பட்டா அவசியம்
நமதூரை சார்ந்த குறிப்பாக முஸ்லிம் சகோதரர்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சொத்துக்களை வாங்குகின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அப்படி வாங்கும் சொத்துக்களுக்கு முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவும் செய்கின்றார்கள்.நாம் தான் ரிஜிஸ்டர் செய்துவிட்டோமே இனி அந்த சொத்து நமக்கு தான் என இருந்தால் அது சில நேரங்களின் பொய்யாக போய்விடுகின்றது.நாம் வாங்கும் சொத்துக்களை ரிஜிஸ்டர் செய்ததும் அந்த சொத்திற்கு உண்டான பட்டா வாங்கப்படவேண்டும்.நீங்கள் வாங்கும் சொத்தின் பட்டா மிகவும் அவசியம்.இன்று நமதூரை பொருத்தவரை அதிகமானவர்கள் பட்டா வாங்குவது இல்லை.பட்டா பெருவதற்காக நீண்ட கால அவகாசம் ஆகின்றது நம்மிடம் தான் பத்திரம் இருக்கின்றது என்ன கவலை என இருந்துவிடுகின்றார்கள்.
எச்சரிக்கை தகவல்
பட்டா இல்லாத சொத்துக்களை மோப்பம்விடும் சில கயவர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்து வருவது நமதூரில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.எனவே பட்டா அவசியம் பெறவேண்டும்.அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் உங்களின் பொருளாதாரத்தை அலட்சியத்தின் காரணமாக இழந்துவிடாதீர்கள்.

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
பட்டா யாருடையது பெயரில் உள்ளது என்பதை அறிய...கிழே உள்ள இணையத்தளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment