மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் புதியப்பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி) பெரும் பொருளாதார உதவி செய்தவரும்.பள்ளியினை திறந்துவைத்தவருமான ராசல் கைமா அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் அவர்களின் புதல்வருமான ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக கடந்த முன்று தினங்களுக்கு முன்னர் இந்தியா (மதுக்கூர் )வந்தனர்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று கடந்த 22/02/2013 அன்று திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் போய் சேர்ந்தனர்.துபாய் விமான நிலையத்தில் சகோதரர்கள் S.N.A.முகம்மது புகாரி,A.M.இமாமுதீன் ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் சகோதரர்கள்.நன்றியுடன் வரவேற்றார்கள்.
No comments:
Post a Comment