இடைவிடாது நடைபெறும் இறை இல்ல பணிகள்
மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் மஸ்ஜிநுன் ஹாரப் அல்நயீமி வருகின்ற 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் நிகழ்ச்சியுடன் அடுத்த நாள் 21/02/2013 லுஹர் தொழுகைக்கு வக்ப் செய்யப்பட இருக்கும் பள்ளிவாசலில் இறுதிகட்ட கட்டிட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக இரவு பகல் பாரமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வர்ணம் பூசும் பணி,மார்பிள்ஸ் போடும் பணி,மினார கட்டும் பணி உளூ செய்யும் இடம்,கழிவறை கட்டும்பணி என பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இறை இல்ல கட்டிட பணியினை ஒருங்கிணைந்து வரும் சகோதரர் லக்கி அப்துல் காதர் அவர்கள் திறம்பட பணியாளர்களை தட்டிக்கொடுத்து பணிகளை வாங்கி வருகின்றார்.
கட்டிட பணிகளை அவ்வபோது மதுக்கூர் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும்,அமீரக நிர்வாகிகளும் பார்வையிட்டு வருகின்றார்கள்.
No comments:
Post a Comment