம்பு பட்டை 10 ரூபாய்
பேரிச்சை பழம் அரை கிலோ
கடல்பாசி 2 பாக்கெட்
மைதா 1 கிலோ
பல்லாரி 2 கிலோ
உப்பு 1 பாக்கெட்
அப்பளம்
தேங்காய் 10
மற்றும் நோன்பு அன்று காய்கறிகள் உட்பட்
இவை அனைத்தும் அல்லாஹ்வின் கிருபையாலும் உங்களின் மேலான ஆதரவிலும் நோன்பு வைக்க கூடிய ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது
இப்பணிக்காக உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.அல்லாஹ் அருள்புரிய பிரார்த்திக்கின்றோம்.
இதுவரை 52 பங்குகள் வந்துள்ளது.பயனடைந்தவர்களின் விபரம் இரகசியம் காக்கப்படும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ( தமுமுக)
மதுக்கூர்.






படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

Friday, September 6, 2019

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
இனிதாய் நிறைவேறியது இறைஇல்ல நிகழ்ச்சி.
மதுக்கூரில் 9வது இறை இல்லமான மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நிர்வாகத்தினால் மேல சூரியத்தோட்டம் (அம்மா குளம் மேல்கரை அருகில்) கட்டி முடிக்கப்பட்ட Masjid Hasan Essa Alnuaimi நேற்று 18/08/2019 மகரிப் தொழுகை முதல் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். மகரிப் தொழுகையின் பாங்கினை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் PSKA ஜியாவுதீன் அவர்கள் கூறினார்கள்.பள்ளியினை வக்ப் செய்து சகோதரர் M கபார் அறிவிப்பு செய்தார்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சகோதரர் மு.ரா.அ.ஆஷிக் ரஹ்மான் அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் NMSஅப்துல் காசிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக தலைவர் SM ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.மஸ்ஜித் இஃலாஸ் பள்ளியின் தலைமை இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் துவக்க உரை நிகழ்த்த, புதிய இறை இல்லத்தை வடிவமைப்பு செய்து கட்டி முடித்த பொறியாளர் முகம்மது இலியாஸ் அவர்களை அமீரக சகோதரர்கள் அலிசாபர்,அப்துல் ஜாபர், நத்தர்ஷா,இஸ்லாமுதீன்,சாகுல் ஹமீது ஆகியோர் கெளரவித்தார்கள்.இறுதியாக காயல்பட்டிணம் ஆயிஷா சித்திக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் மெளலவிஅப்துல் மஜீது மஹ்ளரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் சகோதரர் MSM அப்துல்லா அவர்கள் நன்றியுடன் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது.
இறை இல்ல திறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் முகைதீன் மரைக்காயர்,மதுக்கூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள்,அதிமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் துரை.செந்தில்,திமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் ஆர்.இளங்கோ,முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஆனந்தன்,சகோதரர் அருணாகிரி,சகோதரர் ஜேம்ஸ், ஜமாத்தார்கள்,இளைஞர்கள்,மாணவர்கள்,பெரும் திரளாய் தாய்மார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியினை மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் சிராஜ்,ராவுத்தர்ஷா,முனாப்,சேக் ராவுத்தர்,முஜிபுர் ரஹ்மான்,நிசார் அகமது,ஃபவாஸ்,அப்துல் காதர்,பொருளாளர் தாஜுதீன்,அஃலம்,முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது,அக்பர் அலி,சாகுல் ஹமீது,நஜீர் அகமது, மற்றும் நிர்வாக குழு,செயற்குழு,மாணவர் குழு, உறுப்பினர்கள்,ரகீபாக்கள், ஒருங்கினைப்பு செய்தார்.
அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நிறைவேறியது.அல்ஹம்துலில்லாஹ்.

Image may contain: one or more people
Image may contain: one or more people and people standing

Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing
Image may contain: one or more people and people standing

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 7 people, people smiling
Image may contain: one or more people and indoor

Image may contain: 7 people, people smiling, people standing







Image may contain: 6 people, including Sheik Idayadulla, people standingImage may contain: sky, cloud and outdoor

Tuesday, March 6, 2018

மதுக்கூர் பேரூர் கழக தமுமுக புதிய நிர்வாகிகள்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் சமுதாய பணிகளை சிறப்பாக இன்றளவிலும் செய்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.தமுமுக வார்டு கிளை முதல்  அமைப்பு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்கள் அல்லது ஏகமனதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பொறுப்பாளர்களாக பணியாற்றுகின்றார்கள்.அதன் படி இந்த முறை அமைப்பு தேர்தல்  தஞ்சாவூர் (தெ) மாவட்ட தேர்தல்  பொறுப்பாளராக சகோதரர் ஊட்டி அபுதாகீர் அவர்கள் நியமிக்கப்பட்டு தஞ்சாவூர் (தெ) மாவட்டத்தில் பல பகுதிகளில் அமைப்பு தேர்தலை நடத்தி முடிந்துள்ளார்.மாஷா அல்லாஹ்.
மதுக்கூர் அமைப்பு தேர்தல் சகோதரர் தாஜுதீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.நிசார் அகமது அவர்கள் இறைவசனம் ஓத தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் பொறுப்பாளர் சகோதரர் ஊட்டி அபுதாகீர் அவர்கள் இரத்தின சுருக்கமாக விளக்கினார்.மதுக்கூர் கிளை  கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளகப்பட்டது.

முதலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கிழக்கு பகுதி நிர்வாகிகள்

தமுமுக & மமக தலைவர் எஸ்.முஜிபுர் ரஹ்மான்
தமுமுக செயலாளர் : இம்ரான்
மமக செயலாளர் : அப்துல் ரஹ்மான்
பொருளாளர் :ஆட்டோ முகம்மது அன்சாரி

மேற்கு பகுதி நிர்வாகிகள்

தமுமுக & மமக தலைவர் : ஹாஜா மைதீன்
தமுமுக செயலாளர் : அப்துல் மாலிக்
மமக செயலாளர் : முகம்மது தாஹா
பொருளாளர் : அரேபியன் சர்புதீன்


தொடர்ந்து மதுக்கூர் பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தமுமுக & மமக தலைவர் : முகம்மது ராசிக் (பிளாக் & ஒயிட் கேப்ஸ்)
தமுமுக செயலாளர் :அப்பாஸ்
மமக செயலாளர் : தாஜுதீன்
பொருளாளர் : நிசார் 

ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.மதுக்கூர் பேரூர் கழக தேர்தலில் சிறப்பு அமைப்பாளர்களாக மாவட்ட தலைவர் அதிரை அகமது ஹாஜா,மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது புகாரி,மாநில ஊடக பிரிவு செயலாளர் ஃபவாஸ், மாவட்ட செயலாளர் சேக்,ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Image may contain: one or more people, people sitting and indoor

Image may contain: 5 people, including Ooty Abu Thaheer and MP Nazheer Trichy, indoor

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 5 people, including Ooty Abu Thaheer and சாகுல் அத்தா மதுக்கூர், people standing and indoor

Image may contain: 4 people, including Ooty Abu Thaheer and Mujipur Rahman, people standing and indoor
Image may contain: 5 people, including Ooty Abu Thaheer, people standing

Image may contain: 4 people, including Ooty Abu Thaheer, people standing and indoor

Image may contain: 5 people, including Ooty Abu Thaheer, people standing and indoor


Image may contain: 5 people, people standing and indoor

Thursday, December 28, 2017

மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர்.முஸ்லிம்களும்,இந்துக்களும் (செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்களும்) நிறைந்த ஊர்.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் என்ற ஜும்மா பள்ளி ஒன்று உள்ளது.மதுக்கூரின் இரண்டாவது பள்ளி மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்.
இப்பள்ளியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய ஜமாத் தலைவர் முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் மேலவீதி சங்க முக்கிய பொறுப்பாளர் அல்லாப்பிச்சை இருவரும் சிங்கப்பூர் சென்று இப்பள்ளிக்காக பெரும் நிதி திரட்டி வந்தனர்.

20/07/1978 வியாழன் மாலை வெள்ளி இரவு 9:00 மணியளவில் பெண்களுக்கென பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டு மார்க்க அறிஞர்களால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஹிஜிரி 1398 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14  (21/07/1978 வெள்ளி காலை மதுக்கூரின் இரண்டாவது பள்ளிவாசல் மேலப்பள்ளி திறக்கப்பட்டது.இப்பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மதுக்கூரின் அன்றைய ஜமாத் தலைவரும்,பேரூராட்சி தலைவருமானT.A.K. முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களின் சீறிய தலைமையில் நடைபெற்றது.

S.P.N.அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்கள் முன்னிலையிலும்,மேலப்பள்ளி நிர்மாணக்கமிட்டி செயலாளர் M.M.அல்லாப்பிச்சை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும்,நீடுர் அரபிக்கல்லூரி முதல்வருமான M.முகம்மது ரஹ்மத்துல்லா ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் மதுக்கூர் மேலப்பள்ளிவாசலை திறந்து வைத்தார்கள்.

மேலப்பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக

பேராசிரியர் கா.அப்துல் கபூர்
பேராசிரியர் மெளலானா மெளலவி எஸ்.ஆர்.சம்சுல்ஹுதா ஆலிம்
மெளலானா மெளலவி ஓ.எம்.ஜெய்னுதீன் ஆலிம்
மெளலவி அப்துல் லத்தீப் ஆலிம்
மெளலவி கா.மீ.அப்துல் வஹாப் ஆலிம்
மெளலவி இ.சிராஜுதீன் ஆலிம்
மெளலவி எஸ்.முஹம்மது அப்துல் காதர் ஆலிம்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் நத்தர்ஷா அவர்களும்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க செயலாளர் A.N.M.முகம்மது அலி ஜின்னா அவர்களும் நன்றி நவின்றார்கள்.








Saturday, November 25, 2017

மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி (29/11/2017)
மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி பல்வேறு சிறப்புகளை பெற்றது.ஆரம்ப காலத்தில் ஆரம்ப பள்ளிகூடமாக நிகழ்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தப்பட்டு இன்று சிறப்புடன் செயல்படுகின்றது.இப்பள்ளியின் கட்டிடங்கள் பழமையானதால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கிராம கல்விக்குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆட்சியாளர்களை அனுகினார்கள்.இவர்களின் முயற்சியால் நபார்டு வங்கியின் உதவியுடன் சுமார் 2 கோடி 27 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்,இரண்டு தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்இரண்டு பள்ளிக்கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பள்ளிக்கட்டிடங்கள் வருகின்ற 29/11/2017 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைக்கின்றார்கள்.இப்புதிய கட்டிடம் வர காரணமாக இருந்த அனைவருக்கும் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Thursday, November 23, 2017

மதுக்கூர் தமுமுகவினரின் எழுச்சி
டிசம்பர் 6 1992 ஆம் ஆண்டு கயவர்களால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் அயோத்தியில் மீண்டும் கட்டப்படவேண்டும்.இந்தியாவின் மதச்சார்பின்மையை வலுசேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பாக டிசம்பர் 6 அன்று பல வகை போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களும் அறிந்ததே.
தமுமுக தலைமை அறிவிக்கும் அத்தனை டிசம்பர் 6 போராட்டங்களங்களிலும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதுக்கூர் தமுமுக மிக விரியமாக செயல்படுவதும் மக்கள் மத்தியில் டிசம்பர் 6 போராட்ட செய்தியினை கொண்டு போய் சேர்ப்பதிலும் தமுமுகவினருக்கு நிகர் தமுமுக வே என்று சொல்லும் வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றார்கள்.
மதுக்கூர் தமுமுகவினரின் போராட்ட விளம்பர யுக்திகளை பார்த்து மாற்றுமதத்தினரும்,மாற்று கட்சி,அமைப்பு சகோதரர்களும் வியக்கும் வண்ணம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சுவர் விளம்பரம்,ஆட்டோ பிளக்ஸ்,துண்டு பிரசுரம்,பைக் ஸ்டிக்கர்,மின் விளக்கு போஸ்டர்,பிளக்ஸ்,தெருமுனை கூட்டம்,இன்னும் ஏராளம்.அல்ஹம்துலில்லாஹ்.
டிசம்பர் 6 போராட்டங்கள விளம்பரங்களுக்கு மதுக்கூர் தமுமுகவினர் தமிழக அளவில் முன்னோடிகளாக திகழ்கின்றார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்கே !
வீழ்ந்து இருக்கலாம்
பாபரி மஸ்ஜித் அயோத்தியில்
எழுந்து நிற்கின்றது அதே பள்ளிவாசல்
மக்கள்இதயங்களில்....
எங்களின் எழுச்சி தனித்தவன்,தன்னிகரற்றவன் ஏக நாயன் அல்லாஹ்வின் ஆலயம் அயோத்தியில் கட்டி முடிக்கும்வரை ஒயாது.இன்ஷா அல்லாஹ்.
தமுமுக
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சாவூர் மாவட்டம்.




Image may contain: outdoor

Image may contain: outdoor

Friday, September 8, 2017

மத நல்லிணக்கத்தை பேணும் மோகூர்  விநாயகா ஸ்கூல் 


மதுக்கூர் அருகாமையில் மோகூரில் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்கூல் (CBSE)அங்கு படிக்கும் இஸ்லாமிய மாணவர்களை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு தங்களின் பள்ளி வாகனத்தில் அழைத்து வருகின்றார்கள்.அதுவும் இமாம் பிம்பரில் ஏறுவதற்கு முன்பாகவே மாணவர்களை தொழுகைக்கு அழைத்து வந்துவிடுகின்றார்கள்.பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் அல்லது இஸ்லாமியர்கள் பங்குதாரர்களாக உள்ள கல்வி சாலைகளில் இஸ்லாமிய மாணவர்களின் தொழுகைக்கு அனுமதி அளிக்க மறுக்கும் காலத்தில் முழுக்க முழுக்க முஸ்லிம் அல்லாத சகோதரர்களால் நடத்தப்படுக்கின்ற கல்வி நிறுவனத்தில் ஜும் ஆ தொழுகைக்கு அனுமதி அளித்து மாணவர்களை தனது பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மாணவர்களை அழைத்து செல்வது தனி சிறப்பு.விநாயக ஸ்கூல் நடத்தும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்புடன்
தமுமுக & மமக
மதுக்கூர் பேரூர் கழகம்.



Image may contain: outdoor

Image may contain: 11 people, people standing and outdoor


Image may contain: 9 people, people smiling, people standing and outdoor

Image may contain: 1 person, outdoor

மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கூர் தமுமுகவினர் கோரிக்கை மனு
மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளை 06/09/2017 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கு சமைக்கப்படும் உணவையும் ஆய்வு செய்தார்.மதிய உணவும் உட்கொண்டார்.அங்கு சென்ற மதுக்கூர் பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான்,முன்னாள் மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்.இன்னாள் மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ்,மற்றும் ஹாஜா மைதீன்,நிசார் அகமது ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை.
1.மதுக்கூர் பேரூராட்சிக்கு உடனடியாக நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படவேண்டும்.
2.மதுக்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 24 மணி நேரமும்பணியாற்றும் வகையில் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும்.
3.மதுக்கூர் பேரூந்து நிலைய கழிவறை கழிவுகள் அருகில் உள்ள மணியாரங்குளத்தில் கலப்பதால் குளம் மாசு ஏற்படுகின்றது.எனவே உடனடியாக அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...