இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, January 6, 2015

மஸ்ஜித் தக்வா

அல்ஹம்துலில்லாஹ்

இனிதாய் முடிந்தது...இறையில்ல திறப்பு விழா

மதுக்கூர் கீழக்காடு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக குடியேறுகின்றார்கள் என்பதை உணர்ந்த மதுக்கூரின் பெரியவர்கள் ஜனாப் A.N.M.முகம்மது அலி ஜின்னா,அப்துல்லா,முகம்மது சாலிஹ் மற்றும் பலர் ஆலோசனை செய்து மதுக்கூர் கீழக்காடு பகுதியில் பள்ளிவாசல் கட்டவேண்டும் என முடிவு எடுத்து அதற்கான அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டனர்.இவர்களின் இம்முயற்சி அல்லாஹ்வின் கிருபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 01/08/2010  ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9:30 மணியளவில் புதியப்பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி பெரியப்பள்ளியின் தலைமை இமாம் செய்யது சுலைமான் அவர்கள் இறைவசனம் ஓதி தொடங்கிவைத்தார்கள்.மெளலவி முகம்மது இஸ்மாயில் ஆலிம் அவர்கள் தலைமையில் மதுக்கூர் ஜமாத் பெருமக்களின் முன்னிலையில் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசல் திறக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.





மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் N.அமானுல்லா,செயலாளர் N.S.M.பாரூக்,பொருளாளர் M.K.M.அப்துல் கறீம்,முன்னாள் ஜமாத் தலைவர் T.A.K.A.முகைதீன் மரைக்காயர்,வர்த்தக சங்கத்தலைவர் M.S.A.அப்துல் ரெஜாக,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜக்கரியா,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க செயலாளர் ஜபருல்லா,தொழில் அதிபர் தோப்புத்துறை ஆரிப் அவர்களின் சகோதரர்கள்  மேலும் மதுக்கூர் ஜமாத்,சங்க நிர்வாகிகள்,இயக்கங்கள்,அமைப்புகளின் இளைஞர் பட்டாளம்,ஊர் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டார்கள்.





A.N.M.முகம்மது அலி ஜின்னா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.அதிரை மெளலவி ஹைதர் அலி அவர்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.ராமசந்திரன்,கா.அண்ணாத்துரை,ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில் (அதிமுக),லண்டன் வீ.கோவிந்தராஜ் (திமுக),மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் N.S.M.பஷீர் அகமது உட்பட அரசியல் பிரமுகர்கள்,மாற்றுமத சகோதரர்கள்,ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.



மஸ்ஜித் திறப்பு நிகழ்ச்சியின் மதுக்கூர் இளைஞர்களின் பங்கு சிறப்புக்குரியதாக இருந்தது.மதுக்கூர் பொதுநலகமிட்டியின் சார்பாக இப்பள்ளி உருவாக முக்கிய பங்காற்றிய பெரியவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.புதியப்பள்ளிவாசல் அமைந்துள்ள கீழக்காடு பகுதியை சேர்ந்த  பெரியவர்கள் ராமகிருஷ்ணத்தேவர்,முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கராசு,காளியப்பன்,முத்துவேல் ஜமாத் நிர்வாகிகளுக்கு சிறப்பு செய்தார்கள்.ஜமாத்தார்கள் சார்பாக அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியினை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.மேலும் அர் ரஹ்மான் பள்ளியும் அன்று விடுமுறைவிடப்பட்டது.மதுக்கூரில் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட முதல் பள்ளிவாசல் இதுவாகும்.







முன்னதாக 09/10/2010 இரவு நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உபயத்துல்லா அவர்கள் கலந்து கொண்டார்கள்.







No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...