இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, February 23, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் திறப்பு விழா கண்ட மஸ்ஜித் ஹாரப் அல் நயிமீ பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள்.நமது கோமராவில் சிக்கியது.















மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் புதியப்பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி) பெரும் பொருளாதார உதவி செய்தவரும்.பள்ளியினை திறந்துவைத்தவருமான  ராசல் கைமா அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் அவர்களின் புதல்வருமான ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக கடந்த முன்று தினங்களுக்கு முன்னர் இந்தியா (மதுக்கூர் )வந்தனர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று கடந்த 22/02/2013 அன்று திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்  துபாய் போய் சேர்ந்தனர்.துபாய் விமான நிலையத்தில் சகோதரர்கள் S.N.A.முகம்மது புகாரி,A.M.இமாமுதீன் ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் சகோதரர்கள்.நன்றியுடன் வரவேற்றார்கள்.
 

Thursday, February 21, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இனிதாய் முடிந்த இறை இல்லப்பணி...

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (சன் கார்டனில்)முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி.


அல்லாஹ்வின் கிருபையால் அழகாக நிறைவு பெற்றது மஸ்ஜித்  ஹாரப் அல் நயீமி பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!

மதுக்கூர் மாநகருக்கு கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு பள்ளிவிதம் இறைவனின் மஸ்ஜித்துக்கள் நிறைந்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த காலங்களில் மஸ்ஜித் இஃக்லாஸ்,மஸ்ஜித் தக்வா வரிசையில் இன்று 21/02/2013 புதிய பள்ளிவாசலாக மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி தோன்றியுள்ளது.

இன்று காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் ,S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது,நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

மதியம் 2:15 மணிக்கு லுஹர் தொழுகை நடத்தப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டு பள்ளிவாசலின் திறப்புவிழா நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சன்பாய்ஸ் சார்பாக "இஸ்லாம் விரும்பும் இனிய பெண்கள்" என்ற தலைப்பிலான நூல் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பல சகோதரர்கள் மனமுந்து டீ,குளிர்பானம் பாசமான வினியோகங்கள் நடைப்பெற்று கொண்டே இருந்தது.

பள்ளிவாசல் அமைய காரணமாக இருந்தவர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டார்கள்.இன்ஷா அல்லாஹ் இறைவனும் அவர்களை கெளரவிக்க துவா செய்வோம்.

ஊரில் எத்தனையே இயக்கங்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் ஓன்றினைந்து இருந்தது சந்தோஷாமாக இருந்தது.காழ்புணர்ச்சிகள் இல்லாத இதே ஓற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை தொழுது துவா செய்கின்றோம்.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி உறுப்பினர்கள்,நண்பர் குழு நண்பர்கள்,சமுதாய போராளிகள்,இயக்கவாதிகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்பள்ளி மதுக்கூர் மாநகரில் அமைய உழைத்த அனைவருக்கும் எங்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றோம்.அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து கிருபை செய்ய துவா செய்கின்றோம்


சம உரிமை பேணும்
சகோதரத்துவத்தை வளர்க்கும்
சலாஹ் என்னும் தொழுகையினை நிறைவேற்றிட
சன் கார்டனில் அல்லாஹ்வின் ஆலயம் அமைத்த
சன்றோருக்கும்:சபையோருக்கும்
சங்கைமிகு ஜமாத்தாருக்கும் 
சமுதாய பேரியக்கம்-தமுமுக சார்பாக
சலாத்தை சமர்பிக்கின்றோம்.






































Tuesday, February 19, 2013


இறுதி கட்ட பணிகளில் இறைஇல்லம்

மதுக்கூரில் விழாக்கோலம்

மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் இறைவனின் மாபெரும் கிருபையால் முடிவு பெற்றுவிட்டது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் பயானுடன் தொடங்குகின்றது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ஒருவழிப்பாதை தற்காலிகமாக மாற்றிவிடப்பட்டுள்ளது.பிரமாண்மான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.திறப்புவிழா பற்றிய நோட்டீஸ் வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.சகோதரர்களின் விளம்பர பிளக்ஸ்போர்டுகள் சூரியத்தோட்டதில் குடிகொண்டுள்ளது.

இப்பள்ளிக்கு பெரும் நிதி உதவி செய்தவரும்,பள்ளிவாசல் திறப்பாளருமான  ராசல்கைமாயை சார்ந்த அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி மற்றும் அவரது மகனார் ராஷித் ஹாரப் அல் நயீமி ஆகியோர் நேற்று துபாயிருந்து திருச்சிவந்தனர்.இன்று மாலை மதுக்கூருக்கு வருகைதந்து மஸ்ஜித் தை பார்வைவிட்டார்.

சிலருக்கு நோட்டிஸில் எனது பெயர் இல்லை,எனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என இதுபோன்ற சில மனகசப்புகள் உள்ளது.மேலும் சிலருக்கு வீதிகள் சம்மந்தமான சங்கடங்களும்,மேலும் சிலருக்கு எங்களை அழைக்கவில்லை என்ற மனவருத்தமும் இருப்பதாக அறியமுடிகின்றது.இது அல்லாஹ்வின் ஆலயம் யாரும் யாரிடமும் மனகசப்பின்றி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற துவா செய்வோம்.

இந்த இனிமையான வேலையில் அரபியர் ஹாரப் சலாம் அல் நயீமி அவர்களின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து மதுக்கூருக்கு இப்பள்ளிவர முன்முயற்சி எடுத்த சகோதரர் எஸ்.என்.எஸ்.நைனா முகம்மது (ராவுத்தர்ஷா) அவர்களுக்கும்,இந்த இடத்தில் இடம் அளித்த மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தினருக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகள்.

இப்பள்ளிவாசல் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பிறகு அப்பள்ளியின் முஅத்தீன் தினந்தோறும் ஐவேளையும் ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்),ஹய்ய அலல் ஃபலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்,என அழைப்புவிடுவார்.அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வக்த் தொழுகையிலும் போய் கலந்து கொண்டு வரிசைகளால் (ஷப்)அப்பள்ளியினை அலங்கரிப்போம்.இன்ஷா அல்லாஹ்...







Monday, February 18, 2013

மதுக்கூரில் சூரியத்தோட்டத்தில் வருகின்ற 20/02/2013 புதன்கிழமை மாலை பெண்கள் பயானுடன் திற்ப்பு விழா காணும் மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி பள்ளியின் திறப்பு விழா அமைப்பிதழ்




Wednesday, February 13, 2013


இடைவிடாது நடைபெறும் இறை இல்ல பணிகள்

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் மஸ்ஜிநுன் ஹாரப் அல்நயீமி வருகின்ற 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் நிகழ்ச்சியுடன் அடுத்த நாள் 21/02/2013 லுஹர் தொழுகைக்கு வக்ப் செய்யப்பட இருக்கும்  பள்ளிவாசலில் இறுதிகட்ட கட்டிட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக இரவு பகல் பாரமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வர்ணம் பூசும் பணி,மார்பிள்ஸ் போடும் பணி,மினார கட்டும் பணி உளூ செய்யும் இடம்,கழிவறை கட்டும்பணி என பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இறை இல்ல கட்டிட பணியினை ஒருங்கிணைந்து வரும் சகோதரர் லக்கி அப்துல் காதர் அவர்கள் திறம்பட பணியாளர்களை தட்டிக்கொடுத்து பணிகளை வாங்கி வருகின்றார்.

கட்டிட பணிகளை அவ்வபோது மதுக்கூர் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும்,அமீரக நிர்வாகிகளும் பார்வையிட்டு வருகின்றார்கள்.








Monday, February 11, 2013


மாவட்ட ஆட்சியருக்கு தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு

மதுக்கூரில் முக்கூட்டுச்சாலையில் இயங்கிவரும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக உள்ள அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 28/05/2012 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உணர்ந்த மதுக்கூர் நகர தமுமுக &  மமக சார்பாக  22/09/2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் மதுக்கடை முற்றுகைப்போராட்டம் என அறிவித்து இருந்தோம்.போராட்டத்தின் வீரிய களத்தினை அறிந்த அரசுத்துறை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்,பட்டுக்கோட்டை தாசில்தார்,பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் 3 மாத காலக்கொடுவில் மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார்கள்.மூன்று மாத காலம் நிறைவுபெற்றதை நினைவுப்படுத்தும் வண்ணம் கடந்த மாதம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு நினைவூட்டல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கும் நினைவூட்டல் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டு, இன்று 11/02/2013 காலை 11:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசுமதுபானக்கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய போது இன்னும் ஒருமாதத்தில் இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.
 

ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுகின்றது.

மதுக்கூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த திமுக ஆட்சியில் தரம் உயர்த்துவதற்காக (கூடுதல் கட்டிடம்) நிதி ஒதுக்கப்பட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என இத்திட்டம் செயல்படுத்துவதற்க்கு காலதாமதம் செய்யப்பட்டது.இதை உணர்ந்த மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் கடந்த 28/05/2012 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இப்பணி சம்மந்தமாக  தகவல் தமுமுக சார்பாகமாவட்ட சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் மூலம்  கேட்கப்பட்டது.மேலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்தும் இதை வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நிதி பற்றாக்குறைதான் காரணம் என கூறினார்கள்.போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து நடைபெறும எனவும் கூறினார்கள்.
 
கடந்த உள்ளாட்சி தேர்தலில் போதும் இத்திட்டம் விரைந்து கொண்டுவர என்னால் ஆன முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மமக பேரூராட்சி உறுப்பினர் சகோதரர் எம்.கபார் அவர்களாலும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.ஆதலால் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக சகோதரர் கபார் அவர்களால் கடந்த 22/01/2013 அன்று  ஆரம்ப சுகாதார நிலையம் சம்மந்தமாக  CM Cellக்குகோரிக்கை மனு அனுப்பப்பட்டது.இக்கோரிக்கை மனு அளிக்கப்பட்ட இருபது தினங்களில் கடந்த 09/02/2013 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு முப்பது படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்க்காக மார்க் செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்ற முயற்சியில் பலரும் முனைப்புடன் செயல்பட்டார்கள்.அனைவரின் நோக்கமும் மதுக்கூர் அரசு சுகாதார நிலையம் தரம் உயர்ந்தப்படவேண்டும் என்பதே.எல்லா புகழும் இறைவனுக்கே!

Thursday, February 7, 2013


மக்கள் கடலில் மக்கள் வாழ்வுரிமை மாநாடு


மனிதநேய மக்கள் கட்சியின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா கோவை மாவட்டத்தின் சார்பாக வாழ்வுரிமை மாநாடாக கடந்த 03/02/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.கோவை மாநகரின் நுழைவாயிலிருந்து கருப்பு வெள்ளை கருப்பு கழக கொடிகளில் பட்டொலி வீசிபறந்தது.

கோவை வ.உ.சி மைதானம் என்பது தமிழகத்தின்,இந்தியாவின் மிகப்பெரும் கட்சிகளான திமுக,அதிமுக,காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே இங்கு மாநாடுகளை நடத்தியுள்ளது.இதற்கெல்லாம் அடுத்தபடியாக மனிதநேய மக்கள் கட்சி தனது மாவட்ட மாநாட்டினை நடத்தி முடித்துள்ளது.

முன்னதாக வழக்கப்போல காவல்துறையின் பூச்சாண்டி வேலைகளுடன் (மாநாட்டிற்க்கு மூன்று நாள்கள் முன்னர் கோவையில் பெட்ரோல் குண்டு கண்டெடுப்பு என மாநாட்டினை சீர்குலைக்க சதி செய்தார்கள்)சதிக்காரர்களுக்கெல்லாம் சதி செய்வபன் ஒருவன் இருக்கின்றான் என கா(வி)வல் துறையினருக்கு தெரியாது.
 
காலையில் மருத்துவ முகாம்,புகைப்பட கண்காட்சி என தொடங்கியது மாநாடு.மாலை 3 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இளைஞர் படை,மகளிர் அணி அணிவகுப்புக்கு காவல்துறை தடை செய்தது.காவல் தடைகளை தகர்க்கும் தாய்கழகம் தமுமுக வில் பயின்ற மனிதநேய மக்கள் கட்சியின் இராணுவ அணிவகுப்பு டெல்லி பேரணியினை நினைவுகூர்ந்தது.சமையலறையை மட்டும் அலங்கரித்த தாய்மார்கள் தமுமுக வின் உதயத்திற்க்கு பின் சமுதாய போராட்டங்களையும் அலங்கரித்த வரலாற்றை கோவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டு முயற்சியால் இது மக்கள் வாழ்வுரிமை மாநாடா ? மகளிர் வாழ்வுரிமை மாநாடா ? என சிந்திக்கவைக்கும் வண்ணம் மாலை 4 மணிக்கெல்லாம் மகளிர் பகுதியில் கூட்டம் அலைமோதியது என்றால் அது மிகையல்ல.

மாலை 5:00 மணிக்கு மாநாட்டு நுழைவு வாயிலில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து இளைஞர் படையின் அணிவகுப்பினை ஏற்று கொண்டார் மாநில தலைவர் மெளலவி ரிபாய் அவர்கள்.தொடர்ந்து மாநாடு இறைவசனத்துடன் இனிதே தொடங்கியது.தலைமைக்கழக பேச்சாளர்கள் சகோதரர்கள் கோவை ஜாகீர்,ஜெய்னுலாபுதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அமைப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி சிறப்பான உரையுடனும் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களின் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை பாடலுடனும் மாநாடு சூடுபிடித்தது.மாநில நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து எழச்சி உரைகள் நிறைவேற்றினார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரகணக்கான கோவைவாசிகள் எங்களின் 20 ஆண்டு கால கனவு அல்லாஹ்வின் கிருபையால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நிறைவேறி உள்ளது எல்லா புகழும் இறைவனுக்கே என இறைவனை புகழ்ந்தவர்களாக கலைந்து சென்றனர்.














மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியில் கட்டிமுடிக்கும் தருவாயில் இருக்கும் இறைஇல்லம் பள்ளிவாசலின் திறப்பு விழா நிகழ்ச்சி வரும் 20/02/2013புதன் கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சியுடன் தொடங்கின்றது.மறுநாள் 21/02/2013 வியாழன் லுஹர் தொழுகையுடன் பள்ளிவாசல் வக்ப் செய்யப்படுகின்றது.இன்ஷா அல்லாஹ்
 




மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் புதிதாக கட்டிகொண்டிருக்கும் இறைஇல்லத்தின் (பள்ளிவாசல்)திறப்பு விழா சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் நாளை 03/02/013 ஞாயிறு அன்று நடைபெறும் என தெரிகின்றது.இப்பள்ளிவாசல் கட்டுமான பணிகள்களை வரும் 15/02/2012 தேதிகுள்ளாக முடிக்கவேண்டும் என முனைப்புடன் கமிட்டியினர் செயல்பட்டுவருகின்றார்கள்.
பள்ளியின் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு இப்பள்ளிவாசல் கட்டுமானபணிக்கு  பெருளாதார உதவி செய்த சகோதரர் கலந்துகொள்வார் என தெரிகின்றது.

மதுக்கூர் சூரியத்தோட்டம் சகோதரர் S.N.A.நஜீப் அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 07/02/2013 வியாழன் நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

மதுக்கூர் பள்ளிவாசல் தெரு முகம்மது அலியார் அவர்களின் மச்சான் சு.மு.அஜீஸ் ரஹ்மான் அவர்கள் இன்று 06/02/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யவும்.






மதுக்கூர் கொல்லைத்தெரு மர்ஹும் அப்துல் ரஹீம் அவர்களின் மருமகன் முகம்மது ரபீக் அவர்கள் இன்று 06/02/2013 வஃபத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, February 4, 2013

மதுக்கூர் மன்னார்குடி சாலையில் மன்னார்குடி அருகே நேற்றிரவு நடைபெற்ற சாலை விபத்தில் மதுக்கூர் சூரியத்தோட்டதை சேர்ந்த கருத்தப்பா வீட்டு லியாக்கத்தலி அவர்களின் மகன் சேக் அப்துல்லா உட்பட 3 நபர்கள் (இருவர் மாற்றுமத சகோதரர்கள்) சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடம்.
மதுக்கூர் சூரியத்தோட்டம் கருத்தப்பா வீட்டு லியாக்கத்தலி அவர்களின் மகன் சேக் அப்துல்லா அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...