இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, September 16, 2015

மதுக்கூர் பேரூர் கழக தமுமுகஅலுவலகம் திறப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழக அலுவலக திறப்பு நிகழ்ச்சி இன்று 16/09/2015 மாலை 5:30 மணியளவில் பேரூர் கழக செயலாளர் சகோதரர் ஃபவாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட(தெற்கு) பொருளாளர் சகோதரர் அதிரை அகமது ஹாஜா அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,கவுன்சிலர் கபார் ஆகியோர் அலுவலக பணிகள் குறித்து உரை நிகழ்த்தினர்கள்.பேரூர் பொருளாளர் சகோதரர் பொறியாளர் இலியாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை பொறுப்பாளர் அதிரை கமாலுதீன்,பேரூர் கழக செயல்வீரர்கள் முஜிபுர் ரஹ்மான்,பெளசூல் ரஹ்மான்,அப்பாஸ்,ஃப்ரோஸ்,மேலும் பேரூர்,வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.











Wednesday, September 9, 2015

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமுமுக & மமக வலியுறுத்தல்



Saturday, August 15, 2015

மதுக்கூரில் தமுமுக முப்பெரும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக  இந்திய சுகந்திர தின நிகழ்ச்சி,தமுமுக விருது 2015,சமூக நல்லிணக்க நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி 14/08/2015 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,தியாகி சசிபெருமாள் அரங்கில் தமுமுக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் இறைவசனம் ஓத,சகோதரர் நிசார் அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா,மாவட்ட பொருளாளர் அதிரை அகமது ஹாஜா ,பேரூர் கழக செயலாளர் பவாஸ் கான்,பொருளாளர் இலியாஸ் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள்,பேரூர் ,கிளைக்கழக செயலாளர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக விருது 2015

2014 -2015 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபா அவர்களுக்கும்,மதுக்கூர் சூரியத்தோட்டம் ஊ,ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (ஒய்வு) அய்யா.ஆ.பாலசுந்தரம் ஆகியோருக்கு மாநில செயலாளர் விருதுகளை வழங்கினர்.மாணவி ஷபாவுக்காக அவரின் தந்தையார் ஆபிதீன் மரைக்காயர் விருதினை பெற்றுக்கொண்டார்,ஆசிரியர் பாலசுந்தரம் அவர்களுக்கு தமிழாக்கம் குர் ஆனும்,விருதும் வழங்கப்பட்டது.

சிறப்புரை

தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் "தாங்கல்" அப்துல் காதர் அவர்கள் விடுதலைப்பேரில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியும்,மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் பாசிசவாதிகளை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

தீர்மானம்

முன்னதாக ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அவற்றை பேரூர் கழக நிர்வாகிகள் முறையே  சகோதரர்கள் அப்பாஸ்,புரோஸ்கான்,அகமது சபீர்,பேரூர் கழக செயலாளர் பவாஸ் ஆகியோர் வாசித்தனர்.
1.தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனே அமல்படுத்தவேண்டும்.
2.பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும்.
3.மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்
4.மத்தியில் ஆளும் அரசு மததுவேஷங்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு அனைத்து மக்களையும் அரவாணைத்து செயலாற்றவேண்டும்
5.மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள அரசு மதுபானக்கடை உடனே அப்புறப்படுத்தவேண்டும்.

இறுதி பேரூர் கழக துணைச்செயலாளர் ராசிக் அகமது அவர்கள் நன்றியுரைவுடன் முப்பெரும் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





















மதுக்கூரில் சுகந்திர தின கொண்டாடங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
************************
இந்தியாவின் 69வது சுகந்திர தின இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ்,வர்த்தக சங்க தலைவர் அப்துல் காதர்,தொழில் அதிபர் சந்திரசேகரன் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,முருகையன்,ரியாஸ் அகமது,கபார்,சுரோஷ் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் N.S.M.பசீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்.





தமுமுக அலுவலகம்
************************

மதுக்கூர் பேரூர் கழக தமுமுக அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் நிசார் அகமது,பேரூர் கழக பொருளாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் சகோதரர் E.S.M.முகம்மது ராசிக் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்.



நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளி)
************************************

மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளியில்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் காதர்,கிராம கல்விக்குழு தலைவர்  பேரூராட்சி உறுப்பினர் கபார்,பெரியவர் முகம்மது அலி ஜின்னா,கவுன்சிலர் நாகூர் கனி,ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியர்களின்  பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.இதில் ஜமாத் உறுப்பினர் முத்துமுகம்மது,முகம்மது அலி ஜின்னா (ஊருட்டி),எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.




இந்திய சுகந்திர தின கொண்டாடங்கள் மதுக்கூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்,காவல் நிலையம்,தபால் நிலையம்,பொதுப்பணிதுறை அலுவலகம்,பொது நூலகம் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,இஸ்லாமிய இயக்க அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.


Tuesday, August 4, 2015

மதுக்கூரில் .......தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழகமெங்கும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றார்கள்.இன்று 04/08/2015 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி,மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,அழைப்புவிடுத்து இருந்தனர்.














மதுக்கூரில் இன்று மாலை 4:45 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் ஏற்பாடு செய்து இருந்த மதுவிலக்கு கோரிக்கை பேரணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கூட்டுச்சாலையில் நிறைவு பெற்று மதுவுக்கு எதிரான வலுவான கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் கபார் தலைமை வகித்தார்.மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,தமுமுக ஃபவாஸ்,ஜபருல்லா,அமீரக பொருப்பாளர்கள் முகம்மது சேக் ராவுத்தர்,நிசார் அகமது,அப்துல் ஹமீது,ஜாசிம்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லாஹ்,மதிமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் கரிமுத்து,சிபிஎம்  வேதச்சலாம்,சிபிஐ பாரதிமோகன்,விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் ந.இளந்தென்றல்,சமூக சேவகர் எபிநேசன் இன்பநாதன் உள்ளிட்டவர்கள் மதுவுக்கு எதிராக பேசினார்கள்.பேரணி,ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.விரைவில் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையினை அப்புறப்படுத்தக்கோரி முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்புடன் முடிவு பெற்றது.

Friday, June 26, 2015

மதுக்கூரில்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக

பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி
மற்றும்
இஃப்தார் நிகழ்ச்சி

இடம் : MSA திருமண மண்டபம்,பள்ளிவாசல் தெரு,மதுக்கூர்

நாள் : 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி (இன்ஷா அல்லாஹ்)

தலைமை : சகோதரி  பர்வீன் பானு ஆலிமா அவர்கள்

கிரா அத் : சகோதரி பர்வீன் பேகம் ஆலிமா அவர்கள்

சிறப்புரை 
**********
சகோதரி கமருன்னிஸா ஆலிமா அவர்கள்

மெளலவி  அர்ஹம் அவர்கள்
(இஸ்லாமிய அழைப்பாளர் - இலங்கை)

இந்நிகழ்ச்சியில் தங்கள் இல்ல தாய்மார்களையும்,சகோதரிகளையும் கலந்து பங்குபெற செய்ய உதவுங்கள்

அன்புடன்

இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்.

Monday, June 1, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு வாப்பத்துரை வீட்டு இக்பால் அவர்களின் தந்தையும்,முத்துப்பேட்டை ரஹ்மத் அறக்கட்டளை நிர்வாகி தமீம்,அமாஸ் சில்க்ஸ் ஜெயினுலாபுதீன்,அண்ணா மெடிக்கல்ஸ் அப்துல் மாலிக் ஆகியோரின் மாமனாருமான K.P.அப்துல் ஜப்பார் அவர்கள் இன்றுன் 01/06/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Wednesday, May 27, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர் மதுக்கூர் ஜபருல்லா அவர்களின் தந்தையுமான முகம்மது உசேன் அவர்கள் இன்று 27/05/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Monday, May 25, 2015

சாதனை மாணவிக்கு சமுதாய பேரியக்கம் பாராட்டு

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.தொடர்ந்து மாணவி ஷஃபா அவர்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமுள்ளது.மதுக்கூர் தமுமுக பேரூர் கழகம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,TMMK மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,பேரூர் கழக செயலாளர் ஃபவாஸ்,
பெருளாளர் முகம்மது இல்யாஸ்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா முகைதீன் ஆகியோர் மாணவி ஷஃபா அவர்களை சந்தித்து பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.உடன் மாணவியின் தந்தை ஆபிதீன் மரைக்காயர் இருந்தார்.




 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...