இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, May 30, 2016

இனிதாய் முடிந்த இஸ்லாமிய இஜ்திமா...
மதுக்கூரில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக கடந்த மூன்று வருடங்களாக மே மாதத்தில் இஸ்லாமிய மாநாடு நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி கூடிய மதுக்கூர் பொதுக்குழு மே 28 ஆம் தேதி இஸ்லாமிய இஜ்திமா வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றி கடந்த ஒரு வார காலமாக கடும் களப்பணிகள் மேற்கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் கடந்த சனிக்கிழமை மே 28 சிறப்புடன் நடந்தேறியது.அல்ஹம்துலில்லாஹ்.
முதல் அமர்வு
**********************
காலை 10:30 மணிக்கு தொடங்கிய மாநாட்டின் முதல் அமர்வு காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகளால் இஸ்லாமிய கண்காட்சி மாலை 5:00 மணிவரை சிறப்புடன் நடைபெற்றது.சுமார் 500 மேற்பட்ட தாய்மார்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர் தங்களின் மார்க்க சம்மந்தமான பல வினாக்களுக்கு விடைகளை பெற்று சென்றனர்.


இரண்டாம் அமர்வு
******************************

இஜ்திமாவின் இரண்டாம் அமர்வு சரியாக 5:30 மணிக்கு சகோதரர் ESMM முகம்மது பைசல் அவர்கள் தலைமையில் தொடங்கியது.சகோதரி பர்வீன் ஆலிமா அவர்கள் இறைவசனம் ஓதினார்.தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை ஹாஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.தொடர்ந்து காயல்பட்டிணம் தாவா செண்டர் மாணவிகளின் "மனம் கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் தாங்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டதின் பின்னனிகளை குறித்து உருக்கமான உரைகள் நிகழ்த்தினார்கள்.மகரிப் தொழுகைக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.


மூன்றாம் அமர்வு
***************************

மாலை 7:00 மணிக்கு தொடங்கியது.முதலில் மெளலவி இக்பால் பிர்தவ்ஸி அவர்கள் " திருக்குர் ஆனின் சமுதாயம் "என்ற தலைப்பில் மிகுந்த எழுச்சியுடன் உரை நிகழ்த்தினர்.மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் "சுய பரிசோதனை"என்ற தலைப்பிலும் மெளலவி அப்துல் மஜீது மஹ்ளரி அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும் கால சூழ்நிலைக்கு ஏற்ப உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்.முடிவில் Er.முகம்மது இலியாஸ் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
"எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே"





(மதுக்கூர் தாய்மார்கள் இயக்க,அமைப்புகள் வேறுபாடுகள் இன்றி இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்றால் மிகுந்த எழுச்சியுடன் கலந்து கொள்கின்றார்கள்.அல்லாஹ் இவர்களின் மார்க்க "இல்ம்" மை அதிகரிக்க துவா செய்கின்றோம்.

உதவிகள் செய்த எங்கள் உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...