Saturday, July 7, 2012
மதுக்கூர் மேலவீதியில் ஒரு பள்ளிவாசல் கட்டவேண்டும் அதற்க்கான நன்கொடைகள பெறுவதற்காகவும்.சிங்காப்பூர் வாழ் மதுக்கூர் நண்பர்களின் அழைப்பின் பேரிலும் ஜனாப் முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,M.M.அல்லாப்பிச்சை(OPM) இருவரும் சிங்கப்பூர் சென்றனர்.பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
இப்புகைப்படங்களில் T.A.K.A.முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் M.M.அல்லாப்பிச்சை (OPM) ஆகியோருடன் ஜனாப் தங்கக்கனி,உதுமான்கனி,முகம்மது கவுஸ்,அண்ணா இல்லம் ஆரிப்,காதர் முகைதீன் மற்றும் நமதூர்வாசிகள் உள்ளார்கள்.
மரைக்காயர் அவர்கள் பம்பாயிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற போது வழியனுப்பிய மதுக்கூர் சகோதர்கள் சதக்கத்துல்லா,நைனா முகம்மது,எஸ்,கே.அமீர் சுல்தான்,முகம்மது ஐஹான் ஆகியோர் உள்ளார்கள்
நாளை மேலப்பள்ளியின் பழமையான தோற்றமும்,புதிய கட்டிட கட்டுமான பணிக்கான துவக்க நிகழ்ச்சிக்கான அரிய புகைப்படங்கள் வெளியிடப்படும்.இன்ஷா அல்லாஹ்...
Friday, July 6, 2012
Thursday, July 5, 2012
மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் முன்னாள் தலைவரும்,மதுக்கூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான மரைக்காயர் என்றால் தலைவர் என்ற பொறுப்புக்கு பொருள் என நினைக்கும் அளவுக்கு சிறப்பாக வழிநடத்திய ஜனாப் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் 1973 ஆம் ஆண்டு பங்கு கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்புகள்.
1973 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மரைக்காயர் அவர்களின் குதிரை நகர்வலம்
மரைக்காயர் அவர்களுடன் A.N.M.முகம்மது அலிஜின்னா,M.V.M.அன்சாரி,
T.A.K.A.முகைதீன் மரைக்காயர்,M.அப்துல்பாரி,கமாலுதீன்.ஹாஜா கமாலுதீன்
பாண்டிச்சேரி பரூக் மரைக்காருடன் யாக்கூப் மரைக்காயர்
விழா மேடையில் தலைவர்களுடன் மரைக்காயர்
மரைக்காயர் அவர்களுக்கு சிறப்பு செய்கின்றார் ஒன்றிய பெருந்தலைவர் J.M.செல்வநாயகம்
விழா மேடையில் மரைக்காயர்
விழா குழுவினருடன் மரைக்காயர்
பாரூக் மரைக்காயர்,த.செ.முகம்மது யூசுப்,முத்தாக்குறிச்சி ராஜேந்திரன்,J.M.செல்வநாயகம்,மற்றும் ஊர் பிரமுகர்களுடன் யாக்கூப் மரைக்காயர்
நாட்டண்மை அப்துல் லத்தீப்,பிச்சை ராவுத்தர்,தெ.செ.முகம்மது யூசுப்,யாக்கூப் மரைக்காயர்,புதுச்சேரி பாரூக் மரைக்காயர்,பேரூராட்சி தலைவர் ராமசாமி செட்டியார்,அல்லாபிச்சை(OPM),அப்துல்ரகீம்,அன்சாரி.
முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் இறந்து சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய சமுதாயத்திற்க்கு தெரிவிக்கும் நோக்கத்தில் வெளியிடப்படுகின்றது
மதுக்கூர் மேலப்பள்ளிவாசல் கட்டுவதற்க்காக T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,பெரியவர் M.M.அல்லாப்பிச்சை(OPM) அவர்களும் சிங்கப்பூர் சென்ற புகைப்பட தொகுப்பு நாளை (இன்ஷா அல்லாஹ்)
இன்றையமுக்கியசெய்தி :மதுக்கூர் மெயின்ரோட்டில் இன்று 05/07/2012 காலை சுமார் 8:45 மணிக்கு தனியார் பள்ளி வாகனம் முத்துக்கனி என்பவர் மீது மோதியது.வாகனம் மோதியதில் முத்துக்கனி சம்பவ இடத்தில் இறந்தார்.முத்துக்கனி மீது மோதிய வாகனம் மின்கம்பத்திலும் மோதியதால் மெயின்ரோடு பகுதியில் காலை முதல் மின் தடை ஏற்பட்டு மாலை சரிசெய்யப்பட்டது.
Wednesday, July 4, 2012
நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா - பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)
நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜீன் 30 அன்று நடைபெற்ற "சமுதாய ஒற்றுமை" அரங்கில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை (ஆடியோ வடிவில்)
பேரா. ஜவாஹிருல்லாஹ் தனது சிறப்புரையில்...
1 ரூபாய் முதலீட்டில் விடுதலைக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி 66 வது பட்டமளிப்பு விழாவை எட்டுவதற்கு உழைத்த உலமா பெருமக்களுக்கும், நிர்வாக பெருமக்களுக்கும், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது உரையினை தொடங்கினார்.
சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு மிக அவசியம் என்பதையும், இதற்காக இஸ்லாமிய கல்விக்கூடங்கள் வளர வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார். வரலாற்றில் அறிவின் உச்சியில் இருந்த இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விவரங்களை வரலாற்று நிகழ்வுகள் மூலம் எடுத்துரைத்தார்.
மேலும் சமூக புரட்சிக்கும், சமுதாய ஒற்றுமைக்கும் மதரசாக்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதை விளக்கினார். நவீன தொழில்நுட்ப சாதனங்கள் எப்படி சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதையும் அதிலிருந்து நாம் விடுபட மதரஸாக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.
(முன்னாள் கல்லூரி முதல்வர் அப்துல் கலாம் நினைவுப்பரிசு வழங்கும்போது..)
மதுக்கூர் திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளரும்,சிரமேல்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும்,மாநில பொதுக்குழு உறுப்பினருமான சகோதரர் A.R.பாலையன் அவர்கள் இன்று 04/07/2012 மரணித்தார்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினாருக்கும்,கட்சினரு க்கும் எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Monday, July 2, 2012
மதுக்கூர் இடையகாடு M.S.O,S.அல்லாப்பிச்சை அவர்களின் தகப்பனாரும்,லக்கி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அப்துல் காதர் அவர்களின் மாமனாருமான M.S.O.சேக்மைதீன் அவர்கள் இன்று 02/07/2012 வஃபாத.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அப்துல் காதர் செல்94422 61817
Allapichai cell :87546 22743
Allapichai cell :87546 22743
Saturday, June 30, 2012
மதுக்கூரில் புதிய இறைஇல்லம் (இறைவன் நாடினால்)
மதுக்கூர் சூரியத்தோட்டம் (மேலசூரியத்தோட்டம்) பகுதியில் உள்ள சகோதரர் த.செ.ஜக்கரியா,சகோதரர் டைகர் ஜமால் முகம்மது இவர்களின் வீட்டின் அருகில் அம்மாக்குளத்திற்க்கு தண்ணீர் செல்பதற்க்காக நமதூர் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் ஒரு போர்வெல் (கல்கேணி)இருந்தது.நாளடையில் இது பயன்பெறாமல் போய்விட்டது.கடந்த பல வருடங்களாக இந்த இடம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் இருந்தது.இந்த இடத்தில் ரேசன் கடை கொண்டுவரவும் முயற்சிகள் செய்யப்பட்டு கைவிடப்பட்டது.இந்த இடத்தில் இருந்த போர்வெல் கட்டிடம் நேற்று 29/06/2012 இடிக்கப்பட்டது தெருவாசிகள் ஏன் இந்த கட்டிடம் இடிக்கப்படுகின்றது என்ற விபரம் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தனர்.
இன்று காலை 30/06/2012 இறைவனின் கிருபையால் இனிதே விடிந்தது.இனிப்பான செய்தியினை கொடுத்தது.
மேற்கண்ட இடத்தில் மதுக்கூருக்கு மேலும் ஓர் இறைஇல்லம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும்.இப்பணிக்கான முழுத்தொகையும் அமீரகத்தில் உள்ள ராசல் கைமா என்னும் பகுதியில் வசிக்கின்ற அரபிஒருவர் தருவதாகவும்,பார்வையிட இன்று மதுக்கூருக்கு வருகை புரிவதாகவும் செய்திகள் உலா வந்தது.
இச்செய்திகளின் அடிப்படையில் இடத்தை பார்வையிட ஓர் அரபி வந்தார்.சுமார் 1 மணி நேரம் ஆலோசனைகள் செய்தார்.சுமார் 15 இலட்சம் தருவதாக வாக்குறுதியினையும் தந்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)
இறைவன் நாடினால் புதிய பள்ளிவாசல் அமைய உள்ள இடம்
இந்த நல்ல முயற்சிக்கு முழுமுச்சாக செயல்பட்டு கொண்டிருக்கும் அனைவருக்காகவும் துவா செய்வோம்.
Wednesday, June 27, 2012
விழித்துக்கொள்ளும் திருடர்கள்...உறக்கும் காவல்துறை
மதுக்கூரில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றது.அதுவும் குறிப்பாக இராமம்பாள்புரம் பகுதியில் திருட்டு சம்பவம் நாள்தோறும் அரங்கேருகின்றது.கடந்த மே மாதம் 6 தேதி மஸ்ஜித் தக்வா எதிர்புறம் உள்ள வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது.மே 13 தேதி மஸ்ஜித் தக்வா அடுத்த வீடான சகோதரர் நாகூரார் ரபி அவர்கள் வீட்டில் சுமார் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.சமீபத்திய தேதிகளில் இடையகாடு,புதுத்தெரு ஆகிய பகுதிகளில் திருட்டு முயற்சிகள் மற்றும் சம்பவங்கள் நடைபெற்றது
இன்று 27/06/2012 மதுக்கூர் இராமம்பாள்புரம் மஸ்ஜித் தக்வா வலப்புற அமைந்துள்ள துபாயில் கிளினீங் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் சகோதரர் உபயத்துல்லா அவர்களின் வீடு உள்ளது.உபயத்துல்லா அவர்களின் மனைவி கடந்த சிலதினங்களுக்கு முன் அவரின் தாயார் வீட்டிற்க்கு சென்றுள்ளர்.வீடு பூட்டி இருந்தது.வீட்டின் சூழ்நிலையினை அறிந்துகொண்ட மர்ம மனிதர்கள் இன்று வீட்டின் முகப்பு கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து,பின்னர் மெயின் டோரின் லாக்கை தனியாக உடைத்து வீட்டின் அறை கதவினை சேதப்படுத்தி பின்னர் பீரேவினை கடுமையாக சேதப்படுத்தி அதிலிருந்த சுமார் 2 பவுன் மற்றும் இரண்டு டிஜிட்டல் கேமரா,டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.வீட்டில் திருட்டு நடந்துள்ள செய்தி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.ஒரு சம்பிரதய நிகழ்ச்சியாக காவல்துறையினர் வந்து பார்த்து சென்றார்கள்.மற்றபடி எந்த விசாரனையும் மேற்கொள்ளவில்லை.
இன்று கொள்ளை சம்பவம் நடந்த வீடு
உடைக்கப்பட்ட மெயின்டோர் லாக்
எனவே அன்பான நமது இமெயில்,இணையத்தள சகோதரர்களை மதுக்கூரில் நடைபெறும் தொடர் திருட்டுக்கள் பற்றி நீங்களும் அங்கிருந்தபடியே கீழ்கண்ட இமெயில் முகவரிகளில் புகார் செய்யலாம்.
email: cmcell@tn.gov.in,
spthanjavur@yahoo.com
அறிவுறுத்தல் :நிகழ்ச்சிகளில்,மருத்துவமனைகளில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டில் யாரவது தங்கக்கூடிய சூழ்நிலையினை ஏற்படுத்த சொல்லுங்கள்.கூடுமானவரை வெளியில் தங்குவதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.இரவு நேரங்களில் வீட்டின் முன்,பின் பக்கங்களில் குறைந்தபட்சம் 0 வேல்ட் பல்புகளையாவது எரியவிடச்சொல்லுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
கருத்துக்களும் விமர்சனங்களும்
அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...
































