ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுகின்றது.
மதுக்கூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த திமுக ஆட்சியில் தரம் உயர்த்துவதற்காக (கூடுதல் கட்டிடம்) நிதி ஒதுக்கப்பட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என இத்திட்டம் செயல்படுத்துவதற்க்கு காலதாமதம் செய்யப்பட்டது.இதை உணர்ந்த மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் கடந்த 28/05/2012 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இப்பணி சம்மந்தமாக தகவல் தமுமுக சார்பாகமாவட்ட சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது.மேலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்தும் இதை வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நிதி பற்றாக்குறைதான் காரணம் என கூறினார்கள்.போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து நடைபெறும எனவும் கூறினார்கள்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் போதும் இத்திட்டம் விரைந்து கொண்டுவர என்னால் ஆன முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மமக பேரூராட்சி உறுப்பினர் சகோதரர் எம்.கபார் அவர்களாலும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.ஆதலால் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக சகோதரர் கபார் அவர்களால் கடந்த 22/01/2013 அன்று ஆரம்ப சுகாதார நிலையம் சம்மந்தமாக CM Cellக்குகோரிக்கை மனு அனுப்பப்பட்டது.இக்கோரிக்கை மனு அளிக்கப்பட்ட இருபது தினங்களில் கடந்த 09/02/2013 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு முப்பது படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்க்காக மார்க் செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்ற முயற்சியில் பலரும் முனைப்புடன் செயல்பட்டார்கள்.அனைவரின் நோக்கமும் மதுக்கூர் அரசு சுகாதார நிலையம் தரம் உயர்ந்தப்படவேண்டும் என்பதே.எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment