மாவட்ட ஆட்சியருக்கு தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு
மதுக்கூரில் முக்கூட்டுச்சாலையில் இயங்கிவரும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக உள்ள அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 28/05/2012 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உணர்ந்த மதுக்கூர் நகர தமுமுக & மமக சார்பாக 22/09/2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் மதுக்கடை முற்றுகைப்போராட்டம் என அறிவித்து இருந்தோம்.போராட்டத்தின் வீரிய களத்தினை அறிந்த அரசுத்துறை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்,பட்டுக்கோட்டை தாசில்தார்,பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் 3 மாத காலக்கொடுவில் மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார்கள்.மூன்று மாத காலம் நிறைவுபெற்றதை நினைவுப்படுத்தும் வண்ணம் கடந்த மாதம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு நினைவூட்டல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியருக்கும் நினைவூட்டல் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டு, இன்று 11/02/2013 காலை 11:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசுமதுபானக்கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய போது இன்னும் ஒருமாதத்தில் இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment