பட்டா இல்லாத சொத்துக்கள் பட்டையை போடப்படுகின்றது
அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமதூரிலும் நமதூரை சுற்றி உள்ள பகுதிகளிலும் பலரும் சொத்துக்களை வாங்குகின்றார்கள்,விற்கின்றார்கள்.அப்படி வாங்கும் சொத்துக்கள் நம்மிடம் விற்பவருக்கு உரியது தான் என்பதை உறுதி செய்துகொள்ள வில்லங்க சான்று (EC) அந்தந்த பகுதி சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு போட்டு வாங்கவேண்டும்.இல்லையெனில் www.tn.reginet.net இந்த வெப்சைட் முகவரியில் சென்று நீங்கள் வாங்கக்கூடிய அல்லது உங்கள் சொத்து பற்றிய வில்லங்கம் ஏதேனும் இருப்பின் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

நாம் இடம் வாங்குபவராக இருப்பின் வில்லங்கம் சான்று (EC) பார்த்த பின்னர் அதே பெயரில் பட்டாவும் இருக்கின்றதா என்பதை சரிபார்க்கவேண்டும்.இவை அனைத்தும் சரியாக இருப்பின் சொத்துகளை வாங்குங்கள்.இதுபோல் நமது சொத்திற்கு இதுவரை பட்டா வாங்கவில்லை என்றால் உடனடியாக பட்டா பெறுவது காலத்தின் கட்டாயம்.பட்டா பெறுவதற்கு முதலில் நமது பத்திரத்தின் நகலை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு (VAO) எடுத்து சென்று பட்டா பெற வேண்டும் என கூறினால் அதற்கு மேல் என்னென்ன ஆவனங்கள் வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள்.எனவே சொத்திற்கு பட்டா மிகவும் அவசியம். அலட்சியம் வேண்டாம்.
No comments:
Post a Comment