இறுதி கட்ட பணிகளில் இறைஇல்லம்
மதுக்கூரில் விழாக்கோலம்
மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் இறைவனின் மாபெரும் கிருபையால் முடிவு பெற்றுவிட்டது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் பயானுடன் தொடங்குகின்றது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ஒருவழிப்பாதை தற்காலிகமாக மாற்றிவிடப்பட்டுள்ளது.பிரமாண்ட மான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.திறப்புவிழா பற்றிய நோட்டீஸ் வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.சகோதரர்களின் விளம்பர பிளக்ஸ்போர்டுகள் சூரியத்தோட்டதில் குடிகொண்டுள்ளது.
இப்பள்ளிக்கு பெரும் நிதி உதவி செய்தவரும்,பள்ளிவாசல் திறப்பாளருமான ராசல்கைமாயை சார்ந்த அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி மற்றும் அவரது மகனார் ராஷித் ஹாரப் அல் நயீமி ஆகியோர் நேற்று துபாயிருந்து திருச்சிவந்தனர்.இன்று மாலை மதுக்கூருக்கு வருகைதந்து மஸ்ஜித் தை பார்வைவிட்டார்.
சிலருக்கு நோட்டிஸில் எனது பெயர் இல்லை,எனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என இதுபோன்ற சில மனகசப்புகள் உள்ளது.மேலும் சிலருக்கு வீதிகள் சம்மந்தமான சங்கடங்களும்,மேலும் சிலருக்கு எங்களை அழைக்கவில்லை என்ற மனவருத்தமும் இருப்பதாக அறியமுடிகின்றது.இது அல்லாஹ்வின் ஆலயம் யாரும் யாரிடமும் மனகசப்பின்றி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற துவா செய்வோம்.
இந்த இனிமையான வேலையில் அரபியர் ஹாரப் சலாம் அல் நயீமி அவர்களின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து மதுக்கூருக்கு இப்பள்ளிவர முன்முயற்சி எடுத்த சகோதரர் எஸ்.என்.எஸ்.நைனா முகம்மது (ராவுத்தர்ஷா) அவர்களுக்கும்,இந்த இடத்தில் இடம் அளித்த மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தினரு க்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகள்.
இப்பள்ளிவாசல் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பிறகு அப்பள்ளியின் முஅத்தீன் தினந்தோறும் ஐவேளையும் ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்),ஹய்ய அலல் ஃபலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்,என அழைப்புவிடுவார்.அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வக்த் தொழுகையிலும் போய் கலந்து கொண்டு வரிசைகளால் (ஷப்)அப்பள்ளியினை அலங்கரிப்போம்.இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment