இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, April 27, 2013


மதுக்கூர் புதுத்தெரு சாலியப்பா வீட்டு அண்ணா இல்லம் ஆரிப் அவர்கள் சிங்கப்பூரில் இன்று 27/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

உலகலவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி


இன்று 27/04/2013 காலை 11:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் அருகில் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக நடத்தப்படும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் திறந்து வைத்தார்கள்.
































Friday, April 26, 2013

இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் நாளை 27/04/2013 சனிக்கிழமை 

(இன்ஷா அல்லாஹ்) காலை 10:30 மணி முதல் இரவு 6:30 மணிவரை 

உலகில் நடைபெறும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மாபெரும் 

புகைப்பட கண்காட்சி நடைபெறுகின்றது.

இப்புகைப்பட கண்காட்சியினை நமது குடும்பத்தினர் பார்க்க சொல்லி 

ஆர்வமூட்டுங்கள்.

அதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு 

பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

இப்பொதுக்கூட்டத்தில் 


தமுமுக மாநில பொதுச்செயலாளர் 

சகோதரர் அப்துல் சமது அவர்கள் 

கலந்து கொண்டு



"முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்"
தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.

அனைவரும் வருக.

Wednesday, April 24, 2013


மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) மர்ஹும் KPMK பக்கீர் மைதீன் அவர்களின் மனைவியும்,KPM முபாரக் அலி அவர்களின் தாயாருமான கமருன்னிஷா அவர்கள் இன்று 24/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
 
Mubarak ali contact No : 99650 86120

Saturday, April 20, 2013


மதுக்கூர் இடையகாடு மருகை என்கின்ற மர்ஹும் முத்துமரைக்காயர் அவர்களின் மனைவியும்,கறிக்கடை மர்ஹும் அப்துல் ஜலீல்,சேட் (எ) நைனாமூசா,உமர் அலி,உஸ்மான் அலி,ஹாஜா மைதீன் ஆகியோரின் தாயாருமான பாத்திமா ஜொகரா அவர்கள் இன்று 20/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, April 17, 2013


மதுக்கூர் புதுத்தெரு (மஸ்ஜித் நூர் தெரு பள்ளித்தெரு) பருப்பானத்து வீட்டு காதர் மைதீன்,குத்புதீன்,அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனர் அப்துல் மஜீது அவர்கள் இன்று 17/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, April 16, 2013


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்தல்கள் 

கடும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்,மோர் பந்தல்கள் தாய்கழகம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து பொதுமக்களுக்கு சமுதாய பேரியக்கம் தமுமுக சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்க்ம்.

தமுமுகவின் வழிகாட்டலின்படி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இன்று 16/04/2013 மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக 9வது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர்தெரு,மகாசூப்பர் மார்க்கெட்,கொல்லைத்தெரு,பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றின் 
ஜங்ஷனில் தண்ணீர் பந்தல் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நிசார் அகமது,கவுன்சிலர் கபார்,பவாஸ்,ரமீஸ்,மாலிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்



.







Thursday, April 11, 2013


மதுக்கூர் பள்ளிவாசல் தெரு வளநாடு மளிகை அப்துல்சுபான்,மர்ஹும் அப்துல் சமது,அமானுல்லா,ஜமால் முகம்மது ஆகியோரின் தாயார் ஜைத்துன் அம்மாள் அவர்கள் இன்று 11/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, April 6, 2013


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

மதுக்கூர் இடையகாடு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையினை கண்டித்து மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த 26/03/2013 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான களப்பனியினை செய்தனர்.போராட்டத்தின் வீரியத்தினை அறிந்துகொண்ட அரசுத்துறை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடையகாடுவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் ஒருசில நாட்களில் புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.அதன்படி கடந்த 02/04/2013 அன்று இடையகாடு பகுதியில் 100 KV மின் திறன் கொண்ட  புதியமின்மாற்றி வைக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே !

இருந்தும் தெருவிளக்குகள் இடையகாடு பகுதியில் இன்னும் சரியாக எரியவில்லை.வீட்டு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கின்றது.தெருவிளக்குகள் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.



Wednesday, April 3, 2013


மதுக்கூரில் சாலை மறியல் போராட்டம்

மதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் (பழைய சுப்பையன் கிளப் அருகில்) பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசுமதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசுமதுபானக்கடையினை அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பபோராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள்,எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


புகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக இருந்த அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் களம்கண்ட சமுதாய பேரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின் மதுக்கூர் நகர கிளை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இன்று முதல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.மற்றொன்று புதிய கட்டிடத்தில் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்படும் என கலால்துறையினர் உறுதியளித்து உள்ளார்கள்.
மேற்படி டாஸ்மாக் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் CM Cell மூலமாக கோரிக்கை மனு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.Cm Cekk மூலமாகவும் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.விரிவான செய்திகள்  விரைவில் (இன்ஷா அல்லாஹ்)

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
 

Sunday, March 31, 2013


மதுக்கூர் சிரமேல்குடிரோடு தல்பார் வீட்டு மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று 31/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.

Saturday, March 9, 2013


மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு அப்துல்கனி.அப்துல்வஹாப்,இமாமூதின்,இல்மூதீன் ஆகியோரின் தகப்பனார் அப்துல் மஜீது அவர்கள் நேற்று 08/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்




மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் M.S.அல்லாபிச்சை அவர்களின் மருமகன் நைனா மூசா அவர்கள் 08/03/2013 இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Thursday, March 7, 2013


மதுக்கூர் தமுமுக நகர மாணவரணி பொறுப்பாளருக்கு அரிமா சங்கம் சார்பாக பாராட்டு. (அல்ஹம்துலில்லாஹ்)

மதுக்கூர் அருகில் உள்ள படப்பைக்காடு கிராமத்தில்  கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி குளத்தில் குளிக்க சென்ற 5 குழந்தைகள் தண்ணீரில் முழ்கியது.அதே கரையில் குளித்த சகோதரர் ஜபருல்லா துணிச்சலாக போராடி மூன்று குழந்தைகளை காப்பாற்றினார்.(இச்செய்தியினை கடந்த 06/05/2012 அன்று இமெயில் மூலமாக நமது வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம்)

சகோதரர் ஜபருல்லா அவர்களின் இந்த துணிச்சலான செயலைப்பாராட்டி பல்வேறு சமுதாய.சமூக.சேவை அமைப்புகள் பாராட்டி வருகின்றார்கள்.கடந்த 02/03/2013 அன்று அரிமா சங்கம் சார்பாக சகோதரர் ஜபருல்லா அவர்களை பாராட்டி பரிசும் வழங்கினார்கள்.(எல்லா புகழும் இறைவனுக்கே !)

சகோதரர் ஜபருல்லா அவர்கள் மதுக்கூர் நகர தமுமுக மாணவரணி பொறுப்பாளராக இருந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் நகர துணைச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய  செய்தி
(3 குழந்தைகளை காப்பாற்றிய தமுமுக மாணவரணி பொறுப்பாளர்.)

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பேருராட்சி துணைத்தலைவராக இருப்பவர் ஜீவானந்தம் என்கின்ற ஆனந்த்.இவரின் சகோதரியின் பிள்ளைகள் கோடை விடுமுறைக்காக மதுக்கூரில் உள்ள தாய்மாமா (ஆனந்த்) வீட்டிற்க்கு வந்துள்ளார்கள்.
04/05/2012 காலை சுமார் 11:30 மணியளவில் ஆனந்த சகோதரிகளின் பிள்ளைகள்,ஆனந்தின் மகள் என 5 குழந்தைகள் மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் (படப்பைக்காடு கிராம)எல்லைக்கு உட்பட்ட குளத்தில் நேற்று குளித்து உள்ளார்கள்.குழந்தைகள் குளித்த அதே கரையில் சகோதரர் ஜபருல்லாவும் (மதுக்கூர் தமுமுக மாணவரணி பொறுப்பாளர்)குளித்துள்ளார்.
முதன்முதலாக அந்த குளத்தில் குளித்த  குழந்தைகள் குளத்தின் ஆழத்தை அறியாமல் சற்று தொலைவில் சென்றுவிட்டனார்.நீச்சல் தெரியாத குழந்தைகள் 5 பேரும் சகதி நிறைந்த பகுதிக்கு சென்றுவிட்டனர் அவர்களின் ரஞ்சித்(12) என்ற மாணவன் தன் கண் எதிரே ராஜேஸ் (14),நந்தகுமார் (6)இருவரும் தண்ணீரில் மூழ்குவதைஅறிந்து  கரையில் தனது துணிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்த சகோதரர் ஜபருல்லாவை நோக்கி அண்ணே எங்களை காப்பாற்றுங்கள் என சப்தம் போட்டுஇருக்கின்றார்.குழந்தைகள் தண்ணீரில் மூழ்குவதை அறிந்த சகோதரர் ஜபருல்லா துரிதமாக செய்ல்பட்டு குழந்தைகள் கபில் (5),ரஞ்சித் (15) காவியா (12) மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி கரையில் சேர்த்துவிட்டு மீண்டும் குளத்துக்குள் சென்று மற்ற இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் செய்து உள்ளார்.அவரால் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை.
துரிதமாக செயல்பட்டு 3 குழந்தைகளை காப்பாற்றிய சகோதரர் ஜபருல்லா அவர்களின் செயல் அனைவராலும் பாரட்டப்படக்கூடியதாக உள்ளது. 







  

Wednesday, March 6, 2013


புகழ் அனைத்தும் அல்லாஹ்கே

கடந்த 26/02/2013 அன்று பட்டுக்கோட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்ககடையில் பணிப்புரியும் பெண்கள் வேலை முடிந்து ஜவுளிக்கடைக்கு சொந்தமான வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மோகூர் கிராமத்தில் வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம்  செய்தவர்கள் காயமடைந்தார்கள்.விபத்து நடந்த இடத்திற்க்கு விரைந்து சென்ற தமுமுக மதுக்கூர்,அதிராம்பட்டிணம் ஆம்புலன்ஸ் மற்றும் தமுமுகவினர் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவங்களை அறிந்த ஜவுளிக்கடையின் அதிபர் மதுக்கூர் தமுமுக நகர அலுவலகத்திற்கு கடந்த ஞாயிறு 03/03/2013 இரவு வருகைதந்து தமுமுகவினரின் சேவையினை மனதாரபாரட்டிசென்றார்.

எல்லா புகழும் அல்லாஹ்கே !

Sunday, March 3, 2013


மதுக்கூர் மெயின்ரோடு வெற்றிக்கலைக்காரவீட்டு மர்ஹும் முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,மகாராஜா டெக்ரேசன் அப்துல் சலீம்,பஷீர் அகமது ஆகியோரின் தாயார் ரபிஹா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

பஷீர் அகமது அவர்களின் தொடர்பு எண் : 9943222459

Wednesday, February 27, 2013


முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க கூட்டம்


 மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு என்பது நமதூரில் உள்ள முஸ்லிம் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இரண்டின் சார்பாக ஒரு சங்கத்திற்க்கு 15 நபர்கள் விதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் ஜமாத் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக வைத்துள்ளதாக தெரிகின்றது.

அதிலும் இந்தமுறை மேலவீதியினை சார்ந்தவர் ஜமாத் தலைவராக உள்ளார்.செயலாளர்,பெருளாளர் கீழத்தெருவைச்சார்ந்தவர்கள் உள்ளார்கள்.வருகின்ற முறை கீழத்தெரு முகல்லாவை சேர்ந்தவர் தலைவராகவும்,மேலத்தெரு முகல்லாவை சார்ந்தவர்கள் செயலாளர்,பெருளாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகின்றது.

கீழத்தெரு முஹல்லா சார்பாக 15 நபர்களை தேர்வு செய்வதற்காக நேற்று 24/02/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தில் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 15 நபர்களை தேர்வு செய்யும் அதிகாரம் சங்கத்தின் முன்னாள் (மூத்த) நிர்வாகிகளான M.S.A.அப்துல் ரஜாக்,A.N.M.முகம்மது அலி ஜின்னா,A.M.அப்துல் காதர் ஆகியோரிடம் ஓப்படைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

மேற்கூரிய சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் 15 நபர்களை கொண்ட பட்டியலை அறிவிப்பு செய்து அவர்களை கீழத்தெரு முஹல்லா சார்பாக ஜமாத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும்,15 நபர்களில் ஒருவரை ஜமாத் தலைவராக தேர்வு செய்யும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

15 நபர்களின் பெயர் விபரம்

  1. .M.S.A.அப்துல் ரஜாக்
  2. .A.M.அப்துல் காதர் (Tamilnadu medical)
  3. A.N.M.முகம்மது அலி ஜின்னா
  4. A.N.M.அஜீஸ் ரஹ்மான் (Abar travels)
  5. ஜபருல்லா (ராயல்)
  6. S.S.M.H.முகம்மது அலி ஜின்னா (ஊருட்டி)
  7. S.முபாரக் அலி
  8. A.முத்து முகம்மது
  9. இஸ்ஹாக் (Tamilnadu medical)
  10. O.P.அப்துல் ராஜக்
  11. A.S.M.முஸ்தபா
  12. N.S.M.முகமம்து பாரூக்
  13. M.K.M.அப்துல் கறீம 
  14. T.A.K.A.முகைதீன் மரைக்காயர்
  15. T.A.K.M.ஆஷீக் மரைக்காயர்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் சிறப்பான முறையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அதே வேளையில் ஐவேலை தொழுகையினையும் நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்க  அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

Saturday, February 23, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் திறப்பு விழா கண்ட மஸ்ஜித் ஹாரப் அல் நயிமீ பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள்.நமது கோமராவில் சிக்கியது.















மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் புதியப்பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி) பெரும் பொருளாதார உதவி செய்தவரும்.பள்ளியினை திறந்துவைத்தவருமான  ராசல் கைமா அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் அவர்களின் புதல்வருமான ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக கடந்த முன்று தினங்களுக்கு முன்னர் இந்தியா (மதுக்கூர் )வந்தனர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று கடந்த 22/02/2013 அன்று திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்  துபாய் போய் சேர்ந்தனர்.துபாய் விமான நிலையத்தில் சகோதரர்கள் S.N.A.முகம்மது புகாரி,A.M.இமாமுதீன் ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் சகோதரர்கள்.நன்றியுடன் வரவேற்றார்கள்.
 

Thursday, February 21, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இனிதாய் முடிந்த இறை இல்லப்பணி...

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (சன் கார்டனில்)முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி.


அல்லாஹ்வின் கிருபையால் அழகாக நிறைவு பெற்றது மஸ்ஜித்  ஹாரப் அல் நயீமி பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!

மதுக்கூர் மாநகருக்கு கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு பள்ளிவிதம் இறைவனின் மஸ்ஜித்துக்கள் நிறைந்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த காலங்களில் மஸ்ஜித் இஃக்லாஸ்,மஸ்ஜித் தக்வா வரிசையில் இன்று 21/02/2013 புதிய பள்ளிவாசலாக மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி தோன்றியுள்ளது.

இன்று காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் ,S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது,நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

மதியம் 2:15 மணிக்கு லுஹர் தொழுகை நடத்தப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டு பள்ளிவாசலின் திறப்புவிழா நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சன்பாய்ஸ் சார்பாக "இஸ்லாம் விரும்பும் இனிய பெண்கள்" என்ற தலைப்பிலான நூல் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பல சகோதரர்கள் மனமுந்து டீ,குளிர்பானம் பாசமான வினியோகங்கள் நடைப்பெற்று கொண்டே இருந்தது.

பள்ளிவாசல் அமைய காரணமாக இருந்தவர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டார்கள்.இன்ஷா அல்லாஹ் இறைவனும் அவர்களை கெளரவிக்க துவா செய்வோம்.

ஊரில் எத்தனையே இயக்கங்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் ஓன்றினைந்து இருந்தது சந்தோஷாமாக இருந்தது.காழ்புணர்ச்சிகள் இல்லாத இதே ஓற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை தொழுது துவா செய்கின்றோம்.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி உறுப்பினர்கள்,நண்பர் குழு நண்பர்கள்,சமுதாய போராளிகள்,இயக்கவாதிகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்பள்ளி மதுக்கூர் மாநகரில் அமைய உழைத்த அனைவருக்கும் எங்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றோம்.அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து கிருபை செய்ய துவா செய்கின்றோம்


சம உரிமை பேணும்
சகோதரத்துவத்தை வளர்க்கும்
சலாஹ் என்னும் தொழுகையினை நிறைவேற்றிட
சன் கார்டனில் அல்லாஹ்வின் ஆலயம் அமைத்த
சன்றோருக்கும்:சபையோருக்கும்
சங்கைமிகு ஜமாத்தாருக்கும் 
சமுதாய பேரியக்கம்-தமுமுக சார்பாக
சலாத்தை சமர்பிக்கின்றோம்.






































கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...