மஸ்ஜித் இஃக்லாஸ்
மதுக்கூரில் தவ்ஹீத் கொள்கை கொண்ட
சகோரர்களால் மதுக்கூர் பஜனைமடத்தெருவில் நூ.ஆரிபு அவர்கள்
காம்ப்லக்ஸில் மதுக்கூர் இஸ்லாமிய
இயக்கம் என்ற
ஓர் அமைப்பினை ஏற்படுத்தி இஸ்லாமிய நூலகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு
வந்தது.இந்நூலகத்தில் பலர் புத்தகங்களையும்,மார்க்க
அறிஞர்களின் ஆடியோ கேஸட்டுகளையும் எடுத்து
சென்று பயன்பெற்றார்கள்.பின்னர் விரிவடைந்து மதுக்கூர்
இடையக்காட்டில் சகோதரர் முகம்மது பாரூக்
காலணி மாடியில் கீற்று கொட்டகை அமைத்து (சகோதரர் லக்கி அப்துல் காதர் அவர்களின் ஒத்துழைப்புடன்)வெள்ளிக்கிழமை
ஜும் ஆ தொழுகை மட்டும்
நடத்தப்பட்டது.
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 2000 ஆம் ஆண்டு துபாயில்நடைபெற்ற
மதுக்கூர் இஸ்லாமிய இயக்க ஆலோசனைக்கூட்டத்தில் புதிய
பள்ளிவாசல் கட்டவேண்டும் என்ற ஓர் தூய்மையான
நிய்யத் தவ்ஹீத் சகோதரர்களால் வைக்கப்பட்டது.
மதுக்கூர் இஸ்லாமிய இயக்கம் 2003 ஆம் ஆண்டு மதுக்கூர்
தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையாக மதுக்கூர்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
தவ்ஹீத் கொள்கையினை கொண்ட
சகோதரர்களிடம் குறிப்பாக அமீரகத்தில் பணியாற்றிய சகோதரர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை
செய்து மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளைக்கு
சொந்தமான மதுக்கூர் இடையக்காட்டில் இடம் வாங்கப்பட்டது.வாங்கிய
இடத்தில் இறைஇல்லம் கட்ட வேண்டும் என்ற
நிய்யத்துடன் மதுக்கூர் இஸ்லாமிய வீதிகளில் வீடுகளில் பொருளாதார வசூல் செய்யப்பட்டது.சுமார்
2 இலட்சம் உள்ளூர் வசூல் ஆனது.இத்தொகையினைக்கொண்டு அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் செட் அமைத்து ஐவேளை
தொழுகை நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
மதுக்கூர் மக்களிடம் ஏகத்துவ ஈர்ப்பின் காரணமாக
புதியதோர் பள்ளிவாசல் (ஒட்டு கட்டிடம்(சிலப்பு)
கட்டவேண்டும் என்ற எண்ணத்தினை வைத்து
பணிகள் துவங்கப்பட்டது.எண்ணத்தின் அடிப்படையில் செயல்கள் என்பது போன்று உளத்தூய்மையுடன்
அனைவரும் இணைந்து பணியாற்றினார்கள்.அல்லாஹ் வெற்றியை கொடுத்தான்.
06/09/2007 வியாழக்கிழமை மகரிப் தொழுகை நடத்தப்பட்டது.பின்னர் பெண்களுக்கான சிறப்பு
பயான் நிகழ்ச்சியில் சகோதரர் கோவை.ஜாகீர்
உசேன் அவர்கள் கலந்து கொண்டு
இஸ்லாமிய பெண்கள்
அன்றும் இன்றும் என்ற தலைப்பில்
சிறப்பான உரை நிகழ்த்தினர்.மதுக்கூரில்
உள்ள இஸ்லாமிய பெண்கள் ஏராளமானவர்கள் கலந்து
கொண்டு பயன் அடைந்தார்கள். சிறப்பு
செய்தார்கள்.
07/09/2007 வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகை இனிதே
நடைபெற்றது.பின்னர் 12:15 மணிக்கு மதுக்கூர் தவ்ஹீத்
தர்ம அறக்கட்டளையின் தலைவர் S.N.M.முகம்மது யாக்கூப் அவர்கள் ஜும் ஆ
பாங்கினை தனது
உரத்த குரலில் சொன்னார்.தொடர்ந்து
ஜும் ஆ உரையினை சகோதரர்
கோவை.செய்யது அவர்கள் மிகவும்
ஆணித்தரமாக பள்ளிவாசல்களின் சிறப்புகளும்,நிர்வாகிகளின் பண்புகளும் என்ற தலைப்பில் சிறப்பான
உரை நிகழ்த்தினர். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார
இஸ்லாமியர்களும்,தாய்மார்களும் பெரும் திரளாக கலந்து
கொண்டார்கள்.தொழுகைக்கு மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின்
உறுப்பினர் கபார் அவர்கள் பள்ளியினை
வஃக்ப் செய்து வைத்தார்..தொடர்ந்து ஜும் ஆ தொழுகையில்
கலந்து கொண்ட சுமார் 2500 நபர்களுக்கு
மதிய உணவு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment