Saturday, August 16, 2014
Friday, August 15, 2014
மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இந்தியாவின் 68 வது சுகந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று சிறப்புடன் நடைபெற்றது.
இன்று காலை சுமார் 9:00 மணியளவில் மதுக்கூர் நகர தமுமுக அலுவலகத்தில் நகர நிர்வாகிகளின் முன்னிலையில் அமீரக முன்னாள் பொறுப்பாளர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காலை 10:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் நகர தமுமுக சார்பாக இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இம்முகாமினை சமூக ஆர்வலர் சகோதரர் KNM நத்தர்ஷா அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியி ல் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் NR ரெங்கராஜன் அவர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் M.தண்டாயுதபாணி,முன்னாள் அரிமா தலைவர் சகோதரர் A.ஜாகீர் உசேன்,வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கத்துரை,முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜான் தனசேகரன்,வாட்டாகுடி பாலசுப்ரமணியன்,டாக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியின் மூலமாக 10 சகோதரர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த வகையினை அறிந்து கொண்டார்கள்
மாலை 7:30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சுகந்திர தின தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது."சுகந்திரப்போரில் முஸ்லிம்களின் பங்கு " என்ற தலைப்பில் தமுமுக தலைமைக்கழகப்பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்தினர்கள்.முன்னதாக மாவட்ட கழக பேச்சாளர் பவாஸ் மற்றும் கவுன்சிலர் கபார் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
Wednesday, August 13, 2014
எல்லா புகழும் அல்லாஹ்கே
மதுக்கூர் கீற்று சந்தைப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்துவந்தது.இப்பகுதியில் வேகத்தடை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தது.இதுகுறித்து தமுமுகவும் சம்மந்தப்பட்ட துறையில் கோரிக்கை மனுகொடுத்திருந்தது.கடந்த வாரம் மதுக்கூர் தமுமுக அலுவலகம் வந்த நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.நேற்று 12/08/2014 கீற்று சந்தை பகுதியில் புதிய வேகத்தடை அமைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.(மதுக்கூர் மெயின்ரோடு MSM motor அருகில் மார்க்கெட் செல்லும் வழியிலும் வேகத்தடை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது)

Saturday, July 26, 2014
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் சிவக்கொல்லை (வெஸ்டன் ஸ்கூல் அருகில்) கருப்பூரார் வீட்டு A.M.முகம்மது மைதீன் அவர்களின் மனைவியும்,ரியாஸ்,ராஜிக் அகமது ஆகியோரின் தாயாருமான நஜீமா பேகம் அவர்கள் இன்ரு 26/07/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
Friday, July 25, 2014
ரமலான் பரிசுப்போட்டி பிறை 26
கேள்விகள்
1.தர்மம் செய்துவிட்டு சொல்லிக்காட்டுபவர்களுக்கு அல்லாஹ் கூறும் உதாரணம் என்ன ?
2.மன்னு ஸல்வா என்றால் என்ன ? அது யாருக்கு வழங்கப்பட்டது
3.எந்த நபிதோழருக்கு லம் யகுனில்லதின கஃபரூ என்று தொடங்கும் சூராவை ஓதி காட்டுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான்
(பிறை 26 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் அல்லாபிச்சை அவர்கள்)

Thursday, July 24, 2014
ரமலான் பரிசுப்போட்டி பிறை 23 சரியான பதில்கள்
1.திருடினால் தண்டனை என்ன என்று அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனம் எழுதவும்.
5:38. ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின்
கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும்.
அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
2.கியாத் நாளின் பெரிய அடையாளங்கள் எத்தனை ? அவை யாவை ?
மாபெரும் பத்து
அடையாளங்கள்
இவை தவிர மிக
முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக்
குறிப்பிட்டார்கள்.
பத்து அடையாளங்கள்
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன்
மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி
வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு
பூகம்பம்
8 - மேற்கே ஒரு
பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில்
ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து
புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து
அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
3.மீன் வயிற்றுக்குள் யூனூஸ் நபி (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன என்று அல்லாஹ் சொல்கின்றான்.
21:87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய
தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம்
என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய
இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில்
ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.
சரியான பதில்களை 9 நபர்கள் எழுதி இருந்தார்கள் அவர்களின் சகோதரி Nawfa
Refaideenஅவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.
ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள்
1.போர் முனையில் எவ்வாறு தொழவேண்டும் என அல்லாஹ் கூறுகின்றான் ?
4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக)
நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;
அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள்
பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர்
வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப்
பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும்,
உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச்
சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு
இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக்
(கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள்
எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும்
வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
2.ஈஸா நபி (அலை) அவர்களின் உதாரணம் யாருடைய உதாரணம் போன்றது என அல்லாஹ் கூறுகின்றான்.
3:59. நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்
ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக)
"ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது.
3.லைலத்துல் கத்ரில் என்ன துஆ ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.
லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை!
'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
'அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி' (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!)

என்று கற்றுக் கொடுத்தார்கள்.'
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)
ரமலான் பரிசுப்போட்டி பிறை 24 சரியான பதில்கள் எழுதியவர்கள் மொத்தம் 14 நபர்கள்.அவர்களில் சகோதரர் பயாத் அகமது அவர்கள் பரிசுக்குரியவராக குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார்,
(பரிசுகளை வழங்குபவர்கள் சகோதரர் N.M.S.அல்லாபிச்சை அவர்கள்)
Subscribe to:
Posts (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...